மலாடு
Jump to navigation
Jump to search
மலாடு என்பது வடக்கு மும்பையின் மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதி ஆகும். இங்கு மலாடு கடற்கழி அமைந்துள்ளது. மும்பை புறநகர் ரயில் அமைப்பின் மேற்கு வழித்தடத்தில் மலாடு ஒரு ரயில் நிலையத்தை கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையம் வடக்கிலுள்ள கான்டிவலி ரயில் நிலையம் மற்றும் தெற்கிலுள்ள கோரேகோன் ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதை மலாடு பகுதியை மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டாக பிரிக்கிறது.
மக்கள் தொகை[தொகு]
மலாடு பகுதி சுமார் 15,61,938 பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ளது. மேலும் பகல் நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் அதிகப்படியாக மலாடு பகுதிக்கு வருகின்றனர்.