மும்பையின் ஏழு தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Seven Islands of Bombay en.svg
IslandsofBombay1893.jpg

மும்பையின் ஏழு தீவுகள் இது இந்தியாவின், மும்பை தீவுக்கூட்டத்தை குறிப்பதாகும். அவை

  1. மாகிம்
  2. வோர்லி
  3. பரள்
  4. மசாகன்
  5. மும்பை
  6. கொலாபா
  7. கிழவித் தீவு (சின்ன கொலாபா)

மும்பை வரலாறு[தொகு]

கிமு மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசு பம்பாயின் ஏழு தீவுகளை இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. பின்னர், போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர் அந்த தீவுகள் வெற்றிபெற்ற உள்நாட்டு பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்நகரம் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில், இது ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது.

19ஆம் நூற்றாண்டின் போது பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி நிலைகள் இந்நகரை பெருமைப்படுத்தின . 20ஆம் நூற்றாண்டின் போது, இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வலிமையான தளமாக இது விளங்கியது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1996ல், பம்பாய் மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]