நள சோப்ரா
நளசோப்ரா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சோப்ரா | |
ஆள்கூறுகள்: 19°24′55″N 72°51′41″E / 19.4154°N 72.8613°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | பால்கர் |
நகரம் | வசாய்-விரார் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | வசாய்-விரார் மாநகராட்சி [1] |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4.6 lakh |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 401 209(கிழக்கிற்கு)
401 203(for west) |
தொலைபேசி குறியீடு | 0250 |
வாகனப் பதிவு | MH48 |
சட்டமன்றத் தொகுதி | நளசோப்ரா |
நள சோப்ரா (Nala sopara), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய்-விரார் மாநகராட்சியின் பகுதியாக தற்போது உள்ளது. பண்டைய இந்தியாவை ஆண்ட சாதவாகனர் ஆட்சியில் இந்நகரம் முக்கிய நிர்வாக மையமாகவும், பௌத்த சமயத்தின் புகழிடமாகவும் திகழ்ந்தது. நளசோப்ராவில் அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது.
சோப்ரா தொல்லியல் களம்
[தொகு]கல்வெட்டுயியல் மற்றும் தொல்லியல் அறிஞருமான பகவால்லால் இந்திரஜித் என்பவர் நள சோப்ரா அருகில் உள்ள மெர்தெஸ் எனும் கிராமத்தின் தொல்லியல் களத்தை 1982-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்த போது, சிதிலமடைந்த பௌத்த தூபியின் அருகில், கிபி 8-9வது நூற்றாண்டு காலத்திய பெரிய அளவிலான வெண்கலப் பேழையில் 8 மைத்திரேயர் செப்புச் சிலைகளையும், தங்கப் பூக்களையும், பிட்சைப் பாத்திரங்களையும் மற்றும் சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்ர சதகர்ணியின் நாணயத்தையும் கண்டுபிடித்தார்.
நளசோப்ரா தொல்லியல் களத்தை இந்தியத்தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வாளர் எம். எம். குரேஷி 1939-1940களில் அகழாய்வு செய்த போது,இரண்டு சிறிய தூபிகளை கண்டெடுத்தார்.[2]1956-ஆம் ஆண்டில் மீண்டும் அகழாய்வு செய்த போது 11-வது நூற்றாண்டின் அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டு துண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.[3]1993-இல் அகழாய்வு செய்த போது, வட்ட வடிவக் கிணறும், பண்டைய ரோமானியர்களின் மெருகூட்டப்பட்ட காவி நிறக் குடுவைகளும், கண்ணாடித் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டு
[தொகு]ஏ. எல். பசாம் என்பவர் நள சோப்ராவின் அசோகரின் எட்டாவது பெரும் பாறைக் கல்வெட்டின் குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுத்துபெயர்ப்பு செய்தார்.[4]இக்கல்வெட்டில் பேரரசர் அசோகர், புத்தர் அருளிய மக்கள் அறவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் செய்யவேண்டிய அறச்செயல்கள் குறித்துள்ளார். அசோகர் தம்மை தேவனாம் பிரியதர்சி ("Devanampiya") (Beloved of The Gods) என்றும் பிரியதசி ("Piyadassi" ) (The handsome one) என்றும் குறித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vasai-Virar City Municipal Corporation]
- ↑ Onshore and Nearshore Explorations along the Maharashtra Coast: with a View to Locating Ancient Ports and Submerged Sites.
- ↑ Ghosh, A. (ed.) (1993) [1956]. "Indian Archaeology 1955-56 - A Review" (PDF). Archaeological Survey of India. p. 29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ Aśoka and the Decline of the Mauryas (Third Edition);Oxford University Press;Pg.380-381