சரு மரு
சரு மரு | |
---|---|
சரு மருவினி சிதைந்த தூபி | |
ஆயத்தொலைகள் | 22°43′48″N 77°31′12″E / 22.729949°N 77.519910°E |
வகை | தூபிகள், அசோகரின் கல்வெட்டு, குடைவரைகள் |
சரு மரு (Saru Maru) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள பான்கோராரியா எனும் கிராமத்தில் உள்ள மலையில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். இம்மலையில் அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டும், சிதிலமடைந்த தூபிகளும், பிக்குகள் தங்கும் குடைவரைகளும் கொண்டுள்ளது.[1][2]இத்தொல்லியல் களம் சாஞ்சி]]க்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பௌத்த தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுப்பயணத்தின் போது பேரரசர் அசோகர் இவ்விடத்திற்கு வருகை தந்தார். எனவே அசோகர் இவ்விடத்தில் நிறுவிய சிறு பாறைக் கல்வெட்டில் தனது சிறப்புப் பெயர்களான பியாதாசி (Piyadasi) (பிரியதர்சி) என்றும் ராஜகுமாரன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சரு மரு பாறைக் கல்வெட்டின் உள்ளடக்கம்
[தொகு]பியதாசி நம/ ராஜகுமல வா/ ஸம்வசமனே/ இமாம் தேசம் பபுனித/ விஹார(ய)தாய்(இ)
"(இப்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு) "பியாதாசி" என்று அழைக்கப்படும் இளவரசர் (அசோகர்) , (ஒருமுறை) திருமணமாகாத தனது மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, இந்த இடத்திற்கு உல்லாசப் பயணமாக வந்தார்."
கல்வெட்டுக்குறிப்புகளின் படி, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆளுநராக இருந்த இள்வரசர் அசோகர், இவ்விடத்தில் இருந்த பௌத்த விகாரைக்கு, அசோகர் ஒரு பெண்ணுடன் வருகை புரிந்தார் என அறிய முடிகிறது.[1]
அசோகர் சிரு மருவுக்கு வருகையின் நினைவு கல்வெட்டின் முழுமை
[தொகு]மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) |
எழுத்துப்பெயர்ப்பு | கல்வெட்டின் நகல் (பிராமி எழுத்தில்) |
கல்வெட்டு (பிராகிருத மொழி) |
---|---|---|---|
|
|
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Gupta, The Origins of Indian Art, p.196
- ↑ Archaeological Survey of India
- ↑ Allen, Charles (2012). Ashoka: The Search for India's Lost Emperor (in ஆங்கிலம்). Little, Brown Book Group. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4087-0388-5.
- ↑ Falk, Harry. The Preamble at Panguraria (in ஆங்கிலம்). p. 119.
- ↑ Sircar, D. C. (1979). Asokan studies. Plate XVI.
- ↑ Allen, Charles (2012). Ashoka: The Search for India's Lost Emperor (in ஆங்கிலம்). Little, Brown Book Group. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408703885.
வெளி இணைப்புகள்
[தொகு]வார்ப்புரு:அருகமைந்த பௌத்த தலங்கள்