சாசாராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாசாராம்
सासाराम
நகரம்
சாசாராம் நகரம்
நாடு  இந்தியா
மாநிலம் பிகார்
மாவட்டம் ரோத்தாஸ் மாவட்டம்
கோட்டம் பாட்னா கோட்டம்
நகராட்சி உறுப்பினர்கள் 40
அரசு
 • வகை நகராட்சி
 • Body சாசாராம் நகராட்சி
ஏற்றம் 110
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம் 147
 • தரவரிசை 180வது இடம்[
இனங்கள் Sasaramite
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் 821115
தொலைபேசி குறியீடு எண் 91-6184
வாகனப் பதிவு BR 24
தொடருந்து நிலையம் சாசாராம் தொடருந்து நிலையம்
இணையதளம் rohtas.bih.nic.in

சாசாராம் (Sasaram) (இந்தி: सासाराम, உருது: سسرام), இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தின் ரோத்தாஸ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். சாசாராம், பஷ்தூன் தில்லி மாமன்னர் சேர் சா சூரி மறைந்த இடமாகும்.

வரலாறு[தொகு]

சசாராமில் பிறந்த ஆப்கானிய பஷ்தூனியரான சேர் சா சூரி, முகலாயர்களிடமிருந்து தில்லியை கைப்பற்றி வட இந்தியாவை ஆண்டவர். சிக்கலற்ற நிலவரி, நில நிர்வாகம், நீர்பாசானம், சாலை அமைத்தல் போன்றவைகளில் இவரது சீர்திருத்தங்களை, பின்னால் ஆட்சிக்கு வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் கடைப்பிடித்தனர்.

சசாராம் நகரத்தில் செயற்கையாக அமைந்த ஏரியின் நடுவில், இந்தோ ஆப்கானிய கட்டிடக்கலையில் 122 அடி உயரம் கொண்ட ஒரு சிவப்பு கல்லால் ஆன குவி மாடத்தை நிறுவினார். [2]

ரோத்தஸ்காட் கோட்டை

இராஜ அரிச்சந்திரன், தன் மகன் லோகிதாசன் பெயரில் கி மு 7ஆம் நூற்றாண்டில், சசாராம் நகரத்தில் கட்டிய ரோட்டஸ்காட் கோட்டை உள்ளது.

தட்பவெப்பம்[தொகு]

கோடைக் காலத்தில் பாட்னா, கயை போன்று சசாராம் மிக அதிக வெப்பம் கொண்டது.

போக்குவரத்து[தொகு]

சாலைகள்[தொகு]

சேர் சா சூரி அமைத்த பெரும் தலைநெடுஞ்சாலை சசாராம் வழியாக செல்வதால், வட இந்தியா முழுவதையும் சாலை வழியாக பயணிக்கலாம்.

தொடருந்து[தொகு]

சசாராம் தொடருந்து நிலையம், பாட்னா, கொல்கத்தா, வாரணாசி, மும்பை, கான்பூர், லக்னோ, மற்றும் தில்லி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மக்கள் தொகையியல்[தொகு]

2011ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சசாராமின் மக்கள் தொகை 147,408 ஆகவும், அதில் ஆண்கள் 52% ஆகவும்; பெண்கள் 48% ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 80.26%ஆகவும், ஆண்கள் எழுத்தறிவு 85%ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 75%ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 13% ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர்.[5] சாசாராமில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர், பௌத்தர்கள் மற்றும் சமண சமய மக்கள் கலந்து வாழ்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

கங்கை ஆறு பாய்வதால் சசாராம் வேளாண் விளை பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சிவப்பு வண்ண மணற்கல் சுரங்கங்களிலிருந்து, கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கற்கள் தோண்டி எடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசாராம்&oldid=2439611" இருந்து மீள்விக்கப்பட்டது