நவாதா
நவாதா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°53′N 85°32′E / 24.88°N 85.53°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | மகதம் |
மாவட்டம் | நவாதா |
வார்டுகள் | 33 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நவாதா நகராட்சி |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 98,029 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 805110,805111 |
தொலைபேசி குறியீடு எண் | 06324 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-27 |
இணையதளம் | nawada |
நவாதா (Nawada), வட இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தின் தெற்கில் உள்ள நவாதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இந்நகரத்தில் கூரி ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கே 108 கிலோ மீட்டர் தொலைவிலும்; கயைக்கு கிழக்கே 59.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 33 வார்டுகளும், 15,399 வீடுகளும் கொண்ட நவாதா நகரத்தின் மக்கள் தொகை 98,029 ஆகும். அதில் ஆண்கள் 51,367 மற்றும் பெண்கள் 46,662 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,225 மற்றும் 67 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.21%, இசுலாமியர் 31.08% மற்றும் பிறர் 0.61% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[3]
சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 31 நவாதா நகரம் வழியாகச் செல்கிறது.
- கயை வானூர்தி நிலையம் - 69 கிலோ மீட்டர
- செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம், பாட்னா - 123 கி மீ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "View Population". Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "Nawada district is one of the th". nawada.bih.nic.in. Archived from the original on 2015-12-22.
- ↑ Nawada Population, Religion, Caste, Working Data Nawada, Bihar - Census 2011