சப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சப்ரா
छपरा
Chapra
மாநகராட்சி
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்சாரண்
பரப்பளவு
 • நகர்ப்புறம்38.26 km2 (14.77 sq mi)
ஏற்றம்36 m (118 ft)
மக்கள்தொகை (2011)
 • மாநகராட்சி2,01,598
 • நகர்ப்புறம்2,49,556
இனங்கள்சாராவிகள்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்போஜ்புரி, இந்தி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்841301, 841302 (Sarha)
Telephone code+916152
மக்களவை தொகுதிசாரண் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிசப்ரா சட்டமன்றத் தொகுதி
இணையதளம்saran.bih.nic.in & chhapra.co.in

சப்ரா (Chhapra or Chapra) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும்; மாநகராட்சி மன்றமும் ஆகும். சப்ரா நகரம் காக்ரா ஆறும், கங்கை ஆறும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

கி பி 18-ஆம் நூற்றாண்டில் சப்ரா நகரம் டச்சுக்காரர்களின் வணிக சந்தையாக விளங்கியது. [1][2] இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த பிரஞ்சுச்காரர்கள், போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர்கள் சப்ரா நகரத்தில் வெடியுப்பு எனப்படும் பொட்டாசியம் நைத்திரேட்டு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் நிறுவினர். 1864-ஆம் ஆண்டு முதல் சப்ரா நகரம் ஒரு நகராட்சி மன்றமாக செயல்பட்டது. சப்ரா நகர்ம் இருப்புப்பாதையாலும் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளாலும், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புவியியல்[தொகு]

இராஜேந்திர ஏரி


சப்ரா நகரம் கடல் மட்டத்திலிருந்து 36 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வடக்கு பிகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ள சப்ரா நகரத்தின் தெற்கு எல்லையாக கங்கை ஆறு உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சப்ரா நகத்தின் மொத்த மக்கள் தொகை 202,352 ஆக உள்ளது. மக்கள் தொகையில் 106,501 ஆண்களும் மற்றும் 95,851 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். இந்நகரத்தின் சராசரி படிப்பறிவு 78.47 %% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.16 %% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.14 %% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 29,100 ஆக உள்ளது. [3]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 164,811 (81.45 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 36,639 (18.11 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்[தொகு]

பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளும் இந்நகரத்தில் பேசப்படுகிறது.

கல்வி[தொகு]

  • ஜெய்பிரகாஷ் பல்கலைக்கழகம்
  • லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயணன் தொழில் நுட்ப நிறுவனம், சாரண்[4]
  • ஜெகதம் கல்லூரி
  • இராஜேந்திரா கல்லூரி

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சப்ரா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.1
(73.6)
25.8
(78.4)
31.0
(87.8)
35.1
(95.2)
35.0
(95)
34.9
(94.8)
32.5
(90.5)
32.8
(91)
32.5
(90.5)
31.6
(88.9)
29.0
(84.2)
24.8
(76.6)
30.68
(87.22)
தாழ் சராசரி °C (°F) 9.2
(48.6)
11.0
(51.8)
15.1
(59.2)
19.1
(66.4)
21.2
(70.2)
22.9
(73.2)
23.8
(74.8)
24.2
(75.6)
23.8
(74.8)
21.2
(70.2)
15.8
(60.4)
10.6
(51.1)
18.16
(64.69)
பொழிவு mm (inches) 13.0
(0.512)
14.0
(0.551)
9.0
(0.354)
29.0
(1.142)
76.0
(2.992)
139.0
(5.472)
353.0
(13.898)
254.0
(10)
193.0
(7.598)
73.0
(2.874)
6.0
(0.236)
7.0
(0.276)
1,166
(45.906)
ஆதாரம்: Accuweather[5]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்ரா&oldid=3243032" இருந்து மீள்விக்கப்பட்டது