நாலந்தா மாவட்டம்
நாலந்தா மாவட்டம் नालंदा जिला,ضلع نالندہ | |
---|---|
![]() நாலந்தாமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பாட்னா |
தலைமையகம் | பிகார் செரீப் |
பரப்பு | 2,367 km2 (914 sq mi) |
மக்கட்தொகை | 2,872,523 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,214/km2 (3,140/sq mi) |
படிப்பறிவு | 66.41% (ஆண்=77.11%; பெண்=54.76%) |
பாலின விகிதம் | 921 (2011) |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | நாலந்தா மக்களவைத் தொகுதி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 4 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
நாலந்தா மாவட்டம் (Nalanda district) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் முப்பத்தி எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிடம் பிகார் செரீப் நகரத்தில் இயங்குகிறது. இம்மாவட்டம் பாட்னா கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் பௌத்தர்களின் ராச்கிர் மலை உள்ளது.
மாவட்டச் சிறப்புகள்[தொகு]
- இம்மாவட்டத்தின் ராஜகிரகம் நகரத்துடன் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் அதிகம் தொடர்பு கொண்டவர்கள்.
- பண்டைய நாலந்தா பல்கலைக்கழகம் இம்மாவட்டத்தில் அமைந்திருந்தது.
- பண்டைய மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகம் இம்மாவட்டத்தில் உள்ளது.
- நாளந்தா தொல்லியல் அருங்காட்சியகம் இம்மாவட்டத்தில் உள்ளது.
- பௌத்தர்கள் புனிதமாகக் கருதப்படும் ராச்கிர் மலை உள்ளது.
புவியியல்[தொகு]
பிகார் மாநிலத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டம் 2355 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பாலகு, கும்பாரி, மோகனா மற்றும் ஜிராயன் ஆறுகள் பாய்கிறது.
மக்கள் தொகையியல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 2,872,523 ஆக உள்ளது.[1] 2355 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி 1,220 inhabitants per square kilometre (3,200/sq mi) ஆக உள்ளது.[1] மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) 21.18 % ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 921 வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.41 % ஆக உள்ளது.[1]
சமயம்[தொகு]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர் மற்றும் மக்கள் தொகை இசுலாமிய சமய மக்கள் தொகை கூடுதலாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் மிகக்குறைவாகவும் உள்ளது.
மொழிகள்[தொகு]
பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
பொருளாதாரம்[தொகு]
பீரங்கி குண்டுகள் தயாரிக்கும் இந்திய அரசின் இராணுவ தளவாட தொழிற்சாலை நாலந்தாவில் அமைந்துள்ளது.[2][3] இந்தியாவில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக, நாலந்தா மாவட்டத்தை 2006-இல் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.[4]
மாவட்ட நிர்வாகம்[தொகு]
இம்மாவட்டம் பிகார் செரீப், ராஜகிரகம் மற்றும் ஹில்சா என மூன்று வருவாய் உட்கோட்டங்களைக் கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்காக இம்மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் இயங்குகிறது.
அரசியல்[தொகு]
இம்மாவட்டம் பிஹார்சரீப் சட்டமன்றத் தொகுதி , ராஜ்கீர் சட்டமன்றத் தொகுதி, நாலந்தா சட்டமன்ற தொகுதிகளையும்; நாலந்தா மக்களவைத் தொகுதியும் கொண்டது.
போக்குவரத்து[தொகு]
இம்மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 30, 31, 82 மற்றும் 110 என நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாவட்டத்தின் வழியாக செல்வதால், மாநிலத்தின் மற்றும் அருகில் அமைந்த மாநிலங்களுடன் தரை வழியாக நன்கு இணைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130511083119/http://articles.timesofindia.indiatimes.com/2006-01-16/india/27829660_1_ordnance-factory-denel-nitish-kumar.
- ↑ http://www.thehindubusinessline.com/government-and-policy/ofb-nalanda-to-develop-indigenous-artillery-shells/article3342557.ece
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011.
வெளி இணைப்புகள்[தொகு]
- நாலந்தா மாவட்ட இணையதளம்
- Nalanda Information Portal பரணிடப்பட்டது 2011-04-30 at the வந்தவழி இயந்திரம்