ஜமூய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜமுய் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜமூய் மாவட்டம்
जमुई जिला,ضلع جموئ
Bihar district location map Jamui.svg
ஜமூய்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர்
தலைமையகம்ஜமூய்
பரப்பு3,098 km2 (1,196 sq mi)
மக்கட்தொகை1,760,405 (2011)
மக்கள்தொகை அடர்த்தி568/km2 (1,470/sq mi)
படிப்பறிவு59.79%
பாலின விகிதம்921
வட்டங்கள்1
மக்களவைத்தொகுதிகள்1 Jamui
சராசரி ஆண்டு மழைபொழிவு1102 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜமூய் மாவட்டம் (Jamui district) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜமூய் நகரம் ஆகும். இது முங்கேர் கோட்டத்தில் பிகார் - ஜார்கண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சமண சமய 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் இம்மாவட்டத்தில் பாயும் உஜ்ஜிஹுவாலியா ஆற்றாங்கரையில் உள்ள ஜம்பியா கிராமத்தில் அறிவொளி பெற்றார் என சமண சமய சாத்திரங்கள் கூறுகிறது. எனவே இவ்விடம் சமணர்களின் புனித தலமாக விளங்குகிறது.

13ஆம் நூற்றாண்டின் வரலாற்றுக் காலத்தில் இம்மாவட்டம் சந்தேல நாட்டின் தலைமையகமாக இருந்தது.

இந்தியாவில் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டு போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த சிவப்பு தாழ்வாரம் பகுதிகள் எனப்படும் 83 மாவட்டங்களில் ஜமூய் மாவட்டமும் ஒன்றாகும்.[1]

பொருளாதாரம்[தொகு]

3098 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் Jamui district மைக்கா, நிலக்கரி, இரும்பு கனிமச் சுரங்கங்கள் கனிசமாக கொண்ட மாவட்டமாக இருப்பினும், இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக ஜமூய் மாவட்ட்த்தை, இந்திய அரசு 2006-இல் அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது.[2]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் ஒரு வருவாய் உட்கோட்டத்தையும்; பத்து ஊராட்சி ஒன்றியங்களையும் [3]; 12 காவல் நிலையங்களையும்; 153 ஊராட்சி மன்றங்களையும்; 1528 கிராமங்களையும் கொண்டுள்ளது.[4]

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,760,405 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 91.74% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 8.26% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.85% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 916,064 ஆண்களும் மற்றும் 844,341 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 922 பெண்கள் வீதம் உள்ளனர். 3,098 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 568 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.79% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.24% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 47.28% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 324,513 ஆக உள்ளது. [5]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,525,746 (86.67 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 217,621 (12.36 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்[தொகு]

பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

முகல்சராய் மற்றும் பாட்னா வழியாக தில்லி - ஹவுரா நகரங்களை இணைக்கும், ஜமூய் தொடருந்து நிலையம் வட இந்தியாவின் முக்கிய நகரங்களை இருப்புப்பாதையால் இணைக்கிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "83 districts under the Security Related Expenditure Scheme". IntelliBriefs (2009-12-11). பார்த்த நாள் 2011-09-17.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 5, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 27, 2011.
  3. "Information". Jamui District Administration. மூல முகவரியிலிருந்து 11 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 June 2015.
  4. "Profile". Jamui District Administration. மூல முகவரியிலிருந்து 11 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 June 2015.
  5. Jamui District : Census 2011 data
  6. Jamui Railway Station

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°55′12″N 86°13′12″E / 24.9200°N 86.2200°E / 24.9200; 86.2200

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமூய்_மாவட்டம்&oldid=3295487" இருந்து மீள்விக்கப்பட்டது