அவுரங்காபாத், பீகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவுரங்காபாத்
நகரம்
அவுரங்காபாத் is located in பீகார்
அவுரங்காபாத்
அவுரங்காபாத்
பீகாரில் அவுரங்காபாத்தின் அமைவிடம்
அவுரங்காபாத் is located in இந்தியா
அவுரங்காபாத்
அவுரங்காபாத்
அவுரங்காபாத் (இந்தியா)
அவுரங்காபாத் is located in ஆசியா
அவுரங்காபாத்
அவுரங்காபாத்
அவுரங்காபாத் (ஆசியா)
ஆள்கூறுகள்: 24°42′N 84°21′E / 24.70°N 84.35°E / 24.70; 84.35ஆள்கூறுகள்: 24°42′N 84°21′E / 24.70°N 84.35°E / 24.70; 84.35
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்அவுரங்காபாத்
பரப்பளவு
 • மொத்தம்1,419.7 km2 (548.1 sq mi)
ஏற்றம்108 m (354 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்102,244
 • அடர்த்தி72/km2 (190/sq mi)
இனங்கள்அவுரங்காபாத்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்824101
தொலைப்பேசி இணைப்பு எண்06186
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-பிஆர்
வாகனப் பதிவுபிஆர்-26
பாலின விகிதம்1000:910 /
இணையதளம்aurangabad.bih.nic.in

அவுரங்காபாத் (Aurangabad) About this soundpronunciation  இந்தியாவின் பீகாரின், அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது மாவட்ட நிர்வாக மையமாகவும் உள்ளது. மேலும், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி 102,244 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்த பிராந்திய மக்கள் மாகஹி மற்றும் இந்தி மொழிகளைப் பேசுகிறார்கள்.

வரலாறு[தொகு]

சூரியவண்ஷி பரம்பரையின் ராஜபுத்திர மக்கள் அதிக அளவில் இருப்பதால் அவுரங்காபாத் சில நேரங்களில் " பீகாரின் சித்தோர்கர் என்றும் அழைக்கப்படுகிறது. 1952 இல் நடந்த முதல் இந்திய பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அவுரங்காபாத் இதுவரை ராஜ்புத்திர பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது. [2]

பண்டைய காலங்களில், மகத நாடு மகாஜனபத இராச்சியத்தில் (கிமு 1200 - 322) அமைந்திருந்தது. இந்த நகரத்தின் பண்டைய ஆட்சியாளர்களில் பிம்பிசாரன் (கிமு 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி), அஜதாசத்ரு (கிமு 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி), சந்திரகுப்த மௌரியர் (கிமு 321 - 298) மற்றும் அசோகர் (கிமு 268 - 232) ஆகியோர் அடங்குவர்.

சேர் சா சூரியின் (பொ.ச. 1486 - 1545) ஆட்சியின் போது, அவுரங்காபாத் ரோக்தாஸ் சிர்கரின் (மாவட்டம்) ஒரு பகுதியாக மூலோபாய முக்கியத்துவம் பெற்றிருந்தது. சேர் சா சூரியின் மரணத்திற்குப் பிறகு, அவுரங்காபாத் அக்பரின் ஆட்சியின் கீழ் வந்தது. இப்பகுதியில் ஆப்கானித்தான் எழுச்சி தோடர் மாலால் அடக்கப்பட்டது. மேலும், ஆப்கானிய கட்டிடக்கலையின் சில கூறுகளும் காணப்படுகின்றன.

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், நகரம் ஜமீந்தார்களால் ஆட்சி செய்யப்பட்டது ( தியோ ராஜ், குட்டும்பா, மாலி, பவாய், சந்திரகர், மற்றும் சிரிஸ் உள்ளிட்ட பணக்கார நில உரிமையாளர்கள்).

1865 ஆம் ஆண்டில், பீகார் மாவட்டம் பாட்னா மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பின்னர், இது பீகார் மாவட்டத்தின் துணைப்பிரிவாக மாற்றப்பட்டது. அவுரங்காபாத் துணைப்பிரிவின் முதல் துணைப்பிரிவு அதிகாரியாக ஸ்டெமென்ட் என்ற ஆங்கிலேயர் இருந்தார். மாவட்டத்திலிருந்து முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பீகார் முன்னாள் முதலமைச்சர் சத்யேந்திர நாராயண் சிங் என்பவராவார். [3]

சனவரி 26, 1973 இல், அவுரங்காபாத் மாவட்டம் உருவாக்கப்பட்டது (அரசாங்க அறிவிப்பு எண் 07 / 11-2071-72 தேதி..19 சனவரி 1973). கே. ஏ.எச் சுப்பிரமண்யம் முதல் மாவட்ட ஆட்சியாளாரகவும், சுர்ஜித் குமார் சஹா துணைப்பிரிவு அதிகாரியாக இருந்தனர்.

பொருளாதாரம்[தொகு]

அவுரங்காபாத்தில் விவசாயம் முக்கியப் பொருளாதாரமாக உள்ளது. மேலும், நகரம் இது வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதியில் அமைந்துள்ளது. அரிசி, கோதுமை, கிராம் துவரம்பருப்பு, கேழ்வரகு போன்றவைகள் முக்கிய பயிர்களாக இருக்கின்றன. விரைவான தொழில்மயமாக்கல் மூலம், அவுரங்காபாத் நிதி ஆயோக்கால் மிகவும் மேம்பட்ட மாவட்டங்களில் 4 வது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முக்கியமாக 4380 மெகாவாட் (660 மெகாவாட்எக்ஸ் 6) திறன் கொண்ட நபிநகர் சூப்பர் வெப்ப மின் நிலையம் போன்ற கனரக மின்சார உற்பத்தித் தொழில்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகும். 6 செப்டம்பர் 2019 அன்று, மின் உற்பத்தி நிலையம் முதல் 660 மெகாவாட் அலகு 4380 மெகாவாட் மின்சாரம் வழங்கியது. ( தேசிய அனல் மின் நிறுவனம், நபிநகர்) மற்றும் சிமென்ட் உற்பத்தி (சிறீ சிமென்ட் ). தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளில் தரைவிரிப்புகள், போர்வைகள் மற்றும் பித்தளை பொருட்கள் அடங்கும். நகரம் ஸ்ட்ராபெரி சாகுபடிக்கும் பிரபலமானது. இது உள்ளூர் விவசாயிகளுக்கு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறது. மேலும், கிராமவாசிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. [4] [5]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவுரங்காபாத்தின் மக்கள் தொகை 102,244 ஆகும்

போக்குவரத்து[தொகு]

சாலை மற்றும் இருப்புப்பாதை மூலம் அவுரங்காபாத் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையமான அனுக்ரா நாராயண் சாலை தொடர் வண்டி நிலையம் அவுரங்காபாத் நகரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிலுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகளான என்.எச் -19 நேரடியாக தில்லி மற்றும் கொல்கத்தா நகரத்தையும், என்.எச் -139 பாட்னாவை தௌத்நகர் வழியாக இணைக்கிறது. தில்லி, கொல்கத்தா, மும்பை, இலக்னோ, புவனேசுவர், அகமதாபாத், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், நாக்பூர், போபால், இந்தூர், [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத் (மகாராட்டிரா), ஜம்மு, அரித்வார், லக்னோ, புனே, அலகாபாத், வாரணாசி போன்ற நகரங்களுக்கு நேரடித் தொடர் வண்டிச் சேவை உள்ளது .

அருகிலுள்ள விமான நிலையம் நகர மையத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கயை வானூர்தி நிலையமும், நகர மையத்திலிருந்து 136 கி.மீ தூரத்தில் உள்ள பாட்னா விமான நிலையமும் ஆகும். முக்கிய அதிவிரைவு தொடருந்து அனுக்ரா நாராயண் சாலை நிலையத்தில் நின்று செல்கிறது.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுரங்காபாத்,_பீகார்&oldid=3089254" இருந்து மீள்விக்கப்பட்டது