கிசன்கஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிசன்கஞ்சு என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பூர்னியா பிரிவின் கிசன்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் மற்றும் மாவட்ட தலைமையகமாகும்.

வரலாறு[தொகு]

முன்பு பூர்னியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கிசன்கஞ்சு மிதிலா பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.[1]

மிதிலா இராச்சியத்தை ஸ்தாபித்த இந்தோ-ஆரிய மக்களால் குடியேறிய பின்னர் மிதிலா முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றது. (இது விதேக இராச்சியம் என்றும் அழைக்கப்படுகிறது).  வேத காலத்தின் பிற்பகுதியில் (கி.மு. 1100-500) விதேக இராச்சியம் தெற்காசியாவின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாக மாறியது. விதேக இராச்சிய மன்னர்கள் ஜனகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.[2]

மிதிலா இராச்சியம் பின்னர் வஜ்ஜி கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது. அதன் தலைநகரான வைசாலி நகரத்தில் இருந்தது. தலைநகர் மிதிலாவிலும் அமைந்திருந்தது.[3]

காலநிலை[தொகு]

கோப்பன்- கீகர் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக இப் பகுதியில் காலநிலையில் வெப்பமான கோடையும் வறட்சியான குளிர்ப் பருவமும் நிலவுகின்றது. (CWA)

கிசன்கஞ்சில் குளிர்காலத்தில், கோடைகாலத்தை விட மழைப்பொழிவு மிகக் குறைவு. கிசன்கஞ்சின் சராசரி வெப்பநிலை 24.8. C ஆகும். சராசரி ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 2099 மி.மீ ஆகும். சூன் மாதம் வெப்பமான மாதமாகும். ஆண்டின் வெப்பமான மாதம் சூன் மாதமாகும். சூன் மாத சராசரி வெப்பநிலை 28.8 °C ஆகும். ஆண்டின் வெப்பம் குறைந்த மாதம் சனவரி மாதமாகும். சனவரி மாத சராசரி வெப்பநிலை 16.9. C ஆக காணப்படும். வறண்ட மற்றும் ஈரமான மாதங்களுக்கு இடையிலான மழைவீழ்ச்சி வேறுபாடு 532 மி.மீ ஆகும்.[4]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி கிசன்கஞ்சின் மக்கட் தொகை 105,782 ஆகும்.[5] இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 55,143 மற்றும் 50,639 என்ற எண்ணிக்கையில் காணப்பட்டனர்.[5][6]

கிசன்கஞ்ச் நகரத்தின் கல்வியறிவு விகிதம் 73.46% ஆகும். இது மாநில சராசரியான 61.80% ஐ விட அதிகமாகும். கிசன்கஞ்சில் ஆண்களின் கல்வியறிவு 78.37% வீதமாகவும், பெண் கல்வியறிவு விகிதம் 68.08% ஆகவும் உள்ளது.[5][7] 2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பு இந்தியா அறிக்கையின்படி கிசன்கஞ்சு ஆறு வயதிற்கு உட்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை 16,884 ஆகும். அவர்களில் 8,636 பேர் சிறுவர்களும், 8,248 பேர் சிறுமிகளும் ஆவார்கள். நகரத்தின் மொத்த மக்கட் தொகையில் 15.96% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். மக்கட் தொகையில் முஸ்லிம்களின் தொகை அதிகம் உள்ள ஒரு சில மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[5]

போக்குவரத்து[தொகு]

புள்ளிவிவரங்களின்படி கிசன்கஞ்சில் பெரிய இரயில் பாதை அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கிய நகரங்களுடனும், பிற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிசன்கஞ்சு ரயில் நிலையம் வடகிழக்கு எல்லை ரயில்வே (என்.எஃப்.ஆர்) இன் கீழ் வருகிறது. இது இந்திய ரயில்வேயின் 'ஏ' வகை நிலையமாகும். ரயில் நிலையம் மற்றும் என்.எச் 31 ஆகியவை இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. புது தில்லி, மும்பை, பாட்னா, கொல்கத்தா, குவஹாத்தி, பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்கள் நேரடி ரயில் சேவையினால் இணைக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் குவஹாத்தி இடையே இயங்கும் ராஜதானி விரைவூர்தி கிசன்கஞ்சில் நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 31 ரயில் பாதையுடன் இயங்குகிறது.

கிசன்கஞ்சில் இருந்து சுமார் 60 கி.மீ (37 மைல்) தொலைவில் உள்ள பாக்தோகிராவில் பாக்டோகிரா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசன்கஞ்சு&oldid=3529927" இருந்து மீள்விக்கப்பட்டது