பெத்தியா

ஆள்கூறுகள்: 26°48′05″N 84°30′10″E / 26.80139°N 84.50278°E / 26.80139; 84.50278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தியா
நகரம்
பெத்தியா ராஜ் மகால் சாகீத் பூங்கா, சாகர் பொக்ரா மற்றும் சிவன் கோயில், சுப்பிரியா திரையரங்கச் சாலை, பெத்திய கூட்டரங்கம், மகாராஜா விளையாட்டரங்கம், காந்தி சிலை, ஹரிவாத்திகா சதுக்கம்
பெத்தியா ராஜ் மகால் சாகீத் பூங்கா, சாகர் பொக்ரா மற்றும் சிவன் கோயில், சுப்பிரியா திரையரங்கச் சாலை, பெத்திய கூட்டரங்கம், மகாராஜா விளையாட்டரங்கம், காந்தி சிலை, ஹரிவாத்திகா சதுக்கம்
பெத்தியா is located in பீகார்
பெத்தியா
பெத்தியா
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பெத்திய நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°48′05″N 84°30′10″E / 26.80139°N 84.50278°E / 26.80139; 84.50278
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண்
தோற்றுவித்தவர்கணேஷ்வர் தேவ்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பெத்தியா நகராட்சி
பரப்பளவு
 • நகரம்24 km2 (9 sq mi)
 • நகர்ப்புறம்64 km2 (25 sq mi)
ஏற்றம்65 m (213 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்132,209
 • தரவரிசை14வது (பிகார்)
 • அடர்த்தி5,500/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • வட்டார மொழிபோச்புரி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்845438
BTH06254
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-22
பாலின விகிதம்53% male : 47% female /
இணையதளம்westchamparan.bih.nic.in

பெத்தியா (Bettiah), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில் நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3]இது மாநிலத் தலைநகரான பாட்னாவுக்கு வடக்கே 225 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

காந்த கார் பெத்தியா இராச்சியத்தின் அரண்மனை

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 39 வார்டுகளும், 24,463 வீடுகளும் கொண்ட பெத்தியா நகரத்தின் மக்கள் தொகை 132,209 ஆகும். அதில் ஆண்கள் 69,529 மற்றும் பெண்கள் 62,680 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 901 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,266 மற்றும் 828 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 64.08%, இசுலாமியர் 33.72%, கிறித்தவர்கள் 1.9% மற்றும் பிறர் 0.30% ஆகவுள்ளனர்.[4]

போக்குவரத்து[தொகு]

இரயில் நிலையம்[தொகு]

பெத்தியா இரயில் நிலையம்[5]பாட்னா, தில்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், ஜம்மு போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 727, 139W, 28பி மற்றும் மாநில நெடுஞ்சாலை எண் 54 பெத்தியா நகரத்தின் வழியாகச் செல்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

இதனருகே அமைந்த வானூர்தி நிலையம், 97 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குசிநகர் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

கல்வி[தொகு]

 • அரசு மருத்துவக் கல்லூரி, பெத்தியா
 • அரசு பொறியியல் கல்லூரி, மேற்கு சம்பாரண்
 • மகாராணி ஜானகி குன்வர் கலூரி, பெத்தியா[6]
 • ராம் லக்கன் சிங் யாதவ் கல்லூரி, பெத்தியா
 • குலாப் நினைவுக் கல்லூரி, பெத்தியா

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பெத்தியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.28
(73.9)
26.33
(79.4)
32.39
(90.3)
37.28
(99.1)
38.72
(101.7)
37.2
(99)
33.5
(92.3)
32.83
(91.1)
33.28
(91.9)
32.28
(90.1)
29.22
(84.6)
24.56
(76.2)
31.72
(89.1)
தினசரி சராசரி °C (°F) 16.17
(61.1)
18.67
(65.6)
24.17
(75.5)
29.22
(84.6)
31.7
(89)
31.7
(89)
29.61
(85.3)
29.11
(84.4)
28.94
(84.1)
26.61
(79.9)
21.89
(71.4)
17.39
(63.3)
25.44
(77.8)
தாழ் சராசரி °C (°F) 9.06
(48.3)
11.06
(51.9)
16.06
(60.9)
21.22
(70.2)
24.56
(76.2)
26.17
(79.1)
25.72
(78.3)
25.44
(77.8)
24.61
(76.3)
21
(69.8)
14.56
(58.2)
10.22
(50.4)
19.17
(66.5)
பொழிவு mm (inches) 13
(0.5)
13
(0.5)
10
(0.4)
18
(0.7)
46
(1.8)
196
(7.7)
378
(14.9)
356
(14)
226
(8.9)
66
(2.6)
5
(0.2)
5
(0.2)
1,331
(52.4)
சராசரி பொழிவு நாட்கள் 1.4 1.1 1.1 1.0 2.1 5.4 10.9 11.9 7.3 2.4 0.6 0.7 45.7
ஆதாரம்: Weatherbase[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Bhojpuri". Ethnologue (ஆங்கிலம்). 8 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Tirhut Division". tirhut-muzaffarpur.bih.nic.in. 16 March 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 4. Bettiah Population, Religion, Caste, Working Data Pashchim Champaran, Bihar - Census 2011
 5. Bettiah railway station
 6. "Public Utilities". Official Website of West Champaran | India. 3 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Weatherbase.com". Weatherbase. 2015. 4 மார்ச்சு 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. Retrieved on 27 August 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தியா&oldid=3597251" இருந்து மீள்விக்கப்பட்டது