உள்ளடக்கத்துக்குச் செல்

சீதாமரி

ஆள்கூறுகள்: 26°36′N 85°29′E / 26.6°N 85.48°E / 26.6; 85.48
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீதாமரி
நகரம்
சீதாமர்கி
சீதை, பாகி மடம், ஜானகி கோயில்
சீதாமரி is located in பீகார்
சீதாமரி
சீதாமரி
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் சீதாமரி நகர்த்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°36′N 85°29′E / 26.6°N 85.48°E / 26.6; 85.48
நாடுஇந்தியா
மாநிலம்பிகார்
பிரதேசம்மிதிலை
மாவட்டம்சீதாமரி
ஏற்றம்
56 m (184 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,06,093
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிமைதிலி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
843302, 843301, 843331,843323, 843325 (Sitamarhi)[2]
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-30
இணையதளம்sitamarhi.nic.in

சீதாமரி (Sitamarhi), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில், நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டிய மிதிலைப் பிரதேசத்தில் அமைந்த சீதாமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[3] இந்நகரத்தில் சீதைக்கான கோயில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு வடக்கே 135.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 28 வார்டுகள் மற்றும் 12,718 வீடுகள் கொண்ட சீதாமரி நகரத்தின் மக்கள் தொகை 67,818 ஆகும். அதில் 35,960 ஆண்கள் மற்றும் பெண்கள் 31,858 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,935 மற்றும் 57 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.45%, இசுலாமியர் 16.23% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[4]

போக்குவரத்து

[தொகு]

நேபாளத்தின் சோன்பர்சா மற்றும் பிகாரின் ஹாஜிப்பூர் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 (பழையது) சீதாமர்கி நகரம் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of SITAMARHI". Biharonline.gov.in. Archived from the original on 23 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Sitamarhi
  3. "Tirhut Division". Tirhut-muzaffarpur.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  4. Sitamarhi Population, Religion, Caste, Working Data Sitamarhi, Bihar - Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாமரி&oldid=3929984" இலிருந்து மீள்விக்கப்பட்டது