பக்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்சர்
நகரம்
பக்சர் நகரத்தில் பாயும் கங்கை ஆற்றின் பாலம், பக்சர் இரயில் நிலையம்
பக்சர் ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம்
பக்சர் ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம்
பக்சர் is located in பீகார்
பக்சர்
பக்சர்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பக்சர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°33′38″N 83°58′50″E / 25.56049°N 83.98054°E / 25.56049; 83.98054ஆள்கூறுகள்: 25°33′38″N 83°58′50″E / 25.56049°N 83.98054°E / 25.56049; 83.98054
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்பக்சர்
நிறுவப்பட்ட ஆண்டு1480
பரப்பளவு
 • மொத்தம்6.2 km2 (2.4 sq mi)
ஏற்றம்55 m (180 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,02,861
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிபோஜ்புரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்802101
தொலைபேசி குறியீடு எண்06183
வாகனப் பதிவுBR-44
இணையதளம்buxar.bih.nic.in

பக்சர் (Buxar), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தில் மேற்கில் உள்ள பக்சர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு 125 கிலோ மீட்டர் தொலைவில் பக்சர் நகரம் உள்ளது. இந்நகரத்தில் வட்டார மொழியான போச்புரி பேசப்படுகிறது.பக்சர் இரயில் நிலையம் பாட்னா-முகல்சராய் மற்றும் புது தில்லி-கொல்கத்தா இருப்புப் பாதைகள் இடையே உள்ளது.

வரலாறு[தொகு]

இந்நகரத்தில் 1764-ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும் முகலாயர், அயோத்தி நவாப் மற்றும் வங்காள நவாபுகள் படைகளுக்கும் பக்சார் சண்டை நடைபெற்றது. போரில் வென்ற பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு பிகாரின் பெரும்பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமை பெற்றனர். [1][2][3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பக்சர் நகரத்தின் மக்கள் தொகை 1,02,861 ஆகும். அதில் ஆண்கள் 54,277 மற்றும் பெண்கள் 48,584 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14,165 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.82% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.99%, இசுலாமியர் 12.34 %, கிறித்தவர்கள் 0.32 % மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி, உருது மற்றும் போச்புரி மொழிகள் பேசுகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Battle of Buxar : Venue, Date, Reasons, Winner, Loser, Aftermath, Significance". 12 மார்ச்சு 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 மார்ச்சு 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Battle of Buxar | Summary | Britannica". 12 மார்ச்சு 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 மார்ச்சு 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The new battles of Buxar". www.telegraphindia.com. 12 March 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  4. Buxar City Population 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சர்&oldid=3530019" இருந்து மீள்விக்கப்பட்டது