பூர்ணியா மாவட்டம்
பூர்ணியா மாவட்டம் पूर्णिया जिला | |
---|---|
பூர்ணியாமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா |
தலைமையகம் | பூர்ணியா |
பரப்பு | 3,229 km2 (1,247 sq mi) |
மக்கட்தொகை | 3,288,478 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,014/km2 (2,630/sq mi) |
படிப்பறிவு | 64.49 % |
பாலின விகிதம் | 930 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பூர்ணியா மாவட்டம் (Purnia district) பீகாரின் 38 மாவட்டங்களுள் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகர் பூர்ணியா நகரம் ஆகும். இம்மாவட்டம் கங்கைக் கரையிலிருந்து வடக்கு நோக்கி விரிவடைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் அடங்கிய பகுதி பீகாரின் பூர்ணியா பிரிவின் கீழ் வருகிறது.
வரலாறு[தொகு]
முகலாயர்களின் காலகட்டத்தில் இது ராணுவ கேந்திரமாக இருந்தது. இதனுடைய வருவாய் முழுவதும் இதன் எல்லையைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்பட்டது. வடகிழக்குப் பகுதி பழங்குடியினரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க எப்போதும் இது ராணுவ கேந்திரமாகவே இருந்து வந்துள்ளது[1]. பூர்ணியாவில் நகரத்தில் நடக்கும் துர்கா பூஜை சிறப்பு வாய்ந்தது. பூர்ணியா என்ற பெயரில் மாதா பூரண் தேவி கோவில் ஒன்று இங்கு உள்ளது. அக்கோவிலின் பெயராலே இந்நகருக்கு பூர்ணியா என்ற பெயர் வந்தது.
புவியியல் அமைவிடம்[தொகு]
இம்மாவட்டம் 3,229 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது.,[2] இது சாலமன் தீவுகளின் மகிரா தீவின் பரப்பளவிற்கு இணையானதாகும்.[3] இப்பகுதி வழியாக இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் பல ஆறுகள் பாய்ந்தோடுவதால் இங்கு விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. கோஸி, மகாநந்தா, சுவாரா, காளி, பனார் மற்றும் கோலி ஆகிய ஆறுகள் இவ்வழியாகச் செல்கின்றன.
பொருளாதாரம்[தொகு]
இங்கு பெரும்பாலும் விவசாயமே முக்கியத் தொழில். தானியங்கள், கோதுமை, அரிசி, காய்கறிகள் மற்றும் தர்பூசணி ஆகியவை முக்கியப்பயிர்களாகும். 2006 ஆம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் அமைச்சரவை பூர்ணியா மிகவும் பிற்படுத்தப்பட்ட 250 மாவட்டங்களில் ஒன்று என வகைப்படுத்தி நிதி உதவி அளித்தது.[4]
பிரிவுகள்[தொகு]
பூர்ணியா மாவட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- பூர்ணியா
- பான்மான்கி
- பைஸி
- தாம்தாஹா
இவை மேலும் 14 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- கிழக்குப் பூர்ணியா
- கிரிட்யாநாடு நகர்
- பான்மான்கி
- காஸ்வா
- அமவ்ர்
- பாய்ன்ஸி
- பாய்ஸா
- தாம்தாஹா
- பார்ஹாயா கோதி
- ரூபாவ்லி
- ப்ஹாவானிபூர்
- டாஹார்வா
- ஜலால்ஹார்
- ஶ்ரீநகர் ஆகும்.
மக்கட்தொகை[தொகு]
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தில் 36,73,127 பேர் வசிக்கின்றனர்.[5] மக்கள் அடர்த்தி ஒரு சதுரகிலோமீட்டருக்கு 1,014 பேர் ஆகும்.[5]மக்கட்தொகை பெருக்க விகிதம் 28.66 % ஆகும்.[5] ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள்.[5] இவ்விட மக்களின் கல்வியறிவு 64.49 % ஆகும்.[5] இது இந்திய நாட்டின் கல்வியறிவை விட அதிகமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Purnea District - Imperial Gazetteer of India, v. 20, p. 414
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
- ↑ "Island Directory Tables: Islands by Land Area". United Nations Environment Program (1998-02-18). பார்த்த நாள் 2011-10-11. "Makira 3,190km2"
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.