உள்ளடக்கத்துக்குச் செல்

பகஹா

ஆள்கூறுகள்: 27°08′N 84°04′E / 27.13°N 84.07°E / 27.13; 84.07
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகஹா
நகரம்
பகஹா is located in பீகார்
பகஹா
பகஹா
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பகஹா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°08′N 84°04′E / 27.13°N 84.07°E / 27.13; 84.07
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்மேற்கு சம்பாரண்
ஏற்றம்
135 m (443 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,13,012
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, உருது
 • வட்டார மொழிபோச்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
845101
தொலைபேசி குறியீடு எண்06251
இணையதளம்westchamparan.bih.nic.in

பகஹா (Bagaha), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்த மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கண்டகி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[1] இது மாவட்டத் தலைமையிடமான பெத்தியா நகரத்திலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு 294 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே வால்மீகி தேசியப் பூங்கா உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 35 வார்டுகளும், 20,980 வீடுகளும் கொண்ட பகஹா நகரத்தின் மக்கள் தொகை 1,12,634 ஆகும். அதில் ஆண்கள் 59,614 மற்றும் பெண்கள் 53,020 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 18% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 59.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,593 மற்றும் 1,554 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.31%, இசுலாமியர் 18.42% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[2]

போக்குவரத்து[தொகு]

கோரக்பூர்-முசாபர்பூர் இருப்புப் பாதையில் பகஹா இரயில் நிலையம் அமைந்துள்ளது[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=245817 [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Bagaha Population, Religion, Caste, Working Data Pashchim Champaran, Bihar - Census 2011
  3. "Bagaha Railway Station (BUG) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  4. Mehrotra, Yash. "Bagaha Railway Station Map/Atlas ECR/East Central Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகஹா&oldid=3530474" இலிருந்து மீள்விக்கப்பட்டது