மித்தி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்தி ஆறு
மித்தி ஆறு
மித்தி ஆறு
அமைவு
நாடுஆறு
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
நகரம்மும்பை
சிறப்புக்கூறுகள்
மூலம்விகார் ஏரி
2nd sourceபொவாய் ஏரி
 ⁃ அமைவுஆரே காலனி, கோரேகாவ் (கிழக்கு)
3rd sourceVakola Creek
 ⁃ அமைவுசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
முகத்துவாரம்அரபுக் கடல்
 ⁃ அமைவு
மாகிம் கடற்கழி
நீளம்18 km (11 mi) [1]

மித்தி ஆறு (Mithi River ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள சால்சேட் தீவுப் பகுதில் பாயும் பருவ கால ஆறாகும். கோரேகாவ் கிழக்கில் விகார் ஏரியில் உற்பத்தி ஆகும் மித்தி ஆறு 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்ந்து அந்தேரி வழியாக அரபுக் கடலில் கலக்கிறது.

புவியியல்[தொகு]

மும்பையில் பாயும் மித்தி ஆறு

பொவாய் ஏரி நிறைந்து விகார் ஏரிக்கு வரும் நீர் வழிந்தோடி மித்தி ஆறு உற்பத்தி ஆகிறது. மித்தி ஆறு அரபுக் கடலில் உள்ள மாகிம் கடற்கழியில் கலக்கும் முன் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு பவய், சகி நகரா, குர்லா, சாந்த குரூஸ், தாராவி, மாகிம், அந்தேரி கிழக்கு வழியாக பாய்கிறது இந்த ஆறு துவக்கத்தில் 5 மீட்டர் அகலத்திலும், நடுவில் 25 மீட்டர் அகலத்திலும், முடிவில் 70 மீட்டர் அகலத்திலும் பாய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mumbai Metropolitan Region Development Authority - Mithi River Development and Protection Authority". Archived from the original on 2021-12-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தி_ஆறு&oldid=3407522" இலிருந்து மீள்விக்கப்பட்டது