மாலாடு கடற்கழி

ஆள்கூறுகள்: 19°08′N 72°48′E / 19.133°N 72.800°E / 19.133; 72.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பையின் தானே, கொராய், வசை, மாலாடு
கழிவு நீரால் மாசடைந்த மாலாடு கடற்கழி

மாலாடு கடற்கழி (Malad Creek or Marve Creek) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த மும்பை புறநகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகரத்தில் மாலாடு பகுதியில் அமைந்துள்ளது. மாலாடு கடற்கழியின் நீளம் 5 கிலோ மீட்டர் ஆகும்.[1]

ஒசிவரா ஆற்றின் நீர் மாலாடு கடற்கழியில் கலக்கிறது. மாலாடு கடற்கழியின் மேற்கில் மாத் தீவும், கிழக்கில் வெர்சோவா பகுதியும் உள்ளது. இப்பகுதியில் வீடுகளின் கட்டுமானம் அதிகரித்த காரணத்தினால், 1000 ஏக்கராக இருந்த மாலாடு கடற்கழியின் சதுப்புநிலம் 400 ஏக்கராக குறைந்துள்ளது. மேலும் மலாடு கடற்கழியில் கழிவு நீர் விடப்படுவதால் கடல் நீர் மிகவும் மாசடைந்து உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலாடு_கடற்கழி&oldid=3356707" இலிருந்து மீள்விக்கப்பட்டது