உல்லாஸ் ஆறு
உல்லாஸ் ஆறு (उल्हास नदी) | |
River | |
நாடு | ![]() |
---|---|
மாநிலம் | மகாராட்டிரா |
நகரங்கள் | மும்பை, தானே |
அடையாளச் சின்னங்கள் |
சால்சேட் தீவு, மும்பை துறைமுகம் |
உற்பத்தியாகும் இடம் | மேற்கு தொடர்ச்சி மலைகள் |
கழிமுகம் | |
- அமைவிடம் | அரபுக் கடல், ![]() |
உல்லாஸ் ஆறு (Ulhas River) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் மேற்கு நோக்கி பாயும் ஆறாகும். இதன் வடிநிலப்பரப்பு 4,637 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும்.[1]
ராய்கட் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 600 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகும் உல்லாஸ் ஆறு ராய்கட் மாவட்டம் மற்றும் பால்கர் மாவட்டம் வழியாக 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து, இறுதியில் அரபுக் கடலில் கலக்கிறது.
மும்பை நகரத்தின் புதிய விரிவாக்கப் பகுதிகளான நவி மும்பை, பத்லாபூர் போன்ற நகரப்புற பகுதிகளுக்கு உல்லாஸ் ஆற்றின் நீர், குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.[2]
படக்கலவை[தொகு]
-
ராய்கட் மாவட்டத்தின் கொந்தானா கிராமத்தில் பாயும் உல்லாஸ் ஆறு
-
உல்லாஸ் ஆறு, கோத்புந்தரிலிருந்து
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Ulhas.
- ↑ Lewis, Clara (18 March 2013). "Greens: Monitor discharge in Ulhas river". Mumbai: Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Greens-Monitor-discharge-in-Ulhas-river/articleshow/19027384.cms. பார்த்த நாள்: Jul 14, 2014.