உள்ளடக்கத்துக்குச் செல்

பன்வேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்வேல்
पनवेल
Panvel
மாநகரம்
நாடுஇந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ராய்கட் மாவட்டம்
மெட்ரோமும்பை
அருகிலுள்ள நகரங்கள்மும்பை, நவி மும்பை
பெயர்ச்சூட்டுபனேலி
அரசு
 • நிர்வாகம்சிட்கோ (மகாராஷ்டிர நகர, தொழில்துறை முன்னேற்றக் கழகம்); பன்வேல் மாநகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்75 km2 (29 sq mi)
ஏற்றம்
28 m (92 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,75,463
 • அடர்த்தி15,644/km2 (40,520/sq mi)
இனம்பல்வேல்கர்
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
410206/ 410217/ 410208
தொலைபேசிக் குறியீடு022
வாகனப் பதிவுMH-46

பன்வேல், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தின் பன்வேல் தாலுகா மற்றும் பன்வேல் மாநகராட்சியின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இதனருகே புது பன்வேல் நகரம் உள்ளது. இது மும்பை - பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.

தொழில்துறை[தொகு]

இங்கு லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி ஆகியன அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வரவிருக்கின்றன.

போக்குவரத்து[தொகு]

இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையத்துடன் மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடம் முடிவடைகிறது.

இங்கு மும்பை - புனே விரைவுச்சாலை, சியாந்பன்வேல் விரைவுச்சாலை ஆகியன இணைகின்றன.

நவி மும்பையில் சர்வதேசத் தரத்திலான விமான நிலையம் வரவிருக்கிறது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வேல்&oldid=3610059" இலிருந்து மீள்விக்கப்பட்டது