பன்வேல் தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்வேல் தாலுகா (Panvel taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 15 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] பன்வேல் தாலுகா 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 157 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் பன்வேல் நகரத்தில் உள்ளது. 612.81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பிற்கு 1224 பேர் வீதம் மக்கள் தொகை அடர்த்தியும் கொண்ட பன்வேல் தாலுகாவில் பன்வேல் மாநகராட்சி உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 176364 வீடுகளைக் கொண்ட பான்வேல் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 7,50,236 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 3,97,228 மற்றும் பெண்கள் 3,53,008 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 94,362 - 12.58% ஆகும். சராசரி எழுத்தறிவு 76.73% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 6.64% மற்றும் 6.42% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.78%, இசுலாமியர்கள் 8.47%, பௌத்தர்கள் 5.45%, சமணர்கள் 0.53%, சீக்கியர்கள் 0.82%, கிறித்துவர்கள் 1.48% மற்றும் பிறர் 0.46% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வேல்_தாலுகா&oldid=3358162" இலிருந்து மீள்விக்கப்பட்டது