ஜவஹர்லால் நேரு துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை
அமைவிடம்
நாடு  இந்தியா
இடம் ராய்கட் மாவட்டம், நவி மும்பை, மகாராஷ்டிரா
ஆள்கூற்றுகள் 18°57′N 72°57′E / 18.950°N 72.950°E / 18.950; 72.950[1]
விவரங்கள்
உரிமையாளர் இந்திய அரசு
புள்ளிவிவரங்கள்
இணையத்தளம் jnport.gov.in

ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை (JNPT) அல்லது ஜவஹர்லால் நேரு துறைமுகம் அல்லது நவா ஷேவா துறைமுகம் என்பது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமாகும்.

1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட[2] இந்த துறைமுகம் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் ராய்கட் மாவட்டத்தில் அரபிக்கடலில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. இந்திய இரயில்வேயின் இலட்சிய திட்டங்களில் ஒன்றான மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டம் இந்த துறைமுகத்தில் நிறைவடைகிறது.

2021-22 காலாண்டில் 5.68 மில்லியன் TEUs [3]அளவுக்கான சரக்குகளை இத்துறைமுகம் கையாண்டது. துறைமுகம் நிறுவப்பட்டதில் இருந்து கையாளப்பட்ட சரக்குகளின் அளவில் இதுவே அதிகபட்ச அளவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Geographic Location". Jawaharlal Nehru Port Trust. Archived from the original on 2011-10-17. பார்க்கப்பட்ட நாள் 2011-09-23.
  2. https://jnport.gov.in/hstory
  3. https://indianexpress.com/article/cities/mumbai/jawaharlal-nehru-port-authority-record-cargo-7853529/