உள்ளடக்கத்துக்குச் செல்

மும்பையின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பையின் ஏழு தீவுகள்

மும்பையின் வரலாறு (History of Mumbai) கற்காலம் முதல் பழங்குடி மக்கள் மும்பையில் (பம்பாய்) வசித்து வருகின்றனர்.[1] பின்னர் கோலி மக்கள், மராத்தியர்கள் மற்றும் கொங்கணி மக்கள் மும்பையின் ஏழு தீவுகளில் குடிபெயர்ந்தனர்.[2]கிமு 2ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 10ஆம் நூற்றாண்டுக்கும் இடையில், மும்பை தீவுகளை சாதவாகனர்கள், வாகடகர்கள், காலச்சூரிகள், கொங்கன் மௌரியர்கள், சாளுக்கியர்கள், இராட்டிரகூடர்கள் மற்றும் சிலகார வம்ச மன்னர்கள் ஆட்சி செய்தனர்.[1]

13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குடியேறிகளை அழைத்து வந்த மஹிகாவதியின் மன்னர் பீமா மும்பை பகுதியில் ஒரு சிறிய இராஜ்யத்தை நிறுவினார்..[1] தில்லி சுல்தானகம் 1348ஆம் ஆண்டில் மும்பை தீவுகளைக் கைப்பற்றியது, பின்னர் அவை 1391 முதல் குஜராத் சுல்தானகத்திற்கு மாற்றப்பட்டது. போர்த்துகேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர் நுனோ டா குன்ஹா மற்றும் குஜராத் சுல்தான் பகதூர் ஷா ஆகியோருக்கு இடையேயான ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 1534ல் மும்பை தீவுகள் போர்த்துகேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.. .

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோவா மற்றும் மும்பை மீதான மராத்திய படையெடுப்பு மற்றும் கொங்கனின் முகலாய படையெடுப்பு (1685) ஆகியவற்றால் மும்பைத் தீவுகள் பாதிக்கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் போது, மும்பை ஒரு முக்கிய துறைமுகமாக உருவானது. மும்பை துறைமுகம் மெக்கா, பாஸ்ரா போன்ற அரேபியப் பகுதிகளுடன் கடல்சார் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது

19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர், 1853இல் மும்பை துறைமுகத்திற்கும், தானே நகரத்திற்கும் இடையில் இருப்புப்பாதை போடப்பட்டு, சரக்கு மற்றும் பயணியர் தொடருந்துகள் இயக்கப்பட்டது.

1900களின் முற்பகுதியில் இருந்து, பாலிவுட் இந்தி திரையுலகின் தளமாக மும்பை நகரம் செயல்பட்டது.மும்பை நகரம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, இந்திய விடுதலை இயக்கத்திற்கு வலுவான தளமாக மாறியது. மும்பை நகரம் 1919ல் ரௌலட் சட்டம், சத்தியாக்கிரகம் மற்றும் 1946ஆம் ஆண்டில் நடைபெற்ற ராயல் இந்தியன் நேவி கலகத்தின் மையமாக இருந்தது.[3] 1947இல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பம்பாய் மாகாணத்தின் தலைநகரமாக மும்பை நகரம் விளங்கியது. பம்பாய் மகாணத்திலிருந்த சுதேச சமஸ்தானங்கள் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டில், சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, பம்பாய் மாகாணத்திலிருந்து, மகாராட்டிரா மாநிலம் துவக்கப்பட்டது. புதிய மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்கியது. பம்பாய் என்ற பெயரை 6 மார்ச் 1996 அன்று மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.

பெருநகர மும்பை பகுதியில் 1992-93ஆம் ஆண்டு இந்து-முஸ்லீம் கலவரங்களை எதிர் கொண்டது. 1993 மும்பை குண்டுவெடிப்புகள் விரிவான உயிர்கள் மற்றும் சொத்து சேதத்தை ஏற்படுத்தியது

மும்பையை ஆண்ட இராச்சியங்கள்

[தொகு]
பௌத்த சமயத்தின் மையமாக விளங்கிய கான்கேரி குகைகள்
பௌத்த மகாகாளி குகைகள்
எலிபண்டா குகைகள்

கிமு மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் அசோகரின் கீழ் மௌரியப் பேரரசின் கீழ் மும்பையின் ஏழு தீவுகள் இணைக்கப்பட்டது.இத்தீவுகள் பௌத்தம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக மாற்றியது.[4] கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கான்கேரி குகைகள்[5] மற்றும் மகாகாளி குகைகளில் பௌத்த தூபிகள், விகாரைகள் மற்றும் சிற்பங்கள் எழுப்பட்டது.

கிமு 185ல் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, மும்பைத் தீவுகள் சாதவாகனர்களிடம் வீழ்ந்தன.[6] சோபாரா துறைமுகம் (இன்றைய நள சோப்ரா) கிமு முதல் நூற்றாண்டில் ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது,[7] இத்துறைமுகத்திலிருந்து உரோம் உடனான வர்த்தக தொடர்புகள் துவங்கியது.[8]கிபி 150ல் கிரேக்க புவியியலாளர் தொலெமிக்கு மும்பை தீவுகளை, ஹெப்டனேசியா என்று பெயரிட்டார். (பண்டைய கிரேக்கம்: ஏழு தீவுகளின் கொத்து) என்று அறியப்பட்டது.[9] கிபி 250ல் சாதவாகனர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, மேற்கு மகாராஷ்டிராவை ஆபிரர்கள் மற்றும் விதர்பாவின் வாகடகர்கள் மும்பைத் தீவுகளின் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஆபிரர்கள் கிபி 417வரை 167 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[6] ஐந்தாம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவின் காலச்சூரிகள் மும்பைத் தீவுகளை ஆட்சி செய்தனர்.[10] பின்னர் அவை ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கனின் மௌரியர்களால் கைப்பற்றப்பட்டன.கொங்கன் மௌரியர்கள் காலச்சூரிகளின் நிலப்பிரபுக்களாக இருந்தனர்.[6] இவர்கள் ஜோகேஸ்வரி குகைகள் அமைத்தனர்.[11]

தெற்கு மும்பையில் உள்ள பான்கங்கா குளம்[12] மற்றும் வால்கேஷ்வரர் கோயில்[13]

கொங்கனின் மௌரியர்கள் ஆட்சியில், கிபி 520 மற்றும் 525க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜோகேஸ்வரி குகைகள் நிறுவினர். கிரேக்க வணிகர் காஸ்மாஸ் இண்டிகோபிளூஸ்டெஸ் கிபி 530-550 காலத்தில் கல்யாணுக்கு (மும்பைக்கு அருகில்) விஜயம் செய்தார்.[14]எலிபண்டா குகைகள் கிபி ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[15] கிபி 6ஆம் நூற்றாண்டில் மும்பை பகுதிக்கு கிறித்தவம் அறிமுகமானது.[16] ஆறாம் நூற்றாண்டில் நெஸ்டோரியன் தேவாலயம் இந்தியாவில் தோன்றியபோது, கிறிஸ்தவம் மும்பைத் தீவுகளுக்கு வந்தது.[20] கிபி 610 இல் இரண்டாம் புலிகேசியின் ஆட்சியின் கீழ் கர்நாடகாவின் பாதாமியின் சாளுக்கியர்கள் மும்பைத் தீவுகளை ஆக்கிரமித்தபோது, கொங்கனின் மௌரிய ஆட்சி முடிவுக்கு வந்தது [17] கர்நாடகாவின் , இராட்டிரகூடர் மன்னர் தந்திதுர்கன் 749-750ல் மும்பைத் தீவுகளைக் கைப்பற்றினார்.[6]

கொங்கனின் சில்கார வம்சத்தினர் 810 மற்றும் 1260 க்கு இடையில் இப்பகுதியை ஆண்டனர்.[18] இவர்கள் 10ஆம் நூற்றாண்டில் தெற்கு மும்பையில் பான்கங்கா குளம் மற்றும் வால்க்கேஷ்வரர் கோயில்கட்டினர்.[19] மற்றும் 12ஆம் நூற்றாண்டில் பான்கங்கா குளம் மற்றும் வால்கேஷ்வரர் கோயில் சில்ஹாரா ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.[20] பதின்மூன்று சீனக் கப்பல்கள்1292, மே - செப்டம்பர் மாதங்களில் மும்பை துறைமுகம் வழியாகச் சென்றது என இத்தாலியப் பயணி மார்கோ போலோ தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.[14][21] மன்னர் முதலாம் பீமதேவன் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மும்பைத் தீவுகள் வரை தனது இராச்சியத்தை விரிவுபடுத்தினார்.[22] மேலும் மாகிம் நகரத்தில் தனது தலைநகரை நிறுவினார்.[27] முதலாம் பீமதேவன் ஆட்சியின் போது, 1298ல் குஜராத்தின் பதான் மற்றும் சௌராஷ்டிரா பகுதி மக்களை மும்பை தீவுகளுக்கு குடியமர்த்தினார்.

1318ல் மாகிம் மற்றும் சால்சேட் தீவுகளை, கல்ஜி வம்சத்தின் சுயமாக அறிவிக்கப்பட்ட மன்னர் முபாரக் கான், பிரதாபிம்பாவின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.. பிரதாபிம்பா பின்னர் 1331 வரை அவர் ஆட்சி செய்த தீவுகளை மீண்டும் கைப்பற்றினார். பின்னர், அவரது மைத்துனரான நாகர்தேவ். 1348 வரை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.. 1348 குஜராத் முஸ்லீம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மும்பைத் தீவுகள் வந்தது. இதனால் மும்பைத் தீவுகளின் மீதான இந்து ஆட்சியாளர்களின் இறையாண்மை முடிவுக்கு வந்தது.

இஸ்லாமிய காலம்

[தொகு]
மகாலெட்சுமி பகுதியில் ஹாஜி அலி தர்கா

1348 முதல் 1391 வரை மும்பைத் தீவுகள் குஜராத் முஸ்லிம்கள் ஆட்சியில் கீழ் இருந்தது. 1391ல் குஜராத் சுல்தானகம் நிறுவப்பட்ட பிறகு, முதலாம் முசாபர் ஷா, வடக்கு கொங்கனின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[23] மும்பை தீவுகளின் நிர்வாகத்திற்காக, மாகிமிற்கு ஒரு ஆளுநரை நியமித்தார். முதலாம் அஹ்மத் ஷா (1411-1443) ஆட்சியின் போது, மாலிக்-உஸ்-ஷார்க் மாகிமின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்,

15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிண்டாரிகள் மஹிம் தீவை குஜராத் சுல்தானகத்திடம் இருந்து கைப்பற்றி எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[24] பின்னர் இதை குஜராத் சுல்தானகத்தின் ராய் குதுப் என்பவரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[25] 1429-1430 இல் ராய் குதுப் இறந்தவுடன், தக்காணத்தின் பாமினி சுல்தான் முதலாம் அஹ்மத் ஷா சால்சேட் தீவு மற்றும் மாஹிமையும் கைப்பற்றினார்.[26][27]

1526ம் ஆண்டில், போர்த்துகீசியர்கள் தங்கள் தொழிற்சாலையை பஸ்சைனில் நிறுவினர். முகலாயப் பேரரசர் ஹுமாயூன்-போர்த்துகேயர் இடையே 25 அக்டோபர் 1535 அன்று சமாதானம் மற்றும் வர்த்தக உடன்படிக்கையின் மூலம் மும்பையின் ஏழு தீவுகள் போர்த்துகேயர்கள் வசமானது. மும்பையில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்தது.

போர்த்துகேயர் காலம்

[தொகு]
போர்த்துகேயர்களின் மும்பை துறைமுக ஓவியம், ஆண்டு 1626
போர்த்துகேயர்களின் கோட்டை, 1640
போர்த்துகேயர்களின் திருச்சபை

போர்த்துகேய கிழக்கிந்திய நிறுவனம் பம்பாயில் தங்கள் மத அமைப்புகளின் அடித்தளம் மற்றும் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 1534ல் முகலாயர்களால் மும்பையின் ஏழு தீவுகள் மெஸ்ட்ரே டியோகோவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது..[28] பம்பாயில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றான மாகிமில் உள்ள் செயின்ட் மைக்கேல் தேவாலயம் 1540 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது.[29] 1545 மற்றும் 1548க்கு இடையில் பரேல், வடலா, சியோன் மற்றும் வோர்லி, மசகான், டிராம்பே, செம்பூர், டிராம்பே, செம்பூர், எலிபெண்டா தீவு, சால்சேட் தீவு ஆகியவை போர்த்துகேய கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது.

போர்த்துகீசியர்கள் உள்ளூர் மக்களுடன் கலப்புத் திருமணத்தை ஊக்குவித்தனர், மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வலுவாக ஆதரித்தனர்.[30] 1560 ஆம் ஆண்டில் போர்த்துகேயர்கள் உள்ளூர் கோலி, குன்பி, கும்பர் மக்களை மாகிம், வோர்லி மற்றும் பசைன் பகுதிகளில் மதமாற்றம் செய்யத் தொடங்கினர்.[31] இந்த கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களால் போர்த்துகீசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர், இருப்பினும் அவர்கள் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் சமீபத்தில் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.[32] அக்காலத்தில் பாம்பேயின் முக்கிய வர்த்தகம் தேங்காய் மற்றும் தென்னை நார் ஆகும்.[33]

1612ல் மும்பையின் உரிமைக்காக சூரத்தில் ஆங்கிலேயர்களுக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது.. 8 மே 1661 அன்று இங்கிலாந்தின் இளவரசர் இரண்டாம் சார்லஸ் மற்றும் போர்ச்சுகலின் இளவரசி கேத்தரின் ஆகியோரின் திருமண ஒப்பந்தம் மூலம் சார்லசுக்கு, கேத்தரின் குடும்பத்தினர் வழங்கிய வரதட்சணையின் ஒரு பகுதியாக மும்பை நகரம் இருந்தது. எனவே மும்பை நகரம் பிரித்தானியர் வசம் வந்தது.[34]

பிரித்தானியர் காலம்

[தொகு]
மும்பை நகர வரைபடம், ஆண்டு, 1760
மும்பை துறைமுகம் மற்றும் மும்பையின் ஏழு தீவுகள் வரைபடம், ஆண்டு 1724
மும்பை துறைமுகத்தில் நிற்கும் கப்பல்களின் காட்சி, ஆண்டு 1731
மும்பை கோட்டையின் சிதிலங்கள், 1769

19 மார்ச் 1662 அன்று, ஆபிரகாம் ஷிப்மேன் என்ற பிரித்தானியர் மும்பை நகரத்தின் படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாகிம், சியோன், தாராவி மற்றும் வடலா பகுதிகள் பிரித்தானியர்களின் மும்பை நகரத்துடன் இணைக்கப்பட்டது.[35][36] பம்பாய் நகரத்தைச் சுற்றி கோட்டைகள் கட்டப்பட்டது. 21 செப்டம்பர் 1668 அன்று பிரித்தானியப் பேரரசிடமிருந்து, மும்பை பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது.[37][38] ஜார்ஜ் ஆக்செண்டன் 23 செப்டம்பர் 1668 அன்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பம்பாயின் முதல் ஆளுநரானார்.

சூலை 1669ல் பம்பாயின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெரால்டு ஆங்கியர், 1670ல் வழங்கிய பல்வேறு சலுகைகளால் பார்சிகள், கொங்கணிகள், யூதர்கள், தாவூதி போரா முஸ்லீம்கள், சூரத் மற்றும் டையூவிலிருந்து குஜராத்தி பனியாக்கள் மற்றும் சால்செட்டிலிருந்து பிராமணர்களை ஈர்த்தது.

வடக்கில் டோங்ரி முதல் தெற்கில் உள்ள மென்டாம்ஸ் முனை (இன்றைய லயன் கேட் அருகில்) வரை மும்பை நகரத்தில் விரிவான கோட்டைகளையும் கட்டினார். 20 கப்பல்கள் நிறுத்துவதற்கு இடவசதியுடன் துறைமுகமும் உருவாக்கப்பட்டது. 1670ல், பார்சி தொழிலதிபர் பீம்ஜி பரிக் முதல் அச்சகத்தை பம்பாயில் இறக்குமதி செய்து நிறுவினார்..1661 மற்றும் 1675க்கு இடையில் 10,000 முதல் 60,000 வரை மக்கள் தொகையில் ஆறு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டது. முகலாயப் பேரரசின் கடற்படைத் தலைவர் யாகுத் கான், அக்டோபர் 1672 இல் பம்பாயில் தரையிறங்கி, அங்குள்ள உள்ளூர் மக்களை அழித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் உடன்படிக்கை இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து இடையே 1674ல் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் பம்பாயில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களை டச்சுக்காரர்களின் அச்சத்திலிருந்து விடுவித்தது. 1686 ஆம் ஆண்டில், நிறுவனம் அதன் முக்கிய தொழில் நிறுவனங்களை சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றியது.[39][40] பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தனது அனைத்து நிறுவனங்களின் அலுவலகங்களை மும்பைக்கு மாற்றியது.[41]

14 பிப்ரவரி 1689 அன்று முகலாயப் படைத்தலைவர் யாகுத் கான், மசாகோன் கோட்டையை இடித்துத் தள்ளினார். முகலாயப் பேரரசின் ஆட்சியாளரான ஔரங்கசீப்பிற்கு பின் ஆங்கிலேயர்கள் பணம் செலுத்திய பிறகு, யாகுத் கான் 8 சூன் 1690 அன்று பம்பாயை காலி செய்தார்.

17ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல இந்திய மற்றும் பிரித்தானிய வணிகர்களின் வருகையை ஒட்டி பம்பாயின் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அது உப்பு, அரிசி, தந்தம், துணி, ஈயம் மற்றும் வாள் கத்திகளை, அரேபிய நகரங்களான மெக்கா மற்றும் பாஸ்ராவுடன் வர்த்தகம் செய்தது.[56] 1710ம் ஆண்டு வாக்கில், பம்பாய் கோட்டையின் கட்டுமானம் முடிவடைந்தது, இது ஐரோப்பிய கடற்கொள்ளையர்கள் மற்றும் மராட்டியர்களின் கடல் தாக்குதல்களிலிருந்து தீவுகளை பலப்படுத்தியது.[42] 26 டிசம்பர் 1715 அன்று சார்லஸ் பூன் பம்பாயின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். வடக்கே டோங்ரியில் இருந்து தெற்கில் மென்டாம் புள்ளி வரை சுவர்களைக் கட்டினார்.[33] அவர் கடற் படையை நிறுவினார்,[56] மற்றும் செயின்ட் தாமஸ் பேராலயத்தை 1718ல் கட்டினார், இது பம்பாயில் முதல் ஆங்கிலிகன் தேவாலயமாகும்.[43] 1728ல், பம்பாயில் ஒரு மேயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது மற்றும் வொர்லியில் இருந்து பம்பாயை பிரிக்கும் சிற்றோடையில், மகாலெட்சுமி பகுதி மறுசீரமைப்பு தொடங்கப்பட்டது. கப்பல் கட்டும் தொழில் 1735ல் பம்பாயில் தொடங்கியது.[44] மற்றும் விரைவில் அதே ஆண்டில் கடற்படை கப்பல்துறை நிறுவப்பட்டது.[45]

போர்த்துகேயர்களிடமிருந்து மராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஜிராவ் 1737ம் ஆண்டில் சால்சேட் தீவுகளைக் கைப்பற்றினார். 1739ஆம் ஆண்டில் வசாய் பகுதியை மராத்தியப் பேரரசு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டு கொடுத்தது..[46]

1748ல் மராத்தியப் படைகள், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிப் படைகளை மும்பை நகரத்தின் கோட்டைக்குள் துரத்தியடித்தனர்.[47] 1750ல் சூரத்தின் வாடியா குடும்ப உறுப்பினர் லவ்ஜி நுஸ்செர்வான்சி வாடியா என்பவர் கிழக்கிந்திய கம்பெனிக்காக மும்பை துறைமுகத்தை அமைத்தார்.[48] இதுவே ஆசியாவின் முதல் துறைமுகம் ஆகும்.[45] 18ஆம் நூற்றாண்டின் நடுவில் மும்பையில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த தொழில் கலைஞர்கள் குடியேறினர்.[49] 1769ல் டோங்கிரி கோட்டை பகுதியில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.[50] 1770ல் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் அமைக்கப்பட்டது.[51] 1782ல் சல்பாய் உடன்படிக்கைப்படி, சால்செட் தீவுகள், எலிபெண்டா தீவு, ஹோக் தீவு, கரஞ்சா பகுதிகளை மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் சென்றது..[52] இருப்பினும் வசாய் பகுதிகள் மராத்தியர்கள் தக்க வைத்துக் கொண்டனர்.[53] 1782ல் மும்பையின் ஏழு தீவுகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. தக்காணத்தில் 1789 - 1795களில் ஏற்பட்ட மண்டையோடு பஞ்சத்தால் மும்பை மக்களில் பலர் உணவின்றி தெருக்களில் வீழ்ந்து மடிந்தனர்.

மலபார் மலையிலிருந்து மும்பை நகரம் எரியும் காட்சி, ஆண்டு 1803

மும்பை நகர வளர்ச்சி

[தொகு]
மரங்களை கொண்டு அமைந்த கொலபா சாலை, ஆண்டு 1826
மசாகன் பகுதியின் குடியிருப்புகள்
மும்பையின் வரைபடம், ஆண்டு 1893
1860களில் மும்பை துறைமுகத்தில் பருத்தி மூடைகள்
விக்டோரியா இரயில்வே முனையம், நிறுவிய ஆண்டு 1888

19 நவம்பர் 1801 அன்று மும்பை பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில் நிறுவப்பட்டது. கொலாபாவின் வடக்கே உள்ள வெலிங்டன் பையர் (அப்பல்லோ பண்டர்) 1819ல் பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளி 1822 இல் நிறுவப்பட்டது.. 1824ல் பம்பாய் வறட்சியால் பாதிக்கப்பட்டது. சூலை 1832ல் மும்பை நகரத்தை ஆக்கிரமித்த பரியா நாய்களை அழிக்க கம்பெனி ஆட்சி உத்தரவின் விளைவாக பார்சி கலவரம் நடந்தது. 1833ல் ஆசியடிக் சொசைட்டியின் கிளை (டவுன் ஹால்) கட்டி முடிக்கப்பட்டது,[54][55] 1835ல் எல்பிங்ஸ்டன் கல்லூரி நிறுவப்பட்டது.[56][57] . மற்றும் 1836ல் பம்பாய் வர்த்தக சபை நிறுவப்பட்டது.[54]

1838ல் கொலாபா மற்றும் லிட்டில் கொலாபா தீவுகள் சாலைகள் மூலம் பம்பாயுடன் இணைக்கப்பட்டது. அதே ஆண்டில் பம்பாய்க்கும் இலண்டனுக்கும் இடையே மாதாந்திர கப்பல் போக்குவரத்து தொடங்கியது.[54] நகரின் மிகப் பழமையான வங்கியான பாம்பே வங்கி 1840ல் நிறுவப்பட்டது.[58] மற்றும் பாங்க் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா 1842ல் நிறுவப்பட்டது.[59] 1844ல் காட்டன் கிரீனில் பருத்தி சந்தை நிறுவப்பட்டது. அவாபாய் ஜம்செட்ஜி ஜீஜீபோய் மாகிம் காஸ்வேயின் கட்டுமானத்திற்கு நிதியளித்தார். மாகிமை பாந்த்ராவுடன் இணைக்கும் பணி 1845ல் நிறைவடைந்தது.[60] 1845ல் நிறுவப்பட்ட கமர்ஷியல் பேங்க் ஆஃப் இந்தியா, மேற்கத்திய மற்றும் கிழக்கு மையக்கருத்துக்களின் கலவையுடன் கவர்ச்சியான ரூபாய் பணத் தாள்கள் வெளியிட்டது. நவம்பர் 3, 1845ல், கிராண்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையை ஆளுநர் ராபர்ட் கிராண்டால் நிறுவப்பட்டது.[61] முகமது பற்றிய கட்டுரையின் விளைவாக, அக்டோபர் 1851ல் முஸ்லிம்களுக்கும் பார்சிகளுக்கும் இடையே பம்பாயில் பெரும் கலவரம் வெடித்தது.[62] 26 ஆகஸ்டு 1852 அன்று பிரித்தானிய இந்தியாவில் முதல் அரசியல் அமைப்பான பம்பாய் சங்கம் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு பொதுமக்களின் குறைகளை தீர்க்க பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தும்.[63] முதல் இந்திய இருப்புப் பாதை பம்பாய் மற்றும் தானே இடையே 21 மைல் போடப்பட்டு 16 ஏப்ரல் 1853 முதல் செயல்படத் தொடங்கியது.[64] பம்பாய், பரோடா மற்றும் மத்திய இந்திய இரயில்வே (BB&CI) ஆகியவை 1855ல் ஒன்றாக இணைக்கப்பட்டது.[64][65] 7 சூலை 1854 அன்று முதல் பருத்தி நெசவு மற்றும் நூற்பாலை மத்திய மும்பையில் தொடங்கப்பட்டது.[66] மும்பை பல்கலைக்கழகம் 1857ல் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் நவீன உயர்கல்வி நிறுவனமாகும்.[67]

வணிக வங்கி, பட்டய வணிகம், ஆக்ரா மற்றும் யுனைடெட் சேவை மற்றும் மேற்கு இந்தியாவின் மத்திய வங்கி ஆகியவை கணிசமான தொழில்துறை மக்களை ஈர்க்கும் வகையில் பம்பாயில் நிறுவப்பட்டன.[68] மேற்குலகின் பருத்திக்கான தேவையை அதிகரித்தது, இதனால் இந்தியப் பருத்தி வர்த்தகத்தில் மகத்தான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.[69] விக்டோரியா கார்டன்ஸ் 1862ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[70] பாம்பே கப்பல் மற்றும் இரும்பு நிறுவனங்கள் 1863ல் பம்பாய் வணிகர்களை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரமாக மாற்றுவதற்கு தொடங்கப்பட்டது.[54] பம்பாய் மற்றும் அருகிலுள்ள தீவுகளுக்கு இடையே நீராவி படகுகளை பராமரிப்பதற்காக 1866ல் படகு நிறுவனம் நிறுவப்பட்டது. 1869ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் பம்பாய் கடல் வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.

மும்பை மாநகராட்சி 1872ல் நிறுவப்பட்டது.[71] பம்பாய் துறைமுக அறக்கட்டளை 1870ல் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்காக அறிவிக்கப்பட்டது.[72]

டிராம்வே சேவை 1873ல் நிறுவப்பட்டது.[73].பாம்பே எலக்ட்ரிக் சப்ளை அண்ட் டிரான்ஸ்போர்ட் (பெஸ்ட்)[74].[75] 1875ல் மும்பை பங்குச் சந்தை நிறுவப்பட்டது.[76]

1882ல் மும்பையில் மின்சார சேவை துவங்கியது மற்றும் கிரோபோர்டு சந்தை மின்சார விளக்குகளுடன் துவங்கியது.[77] 1883ல் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் நிறுவப்பட்டது.[78] பெப்ரவரி 1874 இல் மீண்டும் பார்சி மக்கள்-முஸ்லிம்களிடையே கலவரங்கள் வெடித்தது. இது பார்சி குடியிருப்பாளரால் வெளியிடப்பட்ட முகமது பற்றிய கட்டுரையால் ஏற்பட்டது. பாம்பே ஜிம்கானா 1875ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் மிகப்பழமையான பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை 1875ல் நிறுவப்பட்டது. 1882ல் மின்சாரம் பம்பாயை வந்தடைந்தது. பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் 1883ல் நிறுவப்பட்டது.

இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு 28-31 டிசம்பர் 1885 வரை பம்பாயில் நடைபெற்றது.[79] பம்பாய் முனிசிபல் சட்டம் 1888ல் இயற்றப்பட்டது. உலகப் புகழ் பெற்ற விக்டோரியா டெர்மினஸ் மே 1888 ல் கட்டி முடிக்கப்பட்டது.[135] 1890களில் டப்பாவாலா (மதிய உணவு விநியோகம் செய்பவர்) தொழில் முறை மும்பை நகரத்தில் தொடங்கியது.

1893 ஆகஸ்ட் 11 அன்று, பம்பாயில் ஒரு சிவன் கோவிலை முஸ்லிம்கள் தாக்கியபோது, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில். 75 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 350 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 1896ல், பம்பாய் பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது, அங்கு இறப்பு எண்ணிக்கை வாரத்திற்கு 1,900 பேர் என மதிப்பிடப்பட்டது. இந்த நேரத்தில் 8,50,000 மக்கள் தொகையில் பாதி பேர் பம்பாயை விட்டு வெளியேறினர்.1898 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று, பிளேக் நோயை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக திடீரென தீவிர கலவரம் தொடங்கியது. இந்த கலவரம் கப்பல்துறை மற்றும் இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தது. இது நகரத்தை சில நாட்களுக்கு முடக்கியது. 9 டிசம்பர் 1898 அன்று பம்பாய் நகர மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் 10 சனவரி 1899 அன்று வால்டெமர் ஹாஃப்கைன் மூலம் ஹாஃப்கைன் இன்ஸ்டிடியூட் உருவாக்கப்பட்டதே பிளேக் நோயைக் கட்டுப்படுத்தப்பட்டது. தாதர்-மாதுங்கா-வடாலா-சியோன் திட்டம், பம்பாயின் முதல் திட்டமிடப்பட்ட புறநகர் திட்டமாகும்.

மும்பை நகரின் மையத்தில் நெரிசலைக் குறைக்க 1899-1900களில் பம்பாய் நகர மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவப்பட்டது.. 1900 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளில் பிளேக் நோய் காரணமாக தொழிலாளர்கள் மும்பையை விட்டுச் சென்றதால் பருத்தி ஆலை தொழில் மோசமாக பாதிக்கப்பட்டது.

இந்திய விடுதலை இயக்கம்

[தொகு]
மும்பையில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் அமர்வு, (28–31 டிசம்பர் 1885)

1905ம் ஆண்டு வங்காளப் பிரிவினையை ஒட்டி, இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்த பொருட்களை மக்கள் வாங்க வேண்டி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மக்களால்புறக்கணிக்கப்பட்டது.[80] 22 சூலை 1908 அன்று, பம்பாயில் சுதேசி இயக்கத்தின் முதன்மை வழக்கறிஞரான பால கங்காதர திலகர், தனது பத்திரிகையான கேசரியில் அரசுக்கு எதிராக ஆவேசமான கட்டுரைகளை எழுதிய குற்றச்சாட்டின் பேரில் ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இந்த கைது நகரம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[81] 1910ல் இந்திய தேசிய காங்கிரசு தலைவரான பெரோசா மேத்தா துவக்கிய பாம்பே க்ரோனிகல் செய்தி பத்திரிக்கை, இந்தியாவின் சுதந்திரம் வரை தேசிய இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.[82]

1918 சூன் 10 அன்று பம்பாயில் முதலாம் உலகப் போரில் பிரித்தானிய இந்திய அரசு, இந்தியர்களின் உதவி வேண்டினர். 1918ம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பம்பாய் முழுவதும் பரவிய இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியது. பம்பாயில் ஜவுளித் தொழிலில் முதல் முக்கியமான வேலை நிறுத்தம் சனவரி 1919 இல் தொடங்கியது.[83] பிப்ரவரி - ஏப்ரல் 1919ல். ரவுலட் சட்டத்தின் விளைவாக மகாத்மா காந்தியால் சத்தியாகிரகம் இயக்கம் தொடங்கப்பட்டது. இது முதலாம் உலகப் போரின் போது பொது அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காலவரையின்றி அவசரகால நடவடிக்கைகளை நீட்டித்தது.[84]

இராஜாபாய் கடிகார கோபுரக் கூண்டிலிருது மும்பை நகரக் காட்சி, ஆண்டு 1919

முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம்த்தின் போது மும்பை நகர வாழ்க்கை பலமுறை பாதிக்கப்பட்டது..[85] இந்தியாவில் முதல் மின்சார இரயில்வே இன்ஜின்கள் 1925ல் விக்டோரியா டெர்மினஸ் முதல் குர்லா வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.[86] 1920களின் பிற்பகுதியில், ஈரானில் ஏற்பட்ட வறட்சியில் இருந்து தப்பிக்க பல பாரசீகர்கள் பம்பாய்க்கு குடிபெயர்ந்தனர்.[87] 1930களின் முற்பகுதியில், பிரித்தானிய இந்தியா அரசு உப்பு வரி விதித்ததை எதிர்த்து நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கம் பம்பாயிலும் பரவியது.[88] 1929ல் பம்பாயில் பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் தொழில் மற்றும் வர்த்தகத் துறைகள் 1933 முதல் 1939 முடிய முடங்கியது..[89] 1932 அக்டோபர் 15 அன்று தொழிலதிபரும் விமானியுமான ஜே.ஆர்.டி. டாடா கராச்சியிலிருந்து பம்பாய்க்கு விமானம் மூலம் பறந்து காட்டினார்.[90] இது பம்பாயில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு முன்னோடியாக இருந்தது.

சுதந்திர இந்தியா

[தொகு]
மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் பகுதியில் பிரித்தானிய இந்திய இராணுவத்தினர் இந்தியாவை விட்டு வெளியேறும் காட்சி, நாள் 28 பிப்ரவரி 1948

15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து 1,00,000 இந்து சமயத்தைச் சேர்ந்த சிந்தி மக்கள் அகதிகளாக மும்பையின் கல்யாண் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குடிபெயர்ந்தனர். அப்பகுதிக்கு இந்தியத் தலைமை ஆளுநர் இராஜாஜி உல்லாஸ்நகர் என்று பெயரிட்டார்..

ஏப்ரல் 1950ல், பம்பாய் புறநகர்ப் பகுதிகள் மற்றும் பம்பாய் நகரத்தின் இணைப்புடன் மும்பை மாவட்டம் நிறுவப்பட்டது.. இது 235.1 சதுர கிலோ மீட்டர் (90.77 சதுர மைல்) பரப்பளவுடன், 1951ல் 23,39,000 மக்கள் வசித்து வந்தனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது உருவான மகாராட்டிரா மாநிலத்தில் தலைநகராக மும்பை நகரம் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 1950ல் மும்பை புறநகர் பகுதிகளை மும்பை நகரத்துடன் இணைத்து பெருநகரமும்பை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் மும்பை 235.1 km2 (90.77 sq mi) பரப்பளவுடன்.[91], 1951 கணக்கெடுப்பின்படி, 23,39,000 மக்கள் தொகையுடன் கூடியதாக இருந்தது.

1960களின் முற்பகுதியில் மும்பை நகரத்தில் பார்சி மக்கள் மற்றும் மார்வாரிகள் புலம்பெயர்ந்தனர்.மும்பை நகரத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களை இவ்விரு சமூகத்தினர் வைத்திருந்தனர், அதே நேரத்தில் அலுவலக வேலைகள் முக்கியமாக நகரத்திற்கு குடியேறிய தென்னிந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டது.பூர்வீக மராத்திய மக்களின் நலனுக்காக சிவசேனா கட்சியை 19 சூன் 1966 அன்று பால் தாக்கரேவால் நிறுவப்பட்டது. 1960களின் பிற்பகுதியில், நாரிமன் பாயிண்ட் மற்றும் கஃபே பரேட் ஆகியவை மீள்ருவாக்கம் செய்யப்பட்டது.. 1970களின் போது பம்பாய்-பிவண்டி கலவரங்கள் நடந்தது..197ல்களில், லண்டனை தளமாகக் கொண்ட ஷெப்பர்ட் என்ற வர்த்தக நிறுவனத்தால் கப்பல்களை அறிமுகப்படுத்திய பிறகு, பம்பாய்க்கும் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரைக்கும் இடையே கடலோரத் தொடர்பு அதிகரித்தது..[92] இந்தக் கப்பல்கள் கோவா மற்றும் மங்களூர் கத்தோலிக்கர்கள் பம்பாய்க்கு நுழைவதற்கு உதவியது.

நேரு அறிவியல் மையம், நிறுவிய ஆண்டு 1972

இந்தியாவின் மிகப்பெரிய ஊடாடும் அறிவியல் மையமான நேரு அறிவியல் மையம் 1972 இல் பம்பாயில் உள்ள வோர்லி பகுதியில் 1972ல் நிறுவப்பட்டது.[93]

மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம் (MMRDA) 26 சனவரி 1975 அன்று மகாராஷ்டிரா அரசாங்கத்தால் மும்பை பெருநகரப் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு உச்ச அமைப்பாக அமைக்கப்பட்டது.[94]

ஆகஸ்ட் 1979ல், மும்பையின் மக்கள்தொகை பரவல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உதவுவதற்காக, தானே மாவட்டம் மற்றும் ராய்கட் மாவட்டங்கள் நிறுவப்பட்டது. சிட்கோ மூலம் நவி மும்பையை மும்பையின் சகோதரி நகரமாக நிறுவப்பட்டது.[95] பெரு நகர மும்பை ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 18 சனவரி 1982 அன்று தொழிற்சங்கத் தலைவர் தத்தா சமந்த் என்பவர் தலைமையில் தொடங்கப்பட்டது. பம்பாயில் கிட்டத்தட்ட 2,50,000 தொழிலாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது.[96] 1984 மே 17 அன்று, பம்பாய், தானே மற்றும் பிவண்டி பகுதிகளில் உள்ள மசூதிகளின் உச்சியில் காவிக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. 278 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,118 பேர் காயமடைந்தனர்.[97]

26 மே 1989 அன்று நவா சேவாவில் நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு துறைமுகம், பம்பாய் துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கும் மற்றும் நகரத்தின் மையத் துறைமுகமாக செயல்படும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.[98] டிசம்பர் 1992 - ஜனவரி 93 இல், மும்பை கலவரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துகளும், முஸ்லிம்களும் கொல்லப்பட்டதால் மும்பை நகரமே முடங்கியது.[99] 12 மார்ச் 1993 அன்று மும்பையில் 13 தொடர் வெடிகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 257 இறப்புகள் மற்றும் 700 காயங்கள் ஏற்பட்டன.[100] இந்த தாக்குதல்கள் பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிம் மூலம் திட்டமிடப்பட்டதாக கருதப்படுகிறது.[101] 1996ம் ஆண்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவ சேனா தலைமையிலான அரசாங்கம், பம்பாய் நகரத்தை பூர்வீகமாகக் கொண்ட மராத்தி மக்கள் மும்பா தேவி நினைவாக, பம்பாய் நகரத்தின் பெயரை மும்பை என மாற்றப்பட்டது.[102][103] 17 ஆம் நூற்றாண்டின் மராத்தியப் பேரரசர் மன்னர் சிவாஜியின் நினைவாக, விக்டோரியா டெர்மினஸ் இரயில் நிலையத்திற்கு, சத்திரபதி சிவாஜி தொடருந்து நிலையம் என 1996 ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று மறுபெயரிடப்பட்டது.[104]

மும்பை துறைமுகத்திலிருந்து, மலபார் மலைகளின் அகலப்பரப்பு காட்சி ஓவியம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "History of Mumbai: Check Brief History, Origin, Colonial Reigns!". Testbook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-07.
  2. "NIRC". Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 23 November 2013.
  3. "Bombay: History of a City". British Library. Archived from the original on 2 December 2008. பார்க்கப்பட்ட நாள் 8 November 2008.
  4. Ring, Salkin & Boda 1994, ப. 142
  5. "Kanheri Caves". sgnp.maharashtra.gov.in.
  6. 6.0 6.1 6.2 6.3 Greater Mumbai District Gazetteer 1986, Ancient Period
  7. Thana — Places of Interest 2000, Sopara
  8. "Dock around the clock". Time Out Mumbai (6). 14 November 2008. http://www.timeoutmumbai.net/aroundtown/aroundtown_preview_details.asp?code=4. பார்த்த நாள்: 18 November 2008. 
  9. Da Cunha 1993, ப. 23
  10. David 1973, ப. 11
  11. "The Slum and the Sacred Cave". Lamont–Doherty Earth Observatory (Columbia University). pp. 5 இம் மூலத்தில் இருந்து 23 November 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081123104753/http://www.ldeo.columbia.edu/edu/eesj/gradpubs/GeneralMags/Patel_Archaeology_SlumandSacredCave_0607.pdf. 
  12. Banganga Tank
  13. Walkeshwar Temple
  14. 14.0 14.1 Da Cunha 1993, ப. 184
  15. "World Heritage Sites — Elephanta Caves". Archaeological Survey of India இம் மூலத்தில் இருந்து 21 October 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081021063323/http://asi.nic.in/asi_monu_whs_elephanta.asp. 
  16. Lhendup Gyatso Bhutia (14 September 2008). "Message in a bottle". Daily News & Analysis இம் மூலத்தில் இருந்து 19 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080919153027/http://www.dnaindia.com/report.asp?newsid=1189923. 
  17. David 1973, ப. 12
  18. Nairne 1988, ப. 15
  19. Dwivedi, Sharada (26 September 2007). "The Legends of Walkeshwar". Mumbai Newsline. Express Group. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 31 January 2009.
  20. Agarwal, Lekha (2 June 2007). "What about Gateway of India, Banganga Tank?". Mumbai Newsline. Express Group. Archived from the original on 13 January 2009. பார்க்கப்பட்ட நாள் 31 January 2009.
  21. Thana District Gazetteer 1986, Early History
  22. Da Cunha 1993, ப. 34
  23. Prinsep, Thomas & Henry 1858, ப. 315
  24. Edwardes 1902, ப. 54
  25. Greater Mumbai District Gazetteer 1986, Muhammedan Period
  26. Misra 1982, ப. 193
  27. Misra 1982, ப. 222
  28. Da Cunha 1993, ப. 97
  29. Greater Bombay District Gazetteer 1986, Churches
  30. Da Cunha 1993, ப. 283
  31. Da Cunha 1993, ப. 183
  32. Baptista 1967, ப. 25
  33. 33.0 33.1 Dwivedi & Mehrotra 1995, ப. 26
  34. "Catherine of Bragança (1638–1705)". BBC. Archived from the original on 24 April 2008. பார்க்கப்பட்ட நாள் 5 November 2008.
  35. Thana District Gazetteer 1986, Portuguese (1500–1670)
  36. Malabari 1910, ப. 98
  37. "12-Amazing Facts About Mumbai". Dozenfacts (in அமெரிக்க ஆங்கிலம்). 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  38. Da Cunha 1993, ப. 272
  39. R. K. Kochhar (25 June 1994). "Shipbuilding at Bombay" (PDF, 297 KB). Current Science. 12 (Indian Academy of Sciences) 66. http://www.ias.ac.in/jarch/currsci/66/00000966.pdf. பார்த்த நாள்: 9 November 2008. 
  40. Carsten 1961, ப. 427
  41. Hughes 1863, ப. 227
  42. "Bombay Castle". Governor of Maharashtra. Archived from the original on 23 September 2008. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.
  43. Greater Bombay District Gazetteer 1986, St. Thomas Cathedral
  44. Mehta 1940, ப. 16
  45. 45.0 45.1 "Historical Perspective". Indian Navy. பார்க்கப்பட்ட நாள் 7 November 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  46. Thana District Gazetteer 1986, The Marathas
  47. Dwivedi & Mehrotra 1995, ப. 27
  48. "The Wadias of India: Then and Now". Vohuman. Archived from the original on 21 October 2008. பார்க்கப்பட்ட நாள் 10 November 2008.
  49. Dwivedi & Mehrotra 1995, ப. 32
  50. "Fortifying colonial legacy". இந்தியன் எக்சுபிரசு. 15 June 1997 இம் மூலத்தில் இருந்து 19 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120919114744/http://www.expressindia.com/news/ie/daily/19970715/19650713.html. 
  51. Dwivedi & Mehrotra 1995, ப. 28
  52. Calcutta Magazine and Monthly Register 1832, ப. 596
  53. Thana District Gazetteer 1986, Acquisition, Changes, and Staff (Acquisition, 1774–1817
  54. 54.0 54.1 54.2 54.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; brit என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  55. "About Asiatic Society of Bombay". Asiatic Society of Bombay. Archived from the original on 1 February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 January 2009.
  56. Elphinstone College
  57. "History". Elphinstone College. Archived from the original on 21 September 2008. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  58. Kanakalatha Mukund (3 April 2007). "Insight into the progress of banking". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 1 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001090413/http://www.hindu.com/br/2007/04/03/stories/2007040300301600.htm. 
  59. "Early Issues". Reserve Bank of India. Archived from the original on 7 March 2012. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  60. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cway என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  61. "History". Grant Medical College and Sir J.J. Gr.of Hospitals. Archived from the original on 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  62. Palsetia 2001, ப. 189
  63. Kidambi 2007, ப. [1]
  64. 64.0 64.1 Dwivedi & Mehrotra 1995, ப. 128
  65. "The South's first station". The Hindu (India). 26 February 2003 இம் மூலத்தில் இருந்து 8 August 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070808063353/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/02/26/stories/2003022600240300.htm. 
  66. "A City emerges". Hindustan Times. Archived from the original on 11 May 2008. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  67. "About University". University of Bombay. Archived from the original on 23 October 2008. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  68. Greater Bombay District Gazetteer 1986, Banking
  69. Greater Bombay District Gazetteer 1986, Stock Exchange
  70. Greater Bombay District Gazetteer 1986, Jijamata Udyan
  71. Dwivedi & Mehrotra 1995, ப. 64
  72. "Bombay Port Trust is 125". இந்தியன் எக்சுபிரசு. 26 June 1997. Archived from the original on 29 October 2008. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  73. Dwivedi & Mehrotra 1995, ப. 131
  74. Brihanmumbai Electric Supply and Transport
  75. "Tram-Car arrives". Brihanmumbai Electric Supply and Transport. Archived from the original on 22 October 2008. பார்க்கப்பட்ட நாள் 16 November 2008.
  76. "Introduction". Bombay Stock Exchange. Archived from the original on 19 September 2012. பார்க்கப்பட்ட நாள் 16 November 2008.
  77. "Electricity arrives in Bombay". Brihanmumbai Electric Supply and Transport (BEST). Archived from the original on 17 September 2008. பார்க்கப்பட்ட நாள் 15 November 2008.
  78. "The Society". Bombay Natural History Society]. Archived from the original on 30 October 2007. பார்க்கப்பட்ட நாள் 11 November 2008.
  79. First Session of the Congress
  80. D.D. Pattanaik. "The Swadeshi Movement : Culmination of Cultural Nationalism" (PDF, 163 KB). Orissa Review (Government of Orissa) (August 2005). http://orissagov.nic.in/e-magazine/Orissareview/aug2005/engpdf/the%20swadeshi%20movement.pdf. பார்த்த நாள்: 12 November 2008. 
  81. Agrawal & Bhatnagar 2005, ப. 124
  82. Dwivedi & Mehrotra 1995, ப. 160
  83. Greater Bombay District Gazetteer 1986, Home Rule Movement
  84. Greater Bombay District Gazetteer 1986, Dawn of Gandhian Era
  85. Greater Bombay District Gazetteer 1986, Non Co-operation Movement
  86. Lalitha Sridhar (21 April 2001). "On the right track". The Hindu (India) இம் மூலத்தில் இருந்து 21 January 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050121055953/http://www.hinduonnet.com/2001/04/21/stories/13211104.htm. 
  87. Taran N Khan (31 May 2008). "A slice of Persia in Dongri". Daily News & Analysis இம் மூலத்தில் இருந்து 5 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080705072840/http://www.dnaindia.com/report.asp?newsid=1167800. 
  88. Greater Bombay District Gazetteer 1986, Congress Session (of 1934)
  89. Greater Bombay District Gazetteer 1986, Economic Conditions (1933–1939)
  90. Lala 1992, ப. 98
  91. "Administration". Mumbai Suburban District. Archived from the original on 21 November 2008. பார்க்கப்பட்ட நாள் 6 November 2008.
  92. Heras Institute of Indian History and Culture 1983, ப. 113
  93. "Nehru Centre, Mumbai". Nehru Science Centre. Archived from the original on 3 November 2008. பார்க்கப்பட்ட நாள் 16 November 2008.
  94. "About Mumbai Metropolitan Region Development Authority (MMRDA)". Mumbai Metropolitan Region Development Authority. Archived from the original on 19 September 2008. பார்க்கப்பட்ட நாள் 13 November 2008.
  95. "About Navi Mumbai (History)". Navi Mumbai Municipal Corporation (NMMC). Archived from the original on 18 September 2008. பார்க்கப்பட்ட நாள் 13 November 2008.
  96. "The Great Mumbai Textile Strike... 25 Years On". Rediff.com India Limited. 18 January 2007 இம் மூலத்தில் இருந்து 31 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100531192635/http://www.rediff.com/news/2007/jan/18sld2.htm. 
  97. Hansen 2001, ப. 77
  98. "Profile of Jawaharlal Nehru Custom House (Nhava Sheva)". Jawaharlal Nehru Custom House. Archived from the original on 26 February 2008. பார்க்கப்பட்ட நாள் 13 November 2008.
  99. Naunidhi Kaur (5–18 July 2003). "Mumbai: A decade after riots". Frontline; the Hindu (India) 20 (14). http://www.hinduonnet.com/fline/fl2014/stories/20030718002704100.htm. பார்த்த நாள்: 13 November 2008. 
  100. "1993: Bombay hit by devastating bombs". BBC. 12 March 1993 இம் மூலத்தில் இருந்து 11 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081211202614/http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/12/newsid_4272000/4272943.stm. 
  101. Monica Chadha (12 September 2006). "Victims await Mumbai 1993 blasts justice". BBC இம் மூலத்தில் இருந்து 10 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081210005630/http://news.bbc.co.uk/2/hi/south_asia/4777323.stm. 
  102. "Mumbai Travel Guide". Municipal Corporation of Greater Mumbai இம் மூலத்தில் இருந்து 4 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081204051907/http://www.mcgm.gov.in/irj/portal/anonymous/qlmumbaitravelguide. 
  103. Sheppard 1917, ப. 38, 104–105
  104. Verma, Kalpana (4 November 2005). "Chhatrapati Shivaji Terminus chugs towards a new heritage look". Mumbai Newsline (Express Group). http://cities.expressindia.com/fullstory.php?newsid=155514. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
மும்பையின் வரலாறு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


விக்கிமீடியா பொதுவகத்தில்,
History of Mumbai
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பையின்_வரலாறு&oldid=4141725" இலிருந்து மீள்விக்கப்பட்டது