பெரோசா மேத்தா
சர் பெரோசா மேத்தா | |
---|---|
பிறப்பு | சர் பெரோசா மெர்வாஞ்சி மேத்தா 4 ஆகத்து 1845 மும்பை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 5 நவம்பர் 1915 மும்பை, பிரித்தானிய இந்தியா | (அகவை 70)
தேசியம் | பிரித்தானிய இந்தியர் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர், அரசியல்வாதி |
அறியப்படுவது | இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இணை நிறுவனரும் மற்றும் தலைவர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சர் பெரோசா மெர்வாஞ்சி மேத்தா (Sir Pherozeshah Merwanjee Mehta) (4 ஆகஸ்ட் 1845 - 5 நவம்பர் 1915) ஓர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவார். சட்டத்திற்கு இவர் செய்த சேவைக்காக இந்தியாவில் பிரித்தானிய அரசாங்கத்தால் இவருக்கு வீரத்திருத்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 1873 இல் பம்பாய் நகராட்சியின் (தற்போது பெருநகரமும்பை மாநகராட்சி) ஆனையாளராகவும் 1884, 1885, 1905 மற்றும் 1911 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.[1] மேத்தா 1890 களில் கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் தலைவராகவும் இருந்தார்.[2] 1889 இல் பம்பாயில் நடந்த காங்கிரசின் ஐந்தாவது அமர்வில் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார். அடுத்த அமர்வுக்கு கொல்கத்தாவில் இவர் தலைமை தாங்கினார்.[3]
பெரோசா மெர்வாஞ்சி மேத்தா, பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் இன்றைய மும்பை, 1845 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி குஜராத்தி மொழி பேசும் பார்சி சரதுசக் குடும்பத்தில் பிறந்தார். தொழிலதிபரான இவரது தந்தை, கொல்கத்தாவில் அதிக காலம் செலவிட்டார். இவரது அதிகம் படிக்கவில்லை. ஆனால் அவர் வேதியியல் பாடப்புத்தகத்தை குஜராத்தியில் மொழிபெயர்த்தார். மேலும் புவியியல் பாடப்புத்தகத்தையும் எழுதினார். பெரோசா மேத்தா 1864 இல் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பார்சி ஆவார். பல்கலைக்கழகத்தின் முதல்வரான சர் அலெக்சாண்டர் கிராண்ட், இவரை பல்கலைக்கழகத்தின் சகாவாக பரிந்துரைத்து, ஐரோப்பாவில் படிக்க ஜம்சேத்ஜி ஜிஜீபாய் நிறுவிய உதவித்தொகையைப் பெற முயன்றார். இருப்பினும், மேத்தா உதவித்தொகையைப் பெறவில்லை. [4]
ஆர்தர் கிராஃபோர்டின் சட்டப்பூர்வ வாதத்தின் போது , பம்பாய் நகராட்சியின் சீர்திருத்தங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். பின்னர், 1872 ஆம் ஆண்டின் பம்பாய் நகரவைச் சட்டத்தை உருவாக்கினார்.[5] இதனால் இவர் ‘பம்பாய் நகராட்சியின் தந்தை’ என்று கருதப்படுகிறார்.[6] இறுதியில், மேத்தா அரசியலில் நுழைவதற்காக தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டார்.
அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள்
[தொகு]1885 ஆம் ஆண்டில் பாம்பாய் மாகாணச் சங்கம் நிறுவப்பட்டபோது, மேத்தா அதன் தலைவராக ஆனார். [7] இந்தியர்களை மேற்கத்தியக் கல்வியைப் பெறவும் அதன் கலாச்சாரத்தைத் தழுவி இந்தியாவை மேம்படுத்தவும் ஊக்குவித்தார்.
மேத்தா 1887 இல் பம்பாய் சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், 1893 இல் பிரித்தானிய இந்தியாவின் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[8][9] 1894 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசால் கௌரவிக்கப்பட்டார். மேலும் 1904 ஆம் ஆண்டில் நைட் கமாண்டராக (கேசிஐஇ) நியமிக்கப்பட்டார்.[10][11]
1910 ஆம் ஆண்டில், மேத்தா பாம்பே குரோனிக்கிள் என்ற ஆங்கில மொழி வாராந்திர செய்தித்தாளைத் தொடங்கினார். இது அதன் காலத்தின் முக்கியமான தேசியவாதக் குரலாகவும், சுதந்திரத்திற்கு முந்தைய நிலையற்ற இந்தியாவின் அரசியல் எழுச்சிகளின் முக்கிய வரலாற்றுப் பதிப்பாகவும் மாறியது.[12] இவர் ஆறு ஆண்டுகள் பம்பாய் மாநகராட்சியில் உறுப்பினராக பணியாற்றினார்.
இறப்பு
[தொகு]மேத்தா நவம்பர் 5,1915 அன்று பம்பாயில் இறந்தார்.
கௌரவம்
[தொகு]தேசத்தை உருவாக்குவதில் இவரது முக்கியத்துவத்தைக் காட்டு வகையில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் பெரோசா மேத்தாவின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.[13] இவர் ‘பம்பாயின் சிங்கம்’ மற்றும் ‘பம்பாயின் முடிசூட்டப்படாத மன்னர்’ என்றும் அழைக்கப்பட்டார். மும்பையில், இன்றும் மேத்தா மிகவும் மதிக்கப்படுகிறார். சாலைகள், அரங்குகள் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேத்தாவின் வாழ்நாளில், பிரிட்டனில் இருந்து முழு அரசியல் சுதந்திரம் குறித்த யோசனையை ஒரு சில இந்தியர்கள் விவாதித்தார்கள் அல்லது ஏற்றுக்கொண்டார்கள். அரசியலில் இந்தியர்களின் செயல்பாட்டை ஆதரித்த ஒரு சிலரில் ஒருவராக, இவர் “பெரோசியசு மேத்தா” என்று செல்லப்பெயர் பெற்றார்.[14]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://support.google.com/youtube/topic/6151248?hl=en&ref_topic=3230811,3256124, Biography[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Rajya Sabha பரணிடப்பட்டது 14 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Presidents of Indian National Congress". Archived from the original on 26 October 2009. பார்க்கப்பட்ட நாள் 23 April 2014.
- ↑ "An Uncrowned King". http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/maltribune19151208-1.2.27.
- ↑ "Brihanmumbai Municipal Corporation". Tata Institute of Fundamental Research. theory.tifr.res.in. Archived from the original on 24 February 1999.
- ↑ "Political Figures". lokpriya.com. Archived from the original on 17 June 2001.
- ↑ "Great Minds". The Tribune. 30 January 2000. பார்க்கப்பட்ட நாள் 15 May 2017.
- ↑ Biography[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sir Pherozeshah Mehta – A biography. Vohuman.org. Retrieved on 29 November 2018.
- ↑ "To be Companions". The London Gazette. thegazette.co.uk. 2 June 1894. p. 2.
- ↑ The London Gazette. 21 June 1904. Supplement: 27688. p. 4010
- ↑ "Role of Press in India's Struggle For Freedom". Indian National Congress. aicc.org.in. Archived from the original on 5 November 2006.
- ↑ Portraits-Rajya Sabha பரணிடப்பட்டது 14 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Parsi Pioneers of modern India. The-south-asian.com. Retrieved on 29 November 2018.