வீரத்திருத்தகை
Jump to navigation
Jump to search
வீரத்திருத்தகை (knight) நடுக்காலத்தில் ஐரோப்பாவில் தொழில்முறையான வலிய குதிரைப்படை போர்வீரரைக் குறிக்கும். இவர்கள் இராச்சியத்தின் மிகயுயர்ந்த போர்வீரர்களாக அதனை எத்தனை இடர் வந்தபோதும் காக்க உறுதி பூண்டவர்கள். வீரத்திருத்தகைகள் பிரபுக்கள் அல்லது அரச வம்சத்தினருக்கு பணி புரிந்தனர். இதற்கு மாறாக அரசர்கள் அவர்களுக்கு நிலத்தைக் கொடுப்பது வழக்கமாயிருந்தது. வீரத்திருத்தகையினர் தன்மானத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதினர். இவர்களது நடத்தை விதிகள் வீரப்பண்புமரபு (chivalry) எனப்பட்டது. காப்புக் கட்டுப்பாட்டுணர்வு, மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை, பெருவீரம், இவற்றில் சிலவாம். அவர்களுக்கு சிறப்பான மேலங்கிச் சின்னமும் இருந்தது.