தாவூத் இப்ராகிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவூத் இப்ராகிம் கசுகர்
Dawood Ibrahim Kaskar
Dawood ibrahim2.jpg
பிறப்புதிசம்பர் 31, 1955 (1955-12-31) (அகவை 64)
இந்தியா இரத்னகிரி, மகாராஷ்டிரம் இந்தியா
இருப்பிடம்பாக்கித்தான் கராச்சி (சந்தேகப்பட்டது)
மாலி மாலி (சந்தேகப்பட்டது)
பணிகுற்றவாளி அமைப்புத் தலைவர்
வாழ்க்கைத்
துணை
சுபீனா சரீன்

தாவூத் இப்ராகிம் (உருது: داؤد ابراہیم) டி-கம்பெனி என்ற மும்பையில் அமைந்த குற்றவாளி அமைப்பின் தலைவர் ஆவார்.[1][2]இன்டர்போலின் குற்றவாளிகளின் பட்டியலில் கடுமையாகத் தேடப்படுவர்களில் ஒருவராக உள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்புகளை இவர் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி அதற்கு நிதியுதவி செய்துள்ளார்.[3]

2003இல் அமெரிக்க அரசு இவரை "உலகத் தீவிரவாதி" என்று குறித்து இவரின் பணம், சொத்துகளை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளுக்கு கோரிக்கை செய்துள்ளது. இந்திய அரசு இவர் தற்போது கராச்சியில் வசிக்கிறார் என்று கூறுகிறது, ஆனால் பாகிஸ்தான் அரசு இதனை மறுக்கின்றது.

2011இல் கராச்சி, பாகிஸ்தானில் நடைபெற்ற இவரின் மகனின் திருமணத்தில் பாகிஸ்தான் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் வந்ததாக தகவல்கள் உள்ளன.[2]

உலகில் அதி சக்திவாய்ந்த மனிதர்களில் இவரிற்கு 52ஆவது இடத்தை போர்ப்ஸ்(Forbes) சஞ்சிகை வழங்கியுள்ளது.[2]

ஆதாரங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவூத்_இப்ராகிம்&oldid=2711885" இருந்து மீள்விக்கப்பட்டது