உள்ளடக்கத்துக்குச் செல்

பிண்டாரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிண்டாரி கொள்ளைக் கூட்டத்தினருக்கு பயந்து, கிராமத்தையே தீ வைக்கும் மக்கள்

பிண்டாரிகள் (Pindaris)[1] என்பவர்கள் மொகலாயர் ஆட்சியின் போது இருந்த குதிரைப் படையினர்கள் ஆவார். மொகலாயர் ஆட்சி செயல்படாத நிலையில் இவர்கள் படையணிகளிலிருந்து விலகி, சிறு சிறு கூட்டங்களாக மாறி, அதில் பலமிக்கவனை தலைவனை கொண்ட வழிப்பறி கொள்ளைர்களாக மாறியவர்கள். பிண்டாரிகளில் உள்ள கொள்ளைக் கூட்டங்களில் முஸ்லிம் மற்றும் இந்துக்களில், முஸ்லீம்களே அதிகமாக இருந்தனர். பிண்டார்களில் பிரித்தானிய இந்தியாவின் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் பகுதிகளை அடக்கிய மத்திய மாகாணத்தில் அதிகம் இருந்தனர்.

கம்பெனி இராணுவத்திற்கு எதிராக நடந்த போர்களில், குறிப்பாக சிப்பாய்க் கிளர்ச்சி, 1857யின் போதும் இந்திய மன்னர்கள், பிண்டாரிகளை அதிக ஊதியம் கொடுத்து, போர்ப் பணிகளுக்கு அமர்த்திக் கொண்டனர்.[2]

ஆங்கிலேயேர்களுக்கு எதிரான போர்களில் பிண்டாரிகளை அதிகமாக ஈடுபடுத்திய மராத்தியப் பேரரசு, மூன்றாம் ஆங்கிலேயே - மராட்டியப் போரின் முடிவிற்கு பின் நடந்த சிப்பாய் கிளர்ச்சி, 1857க்குப் பின்னர் பிண்டாரிகளை பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு முற்றிலும் ஒழித்து விட்டது. தற்போதும் பிண்டாரிகள், மத்திய இந்தியாவில் பல இனக் குழுக்களாக வாழ்கின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிண்டாரிகள்&oldid=3878720" இலிருந்து மீள்விக்கப்பட்டது