போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
உலகிலேயே போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு (Airports Council International, ACI) என்னும் நிறுவனத்தின் கருத்து சேகரிப்பின் அடிப்படையில் உருவான புள்ளியியல் குறிப்புகளின் படி பயணிகளின் போக்குவரத்து முதலியன கீழே தரப்பட்டுள்ளன. அட்லான்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உலகின் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. இலண்டன் நகரத்தினுள் அமைந்துள்ள அனைத்து வானூர்தி நிலையங்களையும் கொண்டு உலகின் நகரமைப்பு வானூர்தி நிலையங்களில் வான்வழிப் போக்குவரத்து மிக்க நகரமாக அது விளங்குகிறது.
2019 புள்ளிவிவரங்களின் படி
[தொகு]இந்த தரவுகள் வானூர்தி நிலையங்களிலிருந்து எடுக்கப்பட்டது. [1]
| தர வரிசை |
வானூர்தி நிலையம் | இடம் | நாடு | குறியீடு (ஐஏடிஏ/ஐசிஏஓ) |
மொத்தப் பயணிகள் |
தரவரிசை எண் மாற்றம் |
% மாற்றம் |
|---|---|---|---|---|---|---|---|
| 1. | அட்லான்டா, ஜோர்ஜியா | ஐக்கிய அமெரிக்கா | ATL/KATL | 110,531,300 | |||
| 2. | சோயங், பெய்ஜிங், | சீனா | PEK/ZBAA | 100,011,000 | ▼1.0% | ||
| 3. | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா | ஐக்கிய அமெரிக்கா | LAX/KLAX | 88,068,013 | |||
| 4. | அல் கர்காவுடு, துபாய் | ஐக்கிய அரபு அமீரகம் | DXB/OMDB | 86,396,757 | ▼1 | ▼3.1% | |
| 5. | ஓட்டா, தோக்கியோ | ஜப்பான் | HND/RJTT | 85,505,054 | ▼1.7% | ||
| 6. | சிகாகோ, இலினொய் | ஐக்கிய அமெரிக்கா | ORD/KORD | 84,397,776 | |||
| 7. | இல்லிங்டன், இலண்டன் | ஐக்கிய இராச்சியம் | LHR/EGLL | 80,844,310 | |||
| 8. | புடோங், சாங்காய் | சீனா | PVG/ZSPD | 76,153,500 | |||
| 9. | இல் ட பிரான்சு, பாரிஸ் | பிரான்சு | CDG/LFPG | 76,150,007 | |||
| 10. | டாலஸ்-வொர்த் கோட்டை, டெக்சஸ் | ஐக்கிய அமெரிக்கா | DFW/KDFW | 75,066,956 | |||
| 11. | குவாங்சௌ, குவாங்டொங் | சீனா | CAN/ZGGG | 73,378,475 | |||
| 12. | கார்லெம்மர்மீர், வடக்கு ஒல்லாந்து | நெதர்லாந்து | AMS/EHAM | 71,706,999 | ▼1 | ||
| 13. | செக் லப் கொக், தீவுகள் | ஆங்காங் | HKG/VHHH | 71,541,000 | ▼5 | ▼5.4% | |
| 14. | இஞ்சியோன் | தென் கொரியா | ICN/RKSI | 71,169,516 | |||
| 15. | பிராங்க்ஃபுர்ட் | செருமனி | FRA/EDDF | 70,560,987 | ▼1 | ||
| 16. | டென்வர், கொலராடோ | ஐக்கிய அமெரிக்கா | DEN/KDEN | 69,015,703 | |||
| 17. | தில்லி | இந்தியா | DEL/VIDP | 68,490,731 | |||
| 18. | சாங்கி | சிங்கப்பூர் | SIN/WSSS | 68,300,000 | |||
| 19. | பேங்காக் | தாய்லாந்து | BKK/VTBS | 65,424,697 | |||
| 20. | குயின்சு, நியூயார்க்கு | ஐக்கிய அமெரிக்கா | JFK/KJFK | 62,551,072 | |||
| 21. | சிலாங்கூர், கோலாலம்பூர் | மலேசியா | KUL/WMKK | 62,336,469 | |||
| 22. | மத்ரித் | எசுப்பானியா | MAD/LEMD | 61,734,037 | |||
| 23. | கலிபோர்னியா | ஐக்கிய அமெரிக்கா | SFO/KSFO | 57,488,023 | ▼0.5% | ||
| 24. | செங்டூ, சிச்சுவான் | சீனா | CTU/ZUUU | 55,858,552 | |||
| 25. | ஜகார்த்தா | இந்தோனேசியா | CGK/WIII | 54,496,625 | ▼7 | ▼17.0% | |
| 26. | சென்சென், குவாங்டொங் | சீனா | SZX/ZGSZ | 52,931,925 | |||
| 27. | பார்செலோனா | எசுப்பானியா | BCN/LEBL | 52,686,314 | |||
| 28. | இசுதான்புல் | துருக்கி | IST/LTBA | 52,578,008 | |||
| 29. | வாஷிங்டன் | ஐக்கிய அமெரிக்கா | SEA/KSEA | 51,829,239 | |||
| 30. | நெவாடா | ஐக்கிய அமெரிக்கா | LAS/KLAS | 51,537,638 | |||
| 31. | ஒர்லாண்டோ, புளோரிடா | ஐக்கிய அமெரிக்கா | MCO/KMCO | 50,613,072 | |||
| 32. | மிசிசாகா, ஒன்றாரியோ | கனடா | YYZ/CYYZ | 50,499,431 | ▼1 | ||
2012 புள்ளித்தொகை (முழு ஆண்டின் முன்னோட்டமாக)
[தொகு]வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டு முன்னோட்ட தரவுகள் பின்வருமாறு.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2019 Annual Airport Traffic Report (PDF). United States: Port Authority of New York and New Jersey. 2020.
- ↑ "2012 Passenger Traffic (Preliminary)". Archived from the original on 2013-05-17. Retrieved 2013-04-26.
- ↑ Preliminary Air Traffic Results for 2006 from Airports Council International