மியூனிக் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மியூனிக் வானூர்தி நிலையம்
Flughafen München
Flughafen munchen logo.png
Vorfeld Terminal 1 I.JPG
ஐஏடிஏ: MUCஐசிஏஓ: EDDM
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர்/இயக்குனர் புளுகபென் முன்கென் கெம்பிஎச்
சேவை புரிவது மியூனிக், செருமனி
அமைவிடம் பிரைசெங் அருகே
மையம்
  • ஆக்சுபர்க் ஏர்வேசு
  • லுஃப்தான்சா
  • ஏர் டோலோமிடி
  • ஏர் இன்டிபென்டன்சு
  • பின் ஏர்
  • கேண்டர்
உயரம் AMSL 1,487 ft / 453 m
ஆள்கூறுகள் 48°21′14″N 011°47′10″E / 48.35389°N 11.78611°E / 48.35389; 11.78611ஆள்கூறுகள்: 48°21′14″N 011°47′10″E / 48.35389°N 11.78611°E / 48.35389; 11.78611
இணையத்தளம் www.munich-airport.de
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
08R/26L 4,000 13,123 பைஞ்சுதை
08L/26R 4,000 13,123 பைஞ்சுதை
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
m ft
H 30 98 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள் 3,83,60,604
மாற்றம் 11-12 Green Arrow Up Darker.svg1.6%
வானூர்தி இயக்கங்கள் 3,99,581
மாற்றம் 10-11 Green Arrow Up Darker.svg5.5%
மூலங்கள்: பயணியர் போக்குவரத்து[1]
யூரோகண்ட்ரோல் அமைப்பில் செருமானிய வான்போக்குவரத்து தகவல் வெளியீடு[2]
கடவுச்சீட்டில் நிலைய முத்திரை

மியூனிக் வானூர்தி நிலையம் Munich Airport, (ஐஏடிஏ: MUCஐசிஏஓ: EDDM), இடாய்ச்சு மொழி: Flughafen München) செருமனியின் மியூனிக் நகரத்திலிருந்து வடகிழக்கே 28.5 km (17.7 mi) தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[2] இது லுஃப்தான்சா நிறுவனத்திற்கும் இசுடார் அல்லையன்சில் உறுப்பினராக உள்ள வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முனைய நடுவமாக விளங்குகிறது. தொன்மையான பிரைசெங் நகரில் அமைந்துள்ள இந்த நிலையம் முன்னாள் பவேரிய பிரதமராக இருந்த பிரான்சு யோசஃப் இசுட்ராசு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது நான்கு நகராட்சிகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.

1995இல் 15 மில்லியனாக இருந்த பயணிகள் போக்குவரத்து 2006இல் 30 மில்லியனாக இரட்டித்துள்ளது.[3] 1996இல் இது செருமனியின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக உயர்ந்தது. லுஃப்தான்சா நிறுவனத்திற்கு பிராங்க்ஃபுர்ட்டிற்கு அடுத்து இரண்டாவது முனைய நடுவமாக உள்ளது. 2012இல் ஐரோப்பாவில் 38,360,604 பயணிகள் பயன்படுத்திய இந்நிலையம் ஐரோப்பாவில் ஏழாவதாகவும்[1] உலகில் 30ஆவதாகவும்[4] விளங்குகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]