இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() இலண்டன் ஹீத்ரோ முனையம் 5 கட்டிடம் | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||||||
உரிமையாளர் | பிஏஏ நிறுவனம் | ||||||||||||||
இயக்குனர் | ஹீத்ரோ வானூர்தி நிலைய நிறுவனம் | ||||||||||||||
அமைவிடம் | இல்லிங்டன் பரோ, இலண்டன், ஐக்கிய இராச்சியம் | ||||||||||||||
மையம் |
| ||||||||||||||
உயரம் AMSL | 83 ft / 25 m | ||||||||||||||
இணையத்தளம் | www.heathrowairport.com | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2011+2010) | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: தேசிய வான் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐரோகண்ட்ரோலில் உள்ள யூகே வான்ப்பறப்பு தகவல் பதிப்பு ஐக்கிய இராச்சிய குடிமை வான்பறப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் |
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், (London Heathrow Airport) அல்லது ஹீத்ரோ[1] ஐக்கிய இராச்சியத்தின் முதன்மையான, மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையம் ஆகும். ஹீத்ரோ ஐரோப்பாவின் மிகவும் பயணியர் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விடக் கூடுதலான பன்னாட்டு பயணியர் போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.[2]
ஹீத்ரோ பிஏஏ நிறுவனத்திற்கு உடமையானது; அந்நிறுவனமே இந்த வானூர்தி நிலையத்தை இயக்குகிறது. இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் மேலும் ஆறு நிலையங்கள் உடமையாக உள்ளன.[3] இந்த நிறுவனம் எசுப்பானிய ஃபெரோவியல் நிறுவனத்திற்கு சொந்தமானது.[4] பிரித்தானிய ஏர்வேசின் முதன்மை அச்சுமையமாக ஹீத்ரோ விளங்குகிறது; பிஎம்ஐ நிறுவனத்திற்கு பெரிய அச்சு மையமாக உள்ளது.
ஹீத்ரோ மத்திய இலண்டனின் மேற்கில் 15 மைல்கள் (24 km) தொலைவில் இல்லிங்டன் பரோவில் 12.14 சதுரகி.மீ (4.69 ச.மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரு இணையான ஓடுபாதைகள் கிழக்கு மேற்காக உள்ளன. ஐந்து வானூர்தி நிலைய முனையங்கள் உள்ளன. மூன்றாவது ஓடுபாதை அமைக்க திட்டங்கள் உரையாடப்படுகின்றன.
ஓடுபாதை பயன்பாடு[தொகு]
ஹீத்ரோ இரண்டு ஓடுபாதைகளையும் செயல்பாட்டில் வைத்துள்ளது. இவை:
- வடக்கு ஓடுபாதை (09L/27R)
- தெற்கு ஓடுபாதை (09R/27L).
தற்போது, அந்த நேரத்தில் மேற்கொள்ளும் அணுக்கப் பாதையையொட்டி, ஒரு ஓடுபாதை புறப்படுவதற்கும் மற்றொன்று இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அணுகுகின்ற வானூர்திகளுக்கு பொதுவாக இரு தேர்வுகளுக்கும் இடையே 12 மணிநேர சுழற்சியில் ஓடுபாதைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அண்மையில் வசிப்போருக்கு இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாதும் உள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடி கூடினால் இரு ஓடுபாதைகளிலும் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கப்படும்.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ (ஐஏடிஏ: LHR, ஐசிஏஓ: EGLL)
- ↑ Busiest Airports - the busiest airports in the world
- ↑ "UK airports owned and operated by BAA". 2007-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "BAA: "Who owns us?"". 2007-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-03-06 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் Heathrow Airport என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Heathrow Airport Consultative Committee
- The building of Heathrow Video at the Internet Archive
- Heathrow Air Watch – Information on pollution levels around Heathrow
- Heathrow airport's resident TV crew – official website பரணிடப்பட்டது 2012-07-23 at the வந்தவழி இயந்திரம்
- Longford Residents' Association (thisislongford.com) archived copy