சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
CharlotteDouglas International Airport Logo.png
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்சார்லெட்டு நகரம்
இயக்குனர்சார்லட், வட கரொலைனா
சேவை புரிவதுசார்லெட் பெருநகரப் பகுதி
அமைவிடம்சார்லெட், வட கரொலினா, ஐக்கிய அமெரிக்கா
மையம்யுஎஸ் ஏர்வேஸ்
உயரம் AMSL748 ft / 228 m
இணையத்தளம்www.charlotteairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
18L/36R 8,676 2,644 அசுபால்ட்டு/பைஞ்சுதை
18C/36C 10,000 3,048 பைஞ்சுதை
18R/36L 9,000 2,743 பைஞ்சுதை
5/23 7,502 2,287 அசுபால்ட்டு/பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள்41,228,372
வானூர்தி இயக்கங்கள்552,093
மூலம்: கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம்.[1] பயணிகள் புள்ளிவிவரங்கள்.[2]

சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Charlotte Douglas International Airport, (ஐஏடிஏ: CLTஐசிஏஓ: KCLTஎப்ஏஏ LID: CLT)) ஐக்கிய அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தில் சார்லட்டில் அமைந்துள்ள குடிசார்-படைசார் கூட்டு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 1935இல் சார்லட் நகராட்சி வானூர்தி நிலையமாக நிறுவப்பட்ட இந்த நிலையம் 1954இல் சார்லட் மேயராக இருந்த பென் எல்பெர்ட் டக்ளஸ் நினைவாக டக்ளஸ் நகராட்சி வானூர்தி நிலையமாக பெயர் மாற்றப்பட்டது. 1982இல் இதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. இது யுஎஸ் ஏர்வேசின் மிகப்பெரும் முனைய நடுவமாக விளங்குகிறது. 2008இல் இங்கிருந்து 175 சேரிடங்களுக்கு உள்ளூர் மற்றும் பன்னாட்டு சேவைகள் இயக்கப்பட்டன.[3] 2009இல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் 9வது போக்குவரத்து மிகுந்த நிலையமாக இருந்தது.[4] 2012இல் உலகின் 23வது மிகுந்த பயணிகள் போக்குவரத்து உடைய வானூர்தி நிலையமாக இருந்தது.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. FAA Airport Master Record for CLT (Form 5010 PDF)
  2. "Passenger statistics for CLT". 2010-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-05 அன்று பார்க்கப்பட்டது.
  3. Rothacker, Rick; Harrison, Steve. "Charlotte Faces Loss of Hub Status and Potential for Big Service Cuts". The Charlotte Observer. Archived from the original on பிப்ரவரி 21, 2008. https://web.archive.org/web/20080221045642/http://www.airportbusiness.com/article/article.jsp?id=8959&siteSection=35. பார்த்த நாள்: January 1, 2008.  "டெல்ட்டா ஏர்லைன்சின் முதன்மை மையமான ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் சார்லட்டிலிருந்து 240 மைல்கள் (390 km) தொலைவில் இருப்பதால், யுஎஸ் ஏர்வேசும் டெல்ட்டாவும் இணைவது, தனது அளவுள்ள நகரமொன்றிலிருந்து மிகக் கூடுதலாக 135 சேரிடங்களுக்கு தொடர்ந்த சேவை பெறும், சார்லட் வானூர்தி நிலையத்திற்கு கவலை அளிக்கிறது."
  4. The Bureau of Transportation Statistics
  5. "US Airways defying US trends with healthy growth at its main Charlotte hub". anna.aero. September 5, 2008. http://www.anna.aero/2008/09/05/us-airways-defying-us-trends-with-healthy-growth-at-its-main-charlotte-hub/. பார்த்த நாள்: September 6, 2008. 

வெளி இணைப்புகள்[தொகு]