டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டல்லாசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம்
DFWLOGOTAGLINE.png
DFWAirportOverview.jpg
ஐஏடிஏ: DFWஐசிஏஓ: KDFW
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் டாலஸ் நகரம்

வொர்த் கோட்டை நகரம்

இயக்குனர் டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம்
சேவை புரிவது டாலஸ்-வொர்த் கோட்டை கூட்டுப் பெருநகரம்
அமைவிடம் கொப்பல், யூலெசு,கிரேப்வைன், இர்விங்
மையம்
உயரம் AMSL 607 ft / 185 m
ஆள்கூறுகள் 32°53′49″N 097°02′17″W / 32.89694°N 97.03806°W / 32.89694; -97.03806ஆள்கூறுகள்: 32°53′49″N 097°02′17″W / 32.89694°N 97.03806°W / 32.89694; -97.03806
இணையத்தளம் www.dfwairport.com
நிலப்படம்
FAA airport diagram
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
13L/31R 9,000 2,743 பைஞ்சுதை
13R/31L 9,301 2,835 பைஞ்சுதை
17C/35C 13,401 4,085 பைஞ்சுதை
17L/35R 8,500 2,591 பைஞ்சுதை
17R/35L 13,401 4,085 பைஞ்சுதை
18L/36R 13,400 4,084 பைஞ்சுதை
18R/36L 13,400 4,084 பைஞ்சுதை
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
ft m
H1 158 48 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2010)
பயணிகள் 56,906,610 (8வது) (+1.6%)
வானூர்தி இயக்கங்கள் 652,261 (4வது) (+2.1%)
மூலம்: வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு[1][2]

டாலசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dallas/Fort Worth International Airport, (ஐஏடிஏ: DFWஐசிஏஓ: KDFW)) டாலஸ் நகருக்கும் வொர்த் கோட்டை நகருக்கும் இடையில் அமைந்துள்ள டெக்சஸ் மாநிலத்தின் மிகுந்த போக்குவரத்துடைய வானூர்தி நிலையமாகும்.[1] இது பொதுவாக டாலசு–வொர்த் கோட்டை பெருநகரப் பகுதிகள் இணைந்த கூட்டு நகரப் பகுதிக்கு சேவை வழங்குகிறது.

டிஎஃப்டபுள்யூ என்ற ஆங்கிலச் சுருக்கத்தினால் அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் உலகின் வானூர்தி இயக்கப் போக்குவரத்து மிகுந்த நிலையங்களில் நான்காவதாக உள்ளது.[2] பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இது உலகின் எட்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரும் முனைய மையமாக விளங்குகிறது.

டிஎஃப்டபுள்யூ நிலையம் ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது. தனியான அஞ்சலக சுட்டெண்ணைக் கொண்ட இந்நிலையத்தின் பொதுச்சேவைகளுக்கு தனி அமைப்பு உள்ளது. ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறை இதற்கெனத் தனியாக டிஎஃப்டபுள்யூ ஏர்போர்ட், டிஎக்ஸ் என்ற அடையாளத்தை வழங்கியுள்ளது.[3]

18,076 ஏக்கர்கள் (7,315 ha) நிலப்பரப்பில்[4] அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நிலப்பரப்பளவில் டெக்சசின் மிகப்பெரிய ஒன்றாகவும் ஐக்கிய அமெரிக்காவில் டென்வர் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]

இந்த வானூர்தி நிலையத்தின் நிர்வாகத்தை டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம் மேற்கொள்கிறது. இதன் வாரிய உறுப்பினர்களை இந்த நிலையத்தின் உரிமையாளர் நகரங்களான டாலசும் வொர்த் கோட்டையும் நியமிக்கின்றன. இந்த வானூர்தி நிலையம் நான்கு புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளதால், ஆளுமை குறித்த பல சட்டபூர்வ வழக்குகள் எழுந்துள்ளன. தனது அண்மைப் பகுதிகளுடன் சுமுக உறவை மேற்கொள்ள நிலைய வாரியம் இர்விங், யூலெசு, கிரேப்வைன், கொப்பல் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வாக்களிக்க உரிமை இல்லா உறுப்பினர்களை ஏற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Passenger Traffic 2010 FINAL". Airports Council International. மே 12, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 6, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Traffic movements 2010 FINAL". Airports Council International. செப்டம்பர் 27, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 6, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Contact Us". Dallas/Fort Worth International Airport. July 6, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "DFW Airport Fast Facts". Dallas/Fort Worth International Airport. ஜூலை 12, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 6, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "U.S. Department of Transportation, Research and Innovative Technology Administration, Bureau of Transportation Statistics, Office of Airline Information, T-100 International Segment Data, Special Calculation, September 2010". Bureau of Transportation Statistics. August 6, 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]