லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Los Angeles International Airport, (ஐஏடிஏ: LAX, ஐசிஏஓ: KLAX, எப்ஏஏLID: LAX)) ஐக்கிய அமெரிக்காவின் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளில் இரண்டாவதாக விளங்கும் லாசு ஏஞ்சலசு பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும். பெரும்பான்மையான நேரங்களில் இந்த நிலையம் இதன் [பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கக் குறியீடான LAX (எல்ஏஎக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது லாசு ஏஞ்சலசு நகரத்தின் தென்மேற்கில் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் அமைந்துள்ளது. நகர மையத்திலிருந்து 16 மைல்கள் (26 km) தொலைவிலுள்ள வெஸ்ட்செஸ்டரில் அமைந்துள்ளது.