சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||
---|---|---|---|
![]() | |||
![]() | |||
ஐஏடிஏ: SFO – ஐசிஏஓ: KSFO – எஃப்ஏஏ அ.அ: SFO | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||
உரிமையாளர் | சான் பிரான்சிஸ்கோ வானூர்தி நிலைய ஆணையம் | ||
சேவை புரிவது | சான் பிரான்சிஸ்கோ | ||
அமைவிடம் | சான் மாத்தியோ கவுன்ட்டி (அரசமைப்பில்லாதது) | ||
மையம் | |||
உயரம் AMSL | 13 ft / 4 m | ||
ஆள்கூறுகள் | 37°37′08″N 122°22′30″W / 37.61889°N 122.37500°Wஆள்கூறுகள்: 37°37′08″N 122°22′30″W / 37.61889°N 122.37500°W | ||
இணையத்தளம் | |||
நிலப்படம்(கள்) | |||
எஃப்ஏஏ நிலைய வரைபடம் | |||
சான் பிரான்சிஸ்கோ தீபகற்பத்தில் நிலையத்தின் அமைவிடம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
10L/28R | 11,870 | 3,618 | அசுபால்ட்டு |
10R/28L | 10,602 | 3,231 | அசுபால்ட்டு |
1R/19L | 8,648 | 2,636 | அசுபால்ட்டு |
1L/19R | 7,500 | 2,286 | அசுபால்ட்டு |
புள்ளிவிவரங்கள் (2012) | |||
வானூர்தி இயக்கங்கள் | 424,566 | ||
பயணிகள் | 44,477,209 | ||
[1] and எஃப்ஏஏ[2] |
சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் (San Francisco International Airport, (ஐஏடிஏ: SFO, ஐசிஏஓ: KSFO, எப்ஏஏ LID: SFO)) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகர மையத்திலிருந்து 13 மைல்கள் (21 km) தெற்கே அமைந்துள்ள பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது அரசமைப்பு இல்லாத சான் மாத்தியோ கவுன்ட்டியில் மில்பிரே நகருக்கும் சான் புருனோ நகருக்கும் இடையே அமைந்துள்ளது.[3] இது பொதுவாக அமெரிக்கரால் SFO ("San FranciscO" என்பதில் இருந்து) எனக் குறிப்பிடப்படுகிறது. இங்கிருந்து வட அமெரிக்காவின் அனைத்து இடங்களுக்கும் வான்பறப்புகள் உள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கான நுழைவாயிலாகவும் இது விளங்குகிறது.
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் மிகப் பெரும் வானூர்தி நிலையமாக விளங்கும் இது கலிபோர்னியாவில் லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அடுத்த இரண்டாவது போக்குவரத்து மிக்க நிலையமாகவும் உள்ளது. 2009இல் இந்த நிலையம் ஐக்கிய அமெரிக்காவி்ன் பத்தாவது போக்குவரத்து மிக்க நிலையமாக விளங்கியது.[4]உலகளவில் இருபதாவது நிலையில் இருந்தது.[5] வெர்ஜின் அமெரிக்காவின் முதன்மைத் தளமாகவும் இது விளங்குகிறது.[6] யுனைட்டெட் ஏர்லைன்சின் ஒரே பராமரிப்புத் தளமாகவும் உள்ளது.
பயணிகளின் வசதிக்காக இந்த வானூர்தி நிலையத்தில் பலவித உணவு மற்றும் பானங்கள் வசதிகளும், அங்காடிகளும்,பொது குளியலறைகளும், சாமான் வைப்பிடங்களும்,மருத்துவ மனையும் உள்ளன. வழிதவறிய அல்லது தனித்து விடப்பட்ட பயணிகளுக்காகவும் படைத்துறைப் பயணிகளுக்காகவும் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு லூயி ஏ.டுர்பென் வான்போக்குவரத்து அருங்காட்சியகம், நிலைய நிர்வாக ஆணையத்தின் நூலகம் மற்றும் தற்காலிக/நிரந்தர கலைக் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இலவச ஒய்-ஃபை வசதியும் பெரும்பாலான முனையங்களில் வழங்கப்பட்டுள்ளன.[7]
சான் மாத்தியோ கவுன்ட்டியில் அமைந்திருந்தாலும் இதன் உரிமையாளராக சான் பிரான்சிஸ்கோ நகர மற்றும் கவுன்ட்டி உள்ளது. இந்த நகரமைப்பின் சான் பிரான்சிஸ்கோ வானூர்தி நிலைய ஆணையத்தால் உருவாக்கப்பட்ட எஸ்எஃப்ஓ என்டர்பிரைசஸ் இதன் வணிகமய கையகப்படுத்துதல்களையும் அவ்வாறு பெற்ற சொத்துக்களை நிர்வகிப்பதையும் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக இந்த நிறுவனம் ஹொண்டுராசின் வானூர்தி நிலையங்களின் உரிமையாளராகவும் பராமரிப்பாளராகவும் உள்ளது.[8][9][10][11]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "SFO – San Francisco International Airport". San Francisco International Airport. பார்த்த நாள் August 3, 2009.
- ↑ FAA Airport Master Record for SFO (Form 5010 PDF), effective December 20, 2007
- ↑ "San Francisco International Airport". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்த்த நாள் May 3, 2009.
- ↑ "San Francisco breaks into US top 10; seven of top 20 airports still reported growth in 2008". Anna Aero. PPS Publications Ltd (March 13, 2009). பார்த்த நாள் August 3, 2009.
- ↑ "Year to date Passenger Traffic – April 2009". Airport Councils International (July 16, 2009). பார்த்த நாள் August 3, 2009.
- ↑ "About Us". Virgin America. மூல முகவரியிலிருந்து September 25, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் August 3, 2009.
- ↑ "Free Wi-Fi at SFO". San Francisco Airport Commission. மூல முகவரியிலிருந்து September 25, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 31, 2013.
- ↑ Smith, Matt (March 28, 2001). "Flying Blind". SF Weekly. http://www.sfweekly.com/2001-03-28/news/flying-blind/. பார்த்த நாள்: August 3, 2009.
- ↑ "Financial Audits". City and County of San Francisco (January 22, 2007). பார்த்த நாள் August 3, 2009.
- ↑ "SFO Enterprises, Inc.". SF Weekly. http://www.sfweekly.com/related/to/SFO+Enterprises+Inc./. பார்த்த நாள்: August 3, 2009.
- ↑ The Shock Doctrine, Naomi Klein; pg. 396.