இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய வானூர்தி நிலைய ஆணையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
வகை பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை 1994
தலைமையகம் இராசீவ் காந்தி பவன்,
சப்தர்சங் வானூர்தி நிலையம், புது தில்லி-110003
முக்கிய நபர்கள் வி.பி.அகர்வால், தலைவர்
தொழில்துறை பறப்பியல் துறை
உற்பத்திகள் வானூர்தி நிலையம், ஏடிசி, சிஎன்எஸ்
பணியாளர் 22,000
இணையத்தளம் www.aai.aero
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் அமைந்துள்ள இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம்.

இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் (Airports Authority of India, AAI) இந்தியாவில் உள்ள குடியியல் வானூர்தி நிலையங்களையும் ஏடிசி, சிஎன்எஸ் போன்ற வழிகாட்டு வசதிகளையும் இயக்குகின்ற பொறுப்புடைய நடுவண் அரசு அமைப்பாகும். இந்த அமைப்பு 125 வானூர்தி நிலையங்களை இயக்குகிறது; இவற்றில் 11 பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் 8 சுங்கச்சாவடியுள்ள நிலையங்களும் 81 உள்ளூர் நிலையங்களும் படைத்துறை வளாகங்களில் அமைந்துள்ள 25 குடியியல் நிலையங்களும் அடக்கமாகும். இந்திய வான்வெளி முழுமையாகவும் அடுத்துள்ள பெருங்கடல் பகுதிகளிலும் இது வான்வழி போக்குவரத்து மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பான வான்வழிப் பயணத்திற்காக தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வானூர்தி நிலையங்களிலும் 25 மற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமைந்த கட்டமைப்பையும் மேலாண்மை செய்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]