ஏர்ஏசியா இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்ஏசியா இந்தியா
AirAsia New Logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
- - -
நிறுவல்28 மார்ச்சு 2013 (2013-03-28)
செயற்படு தளங்கள்சென்னை சர்வதேச விமான நிலையம்
வானூர்தி எண்ணிக்கை1
மகுட வாசகம்Now Everyone Can Fly
தாய் நிறுவனம்
தலைமையிடம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்
 • எஸ். இராமதுரை (தலைவர்)
 • மித்து சாண்டில்யா (முதன்மை செயல் அதிகாரி)
 • ரதான் டாட்டா (தலைமை ஆலோசகர்)
 • டோனி ஃபெர்நாண்டஸ் (நிறுவனர், ஏர் ஏசியா)
இணையத்தளம்www.airasia.com

ஏர்ஏசியா இந்தியா[1] இந்திய-மலேசிய விமானசேவை ஆகும். இது ஏர்ஏசியாவின் துணையுடன் இயங்கி வரும் இந்த விமான சேவை ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டணத்துடன் கூடிய சேவையாகும்.[2] டாட்டா குழுமமும் ஏர்ஏசியாவும் சேர்ந்து இதனை நடத்தப்போவதாக பிப்ரவரி 19, 2013 ல் அறிவிக்கப்பட்டது. இதில் ஏர்ஏசியாவிற்கு 49 சதவீத பங்குகளும், டாடாவிற்கு 30 சதவீத பங்குகளும் மீதமுள்ள 21 சதவீத பங்குகளை அமித் பாடீயாவும் பகிர்ந்துகொண்டார்கள். இதன் மூலம் டாடா நிறுவனம் 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் காலடியினை விமான சேவையில் பதிக்க முடிந்தது.[3][4]

முதன் முதலில் அந்நிய விமானசேவைக்கான கிளையினை இந்தியாவில் தொடங்கியது ஏர்ஏசியா ஆகும்..[5] இது உலகிலேயே மிகக்குறைவாக ஒரு இருக்கை மற்றும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ 1.25 கட்டணத்தினை மட்டுமே வசூலிக்கிறது.[6]

வரலாறு[தொகு]

இந்தியா குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் வரி மற்றும் இதர வசதிகளை 2012 ல் செய்தது. இதன் மூலம் ஏர்ஏசியா அக்டோபர் 2012 ல் தனது சேவையினை தொடங்கியது. இந்திய அரசாணைப்படி (2013 ல்) அந்நிய முதலீடு 49 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். எனவே பிப்ரவரி 2013 ல் ஏர்ஏசியா இந்தியாவில் 49 சதவீத பங்குகளுடன் விமானச்சேவையினை இயக்குவதற்காக விண்ணப்பித்தது. [7] அதேபோல் டாட்டாவின் மகன்கள் நிறுவனம் மற்றும் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் உடன் இணைந்து விமான சேவையினை இந்தியாவில் இயக்கப்போவதாக ஏர்ஏசியா அறிவித்தது. இந்த நிறுவனத்திற்கு டாட்டா குழுமம் சார்பாக இருவர் இயக்குநர்களாக இருக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏர்ஏசியா சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்த நகரங்களுடன் விமான சேவையினை சென்னை யினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தியது.[8] இந்திய விமான துறையில் இந்த முதல் அந்நிய முதலீட்டால் ஏர்ஏசியா கட்டணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. இதற்குக் காரணம் விமான போக்குவரத்து அதிகரித்ததும், இந்திய விமானத்துறை தங்களை பலப்படுத்தியதும் ஆகும்.[9]

ஏர்ஏசியா முதலில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த விமான சேவையில் முதலீடு செய்தது. இந்திய முழுவதும் உள்ள பயண ஏஜென்டுகளிடம் சரியான ஒப்பந்தங்கள் இல்லாததால் ஏர்ஏசியா தனது இயக்கத்தினை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் பின் தங்கியே இருந்தது. பயணிகளை விமானம் மூலம் ஏற்றிச் செல்வதற்காக ஏர்ஏசியாவிற்கு மார்ச் 3,2013 ல் அனுமதி அளிக்கப்பட்டது. ஏர்ஏசியா இந்தியாவில் விமான சேவையினை தொடங்கப் போவதென அறிவித்த இரண்டு மாதங்களுக்குள் டாடாவுடன் இணைந்து மார்ச் 28, 2013 ல் ஏர்ஏசியா என்ற தனியார் நிறுவனத்தினை இந்தியாவில் நிறுவியது. ஏப்ரல் மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற நேர்முகத்தேர்வு மூலம் தங்கள் நிறுவனத்தின் விமானத்திற்கான கேப்டன் மற்றும் இதர வேலையாட்களை தேர்வு செய்தது.

2014, மே 1 மற்றும் 2 ம் தேதிகளில் DGCA விடம் இருந்து ஏர் ஆபரேடர் அனுமதியினை பெறுவதற்காக விமானங்கள் கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டன. அதன் பின்னர் விமான சேவையினை இந்தியாவில் இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி ஏர்ஏசியாவிற்கு வழங்கப்பட்டது.

மேலாண்மை[தொகு]

இந்த விமான சேவை தொடங்கும் போது, ஏர்ஏசியா நிறுவனத்திற்கு ரத்தன் டாட்டா தலைவராகப் பொறுப்பேற்பதைத் தான் விரும்புவதாக டோனி ஃபெர்னேன்டஸ் அறிவித்தார். ஆனால் அப்பொறுப்பை ஏற்க டாடா மறுத்தாலும் இந்த நிறுவனத்திற்கு (ஏர்ஏசியா) தலைமை அறிவுரையாளராக ஏர்ஏசியாவின் மேலாண்மையில் இருக்கப் பின்னாளில் சம்மதித்தார்.[10] மே 15, 2013 ல் மேலாண்மை ஆலோசகரான மிட்டு சண்டிலியாவை தலைமை நிர்வாக அதிகாரியாக ஏர்ஏசியா நிறுவனம் நியமனம் செய்தது. ஒரு மாதத்திற்கு பின்பு ஜூன் 17 ல், எஸ். ராமதுரை தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இவர் இந்திய மென்பொருள் நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசசின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்தவர்.

விமான குழுமங்கள்[தொகு]

ஏர்ஏசியா ஏர்பஸ் 320-200 விமான குழுக்களை இயக்குவதாக திட்டமிட்டது. அதன்படி ஆரம்பத்தில் மூன்று முதல் நான்கு வரையிலான 320 வகை ஏர்பஸ் விமானங்களை வாங்கி வேகமாக தனது விமான குழுக்களை விரிவுபடுத்தியது.[11] இதன் முதல் விமானமான ஏர்பஸ் 320-200 விமானம் VT-ATF என பதிவுசெய்யப்பட்டு, ஏர்பஸ்ஸின் தொழிற்சாலையான துலூஸ்ஸிலிருந்து (பிரான்ஸ்), சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மார்ச் 22, 2014 கொண்டு வரப்பட்டது. மேலும் ஏர்ஏசியா நிறுவனம் பத்து ஏர்பஸ் 320-200 வகை விமானங்களைப் பெற அனுமதியினைப் பெற்றுள்ளது.[12]

குறிப்புகள்:[தொகு]

 1. "AirAsia incorporates company for Indian venture". The Times of India (New Delhi).Press Trust of India. (31 March 2013).
 2. "Does Low Cost Mean High Risk?"". The New York Times (28 April 2010).
 3. "AirAsia to tie up with Tata Sons for new airline in India". Times of India (21 February 2013).
 4. "Telestra Tradeplace and Air Asia to form Air Asia India". Economic Times (Press release) (20 February 2013).
 5. "FIPB to take up AirAsia India entry proposal on March 6". The Hindu Business Line (Retrieved 22 February 2013).
 6. "Passengers' perceptions of low cost airlines and full service carriers". Cranfield University (2005).
 7. "AirAsia India to take to the skies in Q4". MCIL Multimedia Sdn Bhd (Retrieved 21 February 2013).
 8. "Tatas plan return flight with AirAsia on board". NDTV Profit (21 February 2013).
 9. "AirAsia's India foray good news; see more competition: KPMG". CNBC (21 February 2013).
 10. "AirAsia wants Ratan Tata to head JV". The Economic Times (24 February 2013).
 11. "AirAsia to invest up to $60 mn in airline venture with Tata". The Economic Times (21 February 2013).
 12. "Air Asia India". Cleartrip.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ஏசியா_இந்தியா&oldid=2918885" இருந்து மீள்விக்கப்பட்டது