சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
சிறீ வெங்கடேசுவரா மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுழைவாயில்
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்2006
முதல்வர்மரு. எஸ். ரத்னசாமி
கல்வி பணியாளர்
150 ஏறத்தாழ
பட்ட மாணவர்கள்150 ஒவ்வொறு வருடமும் (எம். பி. பி. எஸ்)
அமைவிடம்
அரியூர்
, ,
வளாகம்நாட்டுப்புறம், 80 ஏக்கர்கள் (0.32 km2)
இணையதளம்www.svmcpondy.co

சிறீ வெங்கடேசுவரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டம், அரியூர் பகுதியில் 2006இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும்.[1]

வளாகம்[தொகு]

இந்த வளாகமானது 80 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தினுள் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பல் மருத்துவமனை, மாணவர்கள் தங்கும் விடுதி, வேலைச் செய்வோர் தங்கும் வீடுகள், விளையாட்டு திடல் போன்றவை உள்ளன.[2]

அமைவிடம்[தொகு]

இது புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை 45 எ வில், அரியூர் என்னும் ஊரில் உள்ளது. இங்கிருந்து புதுச்சேரி 16 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் 24 கி.மீ தொலைவிலும் உள்ளது.

நிறுவனர்[தொகு]

இது சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளையின் ஒரு அங்கம் ஆகும்.

சார்பு[தொகு]

இது பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்தது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]