உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியனூர்
நகரம்
வில்லியனூரில் உள்ள புகழ் பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில்
வில்லியனூரில் உள்ள புகழ் பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்65 km2 (25 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்34,383
 • அடர்த்தி530/km2 (1,400/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
605 110
தொலைபேசிக் குறியீடு91413
வாகனப் பதிவுPY-05

வில்லியனூர் (Villianur), இந்தியாவின், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இது ஒரு கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுச்சேரி மாவட்டத்தின், வில்லியனூர் வட்டத்தின் தலைமையகம் ஆகும். இங்கு புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் ஆனது, இந்நகரத்தின் முக்கிய அடையாளமாகும்.[1]

மக்கள் தொகை

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வில்லியனூர் நகரின் மக்கள் தொகை 34,383 ஆகும்.[2] புதுச்சேரி மற்றும் உழவர்கரைக்கு அடுத்தபடியாக புதுச்சேரி மாவட்டத்தில், இது மூன்றாவது பெரிய நகரமாகும்.

அமைவிடம்

[தொகு]

வில்லியனூர் ஆனது, புதுச்சேரி நகரிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில், விழுப்புரம்புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 45A இல் அமைந்துள்ளது. இது புதுச்சேரி நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். இங்கிருந்து விழுப்புரம் 31 கி.மீ தொலைவிலும் மற்றும் கடலூர் 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.

அரசியல்

[தொகு]

இந்த நகரம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]

போக்குவரத்து

[தொகு]

பேருந்து போக்குவரத்து

[தொகு]

இந்நகரம், விழுப்புரம்புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை 45A இல் அமைந்துள்ளதால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும், இந்நகரின் வழியாக நின்று செல்கிறது. இங்கிருந்து கடலூருக்கும் பேருந்து செல்கிறது.

தொடருந்து போக்குவரத்து

[தொகு]

இந்நகரில் ஒரு தொருந்து நிலையம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பயணிகள் தொடருந்தும் இங்கு நின்று செல்கிறது.

வானூர்தி போக்குவரத்து

[தொகு]

இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.

புகழ் பெற்ற இடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archeologists should have a say in Villianur temple"".
  2. https://www.census2011.co.in/data/town/644959-villianur-puducherry.html
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியனூர்&oldid=3898640" இலிருந்து மீள்விக்கப்பட்டது