தருமாபுரி நகராட்சி வார்டு

ஆள்கூறுகள்: 11°56′22″N 79°46′12″E / 11.939568°N 79.77°E / 11.939568; 79.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும் புதுச்சேரி மாவட்டத்தில்,வடக்கு வருவாய் கோட்டத்தில் இருக்கும் உழவர்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு தட்டாஞ்சாவடி வருவாய் கிராமத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். மேலும் உழவர்கரை நகராட்சி கீழ் வரும் நகராட்சி வார்டகளில் ஒன்று ஆகும் இவ்வூரில் ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி ,அரசு ஆரம்ப பள்ளி ,அரசு உயர்நிலை பள்ளி ,அரசு அங்கன்வாடி மையம் ,அரசு நியா விலை கடை உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் இவ்வூரில் கால்நடை சந்தை நடப்பது வழக்கமாகும் .1973 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரம் இயக்ககம் நடத்திய திட்ட அரசியின் மூலம் ஒவ்வொரு வாரமும் 300 கால்நடை சந்தைப்படுத்தப்படுகிறது என்பது அறியப்பட்டது.இந்த சந்தைக்கு புதுச்சேரி பகுதியில் உள்ள 42 கிராமங்களிலும் தென்னாற்காடு பகுதியின் 37 கிராமங்களில் இருந்தும் விலங்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

தருமாபுரி
—  நகராட்சி வார்டு  —
தருமாபுரி
இருப்பிடம்: தருமாபுரி

, புதுச்சேரி

அமைவிடம் 11°56′22″N 79°46′12″E / 11.939568°N 79.77°E / 11.939568; 79.77
நாடு  இந்தியா
பிரதேசம் புதுச்சேரி
மாவட்டம் புதுச்சேரி
வட்டம் உழவர்கரைவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்[1]
முதலமைச்சர் வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2]
மக்களவைத் தொகுதி தருமாபுரி
மக்கள் தொகை 8,666 (2011)
மொழிகள் பிரெஞ்சு,ஆங்கிலம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புவியமைப்பு[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11.939568° N 79.77°E ஆகும்.

நகராட்சி வார்டு 1991 -மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2001-மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011-மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
தருமாபுரி 3096 4725 8666

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php