மணவெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனவெளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மணவெளி
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)புதுச்சேரி
கொம்யூன்அரியாங்குப்பம்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->605 007
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /
மணவெளி
மணவெளி கிராம நிர்வாக அலுவலகம்

மணவெளி (Manavely) என்பது இந்தியாவின், புதுச்சேரி பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாங்குப்பம் கொம்யூனில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

புவியியல்[தொகு]

வடக்கில் காக்காயன் தோப்பும், கிழக்கில் வீராம்பட்டினம் என்ற பெரிய கடற்கரை கிராமமும், தெற்கில் சங்கரபரணி ஆறும், மேற்கில் அரியாங்குப்பம் (மேற்கும்) மணவெளிக்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் தொகையியல்[தொகு]

மணவெளி நகரத்தின் படிப்பறிவு சராசரி 81.49% ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 88.89% ஆகவும், பெண்களின் படிப்பறிவு சதவீதம் 74.13% ஆகவும் இருக்கிறது. மக்கள் தொகையில் 10% எண்ணிக்கையினர், 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

போக்குவரத்து[தொகு]

அரியாங்குப்பம் – சின்ன வீராம்பட்டினம் சாலையில் அரியாங்குப்பத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் மணவெளி அமைந்துள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து அரியாங்குப்பம் வழியாக பாகூர், மடுகரை, கரையாம்புதூர் செல்லும் உள்ளூர் பேருந்துகள் எல்லாவற்றிலும் மணவெளி நகரத்தைச் சென்று அடையலாம். அரியாங்குப்பத்திலிருந்து கிழக்கு நோக்கி 1.5 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றாலும், மணவெளியை அடையலாம். பாண்டிச்சேரியிலிருந்து, சின்ன வீராம்பட்டினம் செல்லும் பாண்டிச்சேரி சாலை போக்குவரத்துக் கழகப் பேருந்தான, தடம் எண் 2A-வில் பயணம் செய்தும் மணவெளியை சென்றடையலாம்.

சாலை இணைப்புகள்[தொகு]

அரியாங்குப்பம் – சின்ன வீராம்பட்டினம் சாலை வழியாக மணவெளி பாண்டிச்சேரியுடன் இணைகிறது. இதைத் தவிர தேசிய நெடுஞ்சாலை எண் 45A, மனவெளி பிரதான சாலை என்ற பெயரில் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு அருகிலிருந்து மற்றொரு சாலை புறப்படுகிறது.

சுற்றுலா[தொகு]

சின்ன வீராம்பட்டினம் கடற்கரை[தொகு]

மணவெளியிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் சின்னவீராம்பட்டிணம் அமைந்துள்ளது. பிரபலமான விண்ட்பிளவர் தங்குமிடம் & சிபா [2] சின்ன வீராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. சின்ன வீராம்பட்டினத்தில் தான் சங்கரபரணி ஆறு, வங்காள விரிகுடா கடலுடன் கலக்கிறது.

அரசியல்[தொகு]

இது மணவெளி சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-23.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணவெளி&oldid=3566290" இலிருந்து மீள்விக்கப்பட்டது