அரியாங்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியாங்குப்பம்
அரியநகர்
நகரம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Puducherry" does not exist.
ஆள்கூறுகள்: 11°53′49″N 79°48′19″E / 11.896989°N 79.805156°E / 11.896989; 79.805156ஆள்கூற்று: 11°53′49″N 79°48′19″E / 11.896989°N 79.805156°E / 11.896989; 79.805156
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்47,021
மொழிகள்
 • அலுவல்மெழிபிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்605 007
தொலைபேசி குறியீட்டு எண்0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

அரியாங்குப்பம் (Ariyankuppam) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், உள்ள ஓர் கிராமம் ஆகும். இது அரியநகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகர் அரியாங்குப்பம் ஒன்றியத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. புதுச்சேரி நகரத்தை போலவே அரியநகர் சாலைகள் நேர்கோட்டில் அமைந்துள்ளன.

பெயர் காரணம்[தொகு]

அரிக்கமேடு என்ற பழமையான தொல்லியல் இடமே அரியாங்குப்பம் என இன்று அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

பழங்காலத்தில் அரிக்கமேடு ஒரு சர்வதேச வாணிப மையமாகவும் மற்றும் துறைமுகமாகவும் செயல்பட்டிருந்தது. ரோமானிய நாடுடன் வாணிப தொடர்பு கொண்டதற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 47,021 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரியாங்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.49% ஆகும்.

புவியமைப்பு[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11.54° N 79.48°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரியாங்குப்பம் புதுச்சேரி - கடலூர் சாலையில் தெற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது.

சுற்றுலா ஈர்ப்புகள்[தொகு]

அரிக்கமேடு தொல்லியல் இடம்[தொகு]

அரிக்கமேடு என்னும் தொல்லியல் இடம், புதுச்சேரிக்குத் தெற்கே 6 கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள் கடலூர் சாலை வழியாக அரியாங்குப்பம் சென்று அங்கிருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையில் "காக்காயன்தோப்பு" என்னும் சிற்றூருக்குச் செல்லவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அங்கு ஒரு தொல்லியல் அருங்கட்சியமும் உள்ளது.

செங்கழுநீர் அம்மன் கோவில், பெரிய வீராம்பட்டினம்[தொகு]

பதினாறாம் நூற்றாண்டு சக்தி தலம் பெரிய வீராம்பட்டினதில் அமைத்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் அம்மன் பெயர் செங்கழுநீர் அம்மன் ஆகும். பெரிய வீராம்பட்டினம் அரியாங்குப்பத்திலிருந்து கிழக்கில் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. அரியாங்குப்பதிலிருந்து RC -26 சாலை பெரிய வீராம்பட்டினத்திற்க்கு செல்கிறது.

ஆடி வெள்ளி திருவிழா இங்கு பெரும்விழாவாக கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு காலம் முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களால் தேர் வடம் இழுக்க ஆடி ஐந்தாம் வெள்ளி பெரும்விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி அரசு அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழா காண பெரிய வீராம்பட்டினம் கூடுவதால், புதுச்சேரி-கடலூர் தடத்திலுள்ள பெரும்பாலான பேருந்துகள் அன்றைய தினம் பெரிய வீராம்பட்டினம் செல்கிறது.

சுன்னாம்பாறு படகு குழாம்[தொகு]

சுணாம்பாறு படகு குழாம் புதுச்சேரியிலிருந்து கடலூர் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் (மேற்கு) ஊராட்சி அமைத்துள்ளது.

சுணாம்பாறு படகு குழாமத்திலிருந்து படகு மூலம் பேரடைஸ் (Paraside) கடற்கரைக்கு செல்லலாம்.

பச்சைவாழி அம்மன் கோவில்[தொகு]

பச்சைவாழி அம்மன் இடம்கொண்ட மன்ணாதசுவாமி திருக்கோவில் அரியாங்குப்பத்திலுள்ள ஒரு பழமையான கோவில் ஆகும். பொங்கல் அன்று இங்கு பெரும்விழா கொண்டாடப்படுகிறது. இக்கோவில் அரியாங்குப்பத்திலிருந்து சுன்னாம்பாறு படகு குழாம் செல்லும் வழியில் டோல்கேட்டில் அமைத்துள்ளது.

புனித அரோக்கிய அன்னை ஆலயம்[தொகு]

புனித அரோக்கிய அன்னை ஆலயம் 1690இல் கட்டப்பட்டது. பலமுறை மாற்றங்கள் கண்ட இவ்வாலயம், இன்று புது பொலிவுடன் காணப்படுகிறது. இவ்வாலயம் புதுச்சேரில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும்.

புதுச்சேரி புதிய துறைமுகம்[தொகு]

புதுச்சேரி புதிய துறைமுகம், பெரிய வீராம்பட்டினத்தில் அமைத்துள்ளது. இங்கிருந்து புதிய கலங்கரை விளக்கம் போன்ற சுற்றுல சின்னகளை பார்க்கமுடியும்.

சின்ன வீராம்பட்டினம் கடற்கரை[தொகு]

சுணாம்பாறு படகு குழாமத்திற்கு சொந்தமான பேரடைஸ் (Paraside) இல்லம் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ளது. கடற்கரை கைபந்து விளையாட ஏதுவான இடமாக சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளது.

அரியாங்குப்பம் ஒன்றியம்[தொகு]

அரியாங்குப்பம் ஒன்றியதில் உள்ள ஊர்களின் பட்டியல்

 • அபிசேகப்பக்கம்
 • ஆண்டியர்பாளையம்
 • எடையார்பாளையம்
 • காக்காயன்தோப்பு
 • காசிதிட்டு
 • கோர்கமேடு
 • மனவெளி
 • நல்லவாடு
 • நாணமேடு
 • நோனங்குப்பம்
 • ஓடைவெளி
 • புதுகுப்பம்
 • பூரணங்குப்பம்
 • வீராம்பட்டினம்
 • தவளகுப்பம்
 • தானாம்பாளையம்
 • தேடுவார்நத்தம்
 • திம்ம நாயகன் பாளையம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியாங்குப்பம்&oldid=2695734" இருந்து மீள்விக்கப்பட்டது