சுல்தான்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுல்தான்பேட்டை (Sultanpet) இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தின், சூலூர் வட்டத்தில் அமைந்த ஒரு ஊராகும். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சுல்தான்பேட்டையில் இயங்குகிறது. சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது பஞ்சாயத்து கிராமங்கள் கொண்டது. [1]

இது சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோயம்புத்தூரிலிருந்து கிழக்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

எல்லைகள்[தொகு]

சுல்தான்பேட்டை வட்டத்தின் எல்லைகளாக வடக்கில் சூலூர் மற்றும் பல்லடம்; கிழக்கில் பொங்கலூர் எல்லைகளாகக் கொண்டது.

அருகில் உள்ள நகரங்கள்[தொகு]

திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் சுல்தான்பேட்டைக்கு அருகில் உள்ள நகரங்களாகும்.

போக்குவரத்து[தொகு]

சுல்தான்பேட்டைக்கு செல்வதற்கு தொடருந்து வசதிகள் இல்லாவிட்டாலும், கோயம்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி போன்ற நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  1. இன்போ பொறியியல் கல்லூரி, சக்தி முக்கிய வீதி எஸ். எஸ். குளம்
  2. ஸ்ரீ ரெங்கநாதர் பொறியியல் கல்லூரி, அத்திப்பாளையம்
  3. ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூர், பெத்தபுரம், பிழிச்சி கிராமம்
  4. கலைமகள் மேனிலைப் பள்ளி, பூராண்டாம்பாளையம்

மேற்கோள்கள்[தொகு]

  1. பஞ்சாயத்து கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்பேட்டை&oldid=2747608" இருந்து மீள்விக்கப்பட்டது