செஞ்சேரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் காமநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். தற்போது கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ளது. இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு நல்ல தோற்றத்துடன் காணப்படுகிறது.

வரலாறு[தொகு]

பொருளாதாரம்[தொகு]

  • இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை தொழிலையே நம்பி உள்ளனர்.
  • மேலும் இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலையே நம்பி உள்ளனர்.
  • மேலும் அரசு பள்ளி இங்கு உள்ளது.
  • தனியார் பள்ளிகள் இங்கு உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து மாவட்ட தலைநகரான திருப்பூர் பேருந்து வசதி உள்ளது. மேலும் பல்லடம், காமநாயக்கன் பாளையம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சூலூர், உடுமலைப்பேட்டை, பெதம்பம்பட்டி என அருகாமை நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இங்கு 1,765 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 49.02% பேர் ஆண்களும் 50.98% பேர் பெண்களும் வசிக்கின்றனர்.[சான்று தேவை]

தை பூச தேர் திருவிழா[தொகு]

இங்கு மலைமேல் அமைந்துள்ள மந்தரகிரி வேலாயுத சுவாமிக்கு வருடாவருடம் தேர்த் திருவிழா மிகவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 2 தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. முதல் தேர் செஞ்சேரிப்புத்தூர் தேர் இழுக்கப்படும். பிறகு இரண்டாவது தேர் செஞ்சேரிமலை தேர் இழுப்பர். இவ்விரு தேர்களையும் புதுப்பிக்க வருடாவருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் தேர்த் திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதுண்டு.

சின்ன மலை[தொகு]

செஞ்சேரிமலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மற்றொரு கோவில் சின்ன மலை பெருமாள் கோவில் ஆகும். இங்கு புரட்டாசி மாதத்தில் தேர்த் திருவிழா நடைபெறும். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இந்து அறநிலையத்துறை கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கோவில் மலைமேல் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சேரிமலை&oldid=2632923" இருந்து மீள்விக்கப்பட்டது