பெதம்பம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெதம்பம்பட்டி என்பது தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிறு நகரம் ஆகும். இது உடுமலை - செஞ்சேரிமலை மாநில நெடுஞ்சாலையும் பொள்ளாச்சி - தாராபுரம் இணைக்கும் இணைப்பு சாலையாக இவ்வூர் இருக்கிறது. இவ்வூரின் அருகில் அமைந்துள்ள சோமவாரப்பட்டி ஊரில் வருடாந்திர தை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிறப்பு[தொகு]

  1. இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ள மால கோவில் மிகவும் அற்புதமான கோவிலாகும்.இங்கு உள்ளூர் மட்டுமல்ல பிற மாவட்ட மக்களும்,பிற மாநிலத்தில் இருந்து வந்து இங்கு வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
  2. இங்கு மக்களின் நலன்கருதி முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டது.

மக்கள் தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இவ்வூரில் 2,547 பேர் வசிக்கின்றனர். இவற்றில் 51.02% பேர் ஆண்களும் 48.92% பேர் பெண்களும் வசிக்கின்றனர்.

வசதிகள்[தொகு]

  1. இவ்வூரில் வாராந்திர சந்தை வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது.
  2. மேலும் பெதம்பம்பட்டி வட்டார விவசாய பொருட்கள் இங்கு ஏலம்விட படுகிறது.
  3. தமிழக அரசின் கூட்டுறவு பண்டக சாலை இங்கு தான் அமைந்துள்ளது.
  4. பெதம்பம்பட்டி நகரை சுற்றி கிட்டத்தட்ட 10 கும் மேற்பட்ட நூற்பாலைகள் அமைந்துள்ளது.
  5. இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது
  6. இங்கு தனியார் கல்லூரிகளும் அமைந்துள்ளது.
  7. நான்முக ரோடு அமைந்த நகராக உள்ளது.

போக்குவரத்து[தொகு]

பெதம்பம்பட்டி நகரில் இருந்து பொள்ளாச்சி,தாராபுரம்,உடுமலைப்பேட்டை,சுல்தான்பேட்டை,காமநாயக்கன் பாளையம்,பல்லடம்,திருப்பூர்,குடிமங்கலம் ஆகிய நகரங்களுக்கும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு போக்குவரத்து சேவை உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெதம்பம்பட்டி&oldid=2675760" இருந்து மீள்விக்கப்பட்டது