பொள்ளாச்சி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொள்ளாச்சி வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் தலைமையகமாக பொள்ளாச்சி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் உள்ளன.

வட்டத்தை பிரித்தல்[தொகு]

பொள்ளாச்சி வட்டத்தின் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளைக் கொண்டு, 22 நவம்பர் 2012 அன்று கிணத்துக்கடவு வட்டம் நிறுவப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தின் வடசித்தூர் உள்வட்டம் (9 கிராமங்கள்), கிணத்துக்கடவு உள்வட்டம் (12 கிராமங்கள்), கோவில்பாளையம் உள்வட்டம் (14 கிராமங்கள்) ஆகிய மூன்று உள்வட்டங்கள் அடங்கிய கிணத்துக்கடவு வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இவ்வட்டம் 575,928 மக்கள்தொகை கொண்டுள்ளதாகக் குறிக்கிறது. மக்கள்தொகையில், 285,835 ஆண்களும், 290,093 பெண்களும் உள்ளனர். 165,932 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள் தொகையில் 55.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.09% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 46,989 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 110,843 மற்றும் 9,655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.71%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 2.12% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  2. பொள்ளாச்சி வட்டத்தின் 96 வருவாய் கிராமங்கள்
  3. புதிய கிணத்துக்கடவு வட்டம் தொடக்கம்
  4. பொள்ளாச்சி வருவாய் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளாச்சி_வட்டம்&oldid=3565643" இலிருந்து மீள்விக்கப்பட்டது