பிள்ளையார்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளையார்குப்பம்
Pillaiyarkuppam
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->607 402
அஞ்சல் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

பிள்ளையார்குப்பம் (Pillaiyarkuppam) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்[1] ஆகும். புதுச்சேரி மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலை 45ஏ க்குக் கிழக்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

மேற்கில் குடியிருப்புபாளையம், வடக்கில் கிருமாம்பாக்கம், கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் மனப்பட்டு ஆகியன பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாலைப் போக்குவரத்து[தொகு]

பிள்ளையார்குப்பம் கிராமம் நரம்பைச் சாலை வழியாக புதுச்சேரியுடன் இணைகிறது. பனித்திட்டுபுதுக்குப்பம் சாலை பிள்ளையார்குப்பம் வழியாகச் செல்கிறது.

கிராமங்கள்[தொகு]

பிள்ளையார்குப்பம் கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • பிள்ளையார்குப்பம்
  • கந்தன்பேட்டை
  • நரம்பை
  • வள்ளுவர்மேடு

அரசியல்[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் பிள்ளையார்குப்பம் கிராமம் இருக்கிறது.

செசுட் பெரிய கடற்கரை[தொகு]

மகீந்திரா குழும நிறுவனத்தின் செசுட் பெரிய கடற்கரை [2] என்ற பொழுது போக்கிடம் பிள்ளையார்குப்பம் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான துணிகர விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளையார்குப்பம்&oldid=3850475" இலிருந்து மீள்விக்கப்பட்டது