புதுச்சேரியில் சுற்றுலாத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி கடற்கரை, புதுச்சேரி

புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடலான வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ளது. இந்த கடற்கரை நகரம் பிரஞ்சு காலனித்துவ கட்டிடங்கள் மற்றும் தமிழ் பாணி நகர்ப்புற கட்டிடக்கலை கொண்டுள்ளது[1].

பேரடைஸ் கடற்கரை[தொகு]

பேரடைஸ் கடற்கரை, புதுச்சேரி

புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. புதுவையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இங்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பேரடைஸ் கடற்கரைக்கு, சுண்ணாம்பார் ரிசார்ட் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பேரடைஸ் கடற்கரைக்கு சுண்ணாம்பார் ரிசார்டில் இருந்து நாம் படகு மூலம் பயணம் செய்ய வேண்டும். சுண்ணாம்பார் ரிசார்ட் NH45A அமைந்துள்ளது.

புதுச்சேரி கடற்கரை[தொகு]

புதுச்சேரி கடற்கரை, புதுச்சேரி

புரொமனேட் கடற்கரை (Promenade Beach) புதுச்சேரியை ஒட்டிய கடற்கரைகளில் மிகவும் பிரபலமானது. இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இதை ஒட்டி 1.2 கிலோமீட்டர் நீண்ட சாலை உள்ளது. இது போர் நினைவகத்தில் (War Memorial) தொடங்கி டூப்ளே பூங்கா (Dupliex Park) வரை உள்ள குபேர் (Goubert) வீதியில் முடிவடைகிறது. இங்கு பிரஞ்சு தூதரகம் அமைந்துள்ளது.

இங்கு லா காபே என்ற ஓரு உணவகம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் அதிக பிரஞ்சு பாரம்பரிய கட்டிடத்தை காணலாம்.

ஓயிட் டவுன்[தொகு]

ஓயிட் டவுன், புதுச்சேரி
ஓயிட் டவுன், புதுச்சேரி

ஓயிட் டவுன் புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ளது. பிரஞ்சு காலனித்துவ பாரம்பரிய கட்டிடங்கள், ஓயிட் டவுனில் உள்ளன.

புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. 2014ஆம் ஆண்டின் டிசம்பர் கணக்கின் படி, ஹொண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனம், ஏறத்தாழ 300 ரூபாய் நாள் வாடகைக்கும், பல்சர் இரு சக்கர வாகனம் ஏறத்தாழ 350 ரூபாய் நாள் வாடகைக்கும் கிடைக்கிறது. ஓயிட் டவுனில் இரு சக்கர வாகனங்கள் அல்லது மிதிவண்டியில் சுற்றுவது ஒரு சுகமான அனுபவம்.

அரவிந்தர் ஆசிரமம்[தொகு]

அரவிந்தர் ஆசிரமம் அரவிந்த கோஷ் என்ற ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் , கவிஞர், தத்துவஞானியால் 1926ல் நிறுவப்பட்டது. அரவிந்தர் ஆசிரமத்தின் பார்வையாளர்கள் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]