சௌராஷ்டிர மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணம் ராஜ்கோட் நகரத்தை தலைநகராக கொண்டு 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய இந்திய அரசில் இருந்த மாகாணம் ஆகும்.[1]1 சூலை 1950இல் ஸ்டேட் பாங்க் ஆப் சௌராஷ்டிரா துவக்கப்பட்டது. 1948இல் சௌராஷ்டிர மாகாணத்தின் முதல் தலைமை அமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.

இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்டிர மாகாணம் 15-02-1948-இல் சௌராட்டிர தீபகற்பம் எனும் கத்தியாவார் தீபகற்பத்தில் இருந்த 222 பெரிய மற்றும் சிறிய சுதேசி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. சௌராஷ்டிரா மாகாணத்தின் முதல் முதலமைச்சராக யு. என். தேபர் தேர்ந்தெடுக்க்ப்பட்டார்.

கத்தியவார் தீபகற்பம் அல்லது சௌராஷ்டிரம் என்பது புவியியல் அடிப்படையில் ஒரே நிலப்பகுதியை குறிக்கிறது. இப்பகுதியில் வாழும் மக்களை சௌராஷ்டிரர்கள் அல்லது கத்தியவாரிகள் என்றழைக்கப்படுகிறார்கள்.

சர்தார் வல்லபாய் படேலின் ராஜதந்திரத்தாலும், மகாத்மா காந்தியின் முயற்சியாலும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு கப்பம் கட்டிக் கொண்டு, சௌராஷ்டிர பகுதியை ஆண்டு கொண்டிருந்த 222 பெரிய மற்றும் சிறிய சுதேச சமஸ்தான மன்னர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அரசில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் 24-01-1948-இல் கையொப்பமிட்டனர். சுதேச சமஸ்தானங்கள் ஒன்றிணைத்து அதற்கு சௌராஷ்டிர மாநிலம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாநிலத்தை உருவாக்க சர்தார் வல்லபாய் படேல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். [2][3][4][5]

சௌராஷ்டிர மாகாணத்தில் இணைந்த சுதேசி சமஸ்தானங்கள்[தொகு]

பவநகர் சுதேச சமஸ்தான மன்னரின் அஞ்சல் தலை

சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்தில் இணைந்த பெரிய சுதேச சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானம், நவநகர் சமஸ்தானம், ஜூனாகத் சமஸ்தானம், பவநகர் சமஸ்தானம், போர்பந்தர் சமஸ்தானம், காம்பே சமஸ்தானம், வாத்வான் சமஸ்தானம், இதார் சமஸ்தானம், இராஜ்பிப்பிலா சமஸ்தானம், ஜாம்நகர் சமஸ்தானம், பாலிதானா சமஸ்தானம், மோர்வி சமஸ்தானம், ராஜ்கோட் சமஸ்தானம், கட்சு சமஸ்தானங்கள் முக்கியமானைவகள்.

சௌராஷ்டிர தீபகற்பத்தில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானம் மூன்றாவது பெரிய இந்திய சுதேச சமஸ்தானம் ஆகும். இதன் நிலப்பரப்பு மேற்கே துவாரகை முதல் தெற்கே பம்பாய் மாகாணம் வரை பரவியிருந்தது. பரோடா மன்னர் பிரதாப்சிங் கெய்க்வாட், 04-09-1948-இல் தான் சௌராஷ்டிர மாகாணம் அல்லது ஐக்கிய கத்தியவார் மாகாணத்துடன் தனது சமஸ்தானத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். பின்னர் பரோடா சமஸ்தானம் 01-05-1949-இல் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[6][7][8]நவம்பர் மாதம் 1948-ஆம் ஆண்டு ஐக்கிய கத்தியவார் மாகாணத்தை, சௌராஷ்டிர அல்லது சௌராஷ்டிர மாகாணம் என்று மறு பெயரிட்டனர். சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் ஜூனாகாத் சமஸ்தானம், சனவரி மாதம், 1949-ஆம் ஆண்டில் சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

சௌராஷ்டிர மாகாண முதலமைச்சர்கள்[தொகு]

  • யு. என். தேபர், 1948 முதல் 1954 முடிய
  • ரசிகலால் உமேச்சந்த், திசம்பர் 1954 முதல் 1956 முடிய.

பம்பாய் மாகாணத்துடன் இணைப்பு[தொகு]

சௌராஷ்டிர மாகாணம் 01-11-1956-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு, பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்ட்து.

புதிய குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா நிலப்பரப்புகள்[தொகு]

இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, சௌராஷ்டிர பகுதியின் நிலப்பரப்புகள் பம்பாய் மாகாணத்திலிருந்து பிரித்து புதிதாக துவக்கப்பட்ட குஜராத் மாநிலத்துடன் 01-05-1960-ஆம் நாளில் இணைக்கப்பட்டது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராஷ்டிர_மாகாணம்&oldid=2805814" இருந்து மீள்விக்கப்பட்டது