அவகாசியிலிக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடல்லவுசிப் பிரபு

வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.[1]

வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.

ஒன்றிணைப்பு[தொகு]

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் வாரிசு இழப்புக் கொள்கை எனும் அவகாசியிலிக் கொள்கையின் படி, சதாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் மன்னராட்சி (1855), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது.[2] அயோத்தி இராச்சியம் மட்டும் மோசமான ஆட்சி முறை என காரணம் காட்டி 1858ல் பிரித்தனிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

சான்சி[தொகு]

சான்சியின் மகாராசா கங்காதர இராவ் நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.[3] மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.[4] ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[5]

அவத்[தொகு]

ஆங்கிலேயர்கள், அவத் பகுதியின் அயோத்தி இராச்சியத்தின் நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவத் நாட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

7. நவீன இந்திய வரலாறு பிபன் சந்திரா தமிழாக்கம் இரா.சிசுபாலன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாசியிலிக்_கொள்கை&oldid=3541944" இருந்து மீள்விக்கப்பட்டது