உள்ளடக்கத்துக்குச் செல்

அகமது ஷா துரானி

ஆள்கூறுகள்: 31°37′10″N 65°42′25″E / 31.61944°N 65.70694°E / 31.61944; 65.70694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமது ஷா துரானி
احمد شاه دراني
பாட்ஷா
காஷி
ஷா துர்ரி துர்ரான் ("மன்னர், முத்துக்களின் முத்து")
அகமது ஷா துரானியின் உருவப் படம், அண். 1757, பிரான்சின் தேசிய நூலகம்
துரானிப் பேரரசின் முதலாம் எமீர்
ஆட்சிக்காலம்1747–1772
முடிசூட்டுதல்சூன் 1747[1]
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னையவர்தைமூர் ஷா துரானி
பிறப்புஅகமது கான் அப்தாலி
1720–1722[2]:287
ஹெறாத், ஹெறாத்தின் சதோசாய் சுல்தானகம் (தற்கால ஆப்கானித்தான்)[3]
அல்லது முல்தான், முகலாயப் பேரரசு (தற்கால பாக்கித்தான்)[4][5][6]
இறப்பு (அகவை 49–52)[2]:409
மருப், கந்தகார் மாகாணம், துராணிப் பேரரசு
(தற்கால ஆப்கானித்தான்)
புதைத்த இடம்சூன் 1772
அகமது ஷா துரானியின் சமாதி, காந்தாரம், ஆப்கானித்தான்
31°37′10″N 65°42′25″E / 31.61944°N 65.70694°E / 31.61944; 65.70694
துணைவர்
இபத்துன்னிசா பேகம் (தி. 1757)
பெயர்கள்
அகமது ஷா அப்தாலி துர்ரி துரான்
சகாப்த காலங்கள்
18-ஆம் நூற்றாண்டு
அரசமரபுதுரானி அரசமரபு
தந்தைமொகமம்து சமான் கான் அப்தாலி
தாய்சர்கோனா அனா[7]
மதம்சுன்னி இசுலாம்
அரச முத்திரைஅகமது ஷா துரானி احمد شاه دراني's signature

அகமது ஷா துரானி (Ahmad Shah Durrani, பஷ்தூ/பாரசீக மொழி: احمد شاه دراني‎, 1722 – 1773) ஆப்கானித்தானத்தின் முதல் அமீர் ஆவார். இவர் அகமது ஷா அப்தலி என்றும் அறியப்படுகிறார். இவர் அப்தாலி இனத்தின் தலைவர். மற்ற ஆப்கானிய தலைவர்களைவிட இவர் மிகுந்த செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்.[8][9][10][11] இவரது பிறப்புக் குறித்துத் தெளிவான குறிப்பு இல்லை. அப்போது ஆப்கானித்தான், பாரசீகத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இவரது ஆட்சியின்போது டில்லியில் வலுவற்றிருந்த மொகலாயப் பேரரசைப் பலமுறை தாக்கி லாகூர், காஷ்மீர் போன்ற பகுதிகளை கி.பி. 1748- ஆம் ஆண்டில் கைப்பற்றினார். டில்லி நகரம் கி..பி. 1756 - இல் இவரால் சூறையாடப்பட்டது. 14 ஜனவரி 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை வென்றார்.

துவக்கக் கால வாழ்க்கை

[தொகு]

கி. பி. 1737-ல் பாரசீக மன்னன் நாதா்ஷா, ஆப்கானிசுதானத்தினை தன் ஆதிக்கத்திலிருந்த போது, ஏற்பட்ட கலகத்தை அடக்கியபொழுது, இவர் சிறை வைக்கப்பட்டான். ஆயினும் நாதா்ஷா, இவருடய திறமையையும் ஒழுக்கத்தையும் வியந்து, தனது முக்கிய இராணுவ அதிகாாியாக ஆக்கினார். இவர் 1745-ல் பஞ்சாப் ஆளுநராக இருந்த சக்காரியாகான் இறந்தபொழுது, பஞ்சாப் மீது படையெடுத்துப் பெசாவர், லாகூர், சிந்து ஆகியனவற்றைக் கைப்பற்றினார்.[12]

மன்னராகுதல்

[தொகு]

பாரசீகத்தின் நாதிர் ஷா கொலையுண்ட போது (கி.பி.1747) ஆப்கானிய தலைவர்கள் தங்களை விடுதலை பெற்றவர்களாக அறிவித்து அகமதுசாவை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதன்பிறகு ஆப்கானித்தானின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். இதன் பிறகு தனக்குத் தானே, 'துர்ர்-இ-துரான்', 'யுகத்தின் முத்து' என அறிவித்துக் கொண்டார். அதாவது பின்னர் அவர் தம் இனப் பெயரான 'அப்தாலி' என்பதை மாற்றி 'துரானி' என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டார். அதனால் அவரது வழித்தோன்றல்கள், 'அப்தலி' என்பதிலிருந்து, 'துரானி' என தங்களை அழைத்துக்கொண்டனர். 'துரானி' என்னும் சொல்லுக்கு முத்து என்று பொருள் ஆகும். இப்படியாக, துரானி வம்சம் தோன்றியது.

இந்திய பயணங்கள்

[தொகு]

அரசனான பிறகு, அகமத்ஷா அப்தலி கி. பி. 1748 முதல் 1767 வரையிலான இடைபட்ட காலத்தில் பல முறை இந்திய பயணங்களைச் செய்தார். இந்த இந்தியப் பயணத்தின் போது, ​​"இந்திய பேரரசின் பலவீனம், பேரரசருக்கான அயோக்கியத்தனம், அமைச்சர்களின் கவனக்குறைவு, பிரமாண்டங்கள் மத்தியில் அவர்களது வாழ்க்கைப் போக்கு போன்றவைகளைக் கொண்டு, இந்திய அரசியலை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். பல மதிப்பு மிக்க செல்வங்களை கொள்ளையடித்து, ஆப்கானில் இருந்த தனது அணியினருக்கு பரிசளித்தார். இதனால் இந்தியாவை குறித்த எண்ணங்கள், ஆப்கானில் மேலோங்கியது. இந்தியாவை நோக்கிய ஆப்கானிய படையெடுப்புக்கு இவரது செயல்கள் அடித்தளங்களாக அமைந்தன.

இந்திய படையெடுப்புகள்

[தொகு]

முதல் முறையாக, கி. பி. 1748 சனவரியில், கந்தஹார், காபூல், பெசாவர் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிறகு, அஹ்மத் ஷா அப்தாலி 12,000 அனுபவம் வாய்ந்த படையினருடன் இந்தியா மீது படையெடுத்தார். ஆனால், முகலாயப்பேரரசின் வாரிசும், இறந்த வாசிர் கமர்-உத்-தினின் மகனான மீர் மன்னும் இணைந்து, மன்பூர் போரில் அகமது சா அப்தலியைத் தோற்கடிக்கத்தனர். மிர் மன்னு, பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இரண்டாவது முறையாக, கி.பி 1750 இல், மிர் மன்னு குடியேறுவதற்கு முன் அகமத்சா அப்தாலி, பஞ்சாபின் மீது படையெடுத்து, அவரை தோற்கடித்து பஞ்சாபினைக் கைப்பற்றினார்.

மூன்றாவது முறையாக, கி.பி. 1751 ஆம் ஆண்டு திசம்பரில், அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்தார், அவர் மீண்டும் மிர் மன்னுவைத் தோற்கடித்து, காஷ்மீரைக் கைப்பற்றினார், மேலும், முகுல் பேரரசரை, சிர்ஹிந்த் வரையிலான, கிழக்கே உள்ள நாட்டை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் முகலாயப் பேரரசு மேலும் சிறிதானது. மிர் மன்னு இப்போது லாகூரில், அப்தாலி ஆளுநராகப் பொறுப்பேற்றார். பஞ்சாபின் உபரி வருவாயை வெற்றியாளருக்கு அனுப்புவதாகவும், அவரிடமிருந்து இறுதி உத்தரவு இல்லாமல் முக்கியமான விஷயங்களைப் பரிவர்த்தனை செய்வதில்லை என்றும் மிர் மன்னு உறுதியளித்தார்.

முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலம்கிர் I (கி.பி. 1754-1759) காலத்தில், அப்தாலி மற்றொரு இந்தியப் பயணத்திற்கு தலைமை தாங்கினார். நவம்பர், 1753 இல் மிர் மன்னுவின் மரணத்திற்குப் பிறகு, மே 1754 இல் மிர் மன்னு கைக்குழந்தை, எனவே, அடுத்து வாரிசான முகலானி பேகம் அரசி நடத்திய திறன்ற்ற ஆட்சியால், பஞ்சாப் மாகாணம் சீர்குலைந்து, சமூகக் குற்றங்கள் அதிகமானது. எனவே, அரசி உதவிக்காக டெல்லியின் சக்திவாய்ந்த இமாத்-உல்-முல்க் அழைத்தார். கி. பி. 1756 இல் பஞ்சாபை நோக்கி நாடாளும் பேராசையால் அணிவகுத்துச் சென்று, பஞ்சாபின் ஆளுநராக மிர்முனிம் (Mir Mun'im) என்பவரை நியமித்தார். இதனால் கோபமடைந்த அகமது அப்தாலி,

நான்காவது முறையாக, கி. பி. 1756 ஆம் ஆண்டு நவம்பரில், இந்தியாவின் மீது அதிக பலத்துடன் படையெடுத்து, 23 ஜனவரி 1757 அன்று டெல்லிக்கு வந்தடைந்தார். அந்த ஏகாதிபத்திய நகரம் கொள்ளையடித்தார். இமாத்-உல்-முல்க் சரணடைந்த்தால், படையெடுப்பாளரால் மன்னிக்கப்பட்டார். எனவே, முகுல் பேரரசரிடமிருந்து பஞ்சாப், காஷ்மீர், சிந்து மற்றும் சிர்ஹிந்த் மாவட்டத்தின் உயர் பதவிகளை தனது அணியினருக்காகப் பெற்றார். டெல்லிக்கு தெற்கே உள்ள, ஜாட் நாட்டைக் கொள்ளையடித்த பிறகு, 1757 ஏப்ரலில் அப்தாலி, அவரது மகன் திமூர் ஷாவை, லாகூரில் தனது வைசிராயாகவும், உடன் ஆப்கானிய தளபதிகளில் ஒருவரான சாகன்கானையும் விட்டுவிட்டு, இந்தியாவிலிருந்து ஏராளமான கொள்ளை பொருட்களுடனும், பல சிறைபிடிக்கப்பட்டவர்களுடனும், ஆப்கான் சென்றார். இவன் நான்காம் முறை படையெடுத்த போது, மதுரா, ஆக்ரா முதலிய இடங்களில் செய்த சேதங்கள் அளவிலடங்காது என வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

கி. பி. 1757 ஆம் ஆண்டு மே முதல் ஏப்ரல் 1758 வரை, தைமூர் ஷாவின் நிருவாகம் முற்றிலும் சட்டமற்ற, ஒழுங்கற்ற காலமாக இருந்தது. சீக்கிய சமூகம், அதன் தலைவர்களில் ஒருவர் மீது நடத்திய தவறான நடத்தையால் கோபமடைந்தது. பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும், கிளர்ச்சிகள் எழுந்தன.

கி. பி. 1761-ல் முன்றாம் பானிப்பட் போரில், மகாராட்டிர்ரை வென்றான். அதுவே அவா்களுடைய வீழ்ச்சிக்கு வழி கோலியதாகும். டெல்லி மொகலாய சக்கரவா்த்தியான முகம்மதுஷாவின் பதினேழு வயது மகளான அசரத் பேகம் என்பவளை வற்புறுத்தி மணந்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. சீக்கியர்களின் விடுதலை எழுச்சிக்கு இவர் அடிகோலினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khān, Tahmās (1967). Tahmas Nama, the Autobiography of a Slave (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 7. When Ahmad Shah had, on the death of Nadir Shah declared his independence at Quandahar (June 1747)...
  2. 2.0 2.1 Nejatie, Sajjad (2017). The Pearl of Pearls: The Abdālī-Durrānī Confederacy and Its Transformation under Aḥmad Shāh, Durr-i Durrān (PhD). University of Toronto.
  3. Nejatie, Sajjad (2017). The Pearl of Pearls: The Abdālī-Durrānī Confederacy and Its Transformation under Aḥmad Shāh, Durr-i Durrān (PhD). University of Toronto. p. 293. The fact that numerous sources composed in the ruler's lifetime consistently connect him in his youth to Herat justifies the stance of Ghubār and others that Aḥmad Shāh was, in fact, born in the Herat region, around the time his father passed away and when the Abdālī leadership still exercised authority over the province.
  4. Hanifi, Shah Mahmoud (2008). Connecting Histories in Afghanistan: Market Relations and State Formation on a Colonial Frontier. Stanford, California: Stanford University Press. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0804777773. Ahmad Shah (ruled 1747–72), the ephemeral empire's founder, was born in Multan in 1722.
  5. வார்ப்புரு:EI3
  6. Dalrymple, William (2013). Return of a King: The battle for Afghanistan. Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1408818305. Ahmad Shah Abdali (1722–72): Born in Multan, Ahmad Shah rose to power in the service of the Persian warlord Nadir Shah.
  7. "Afghan first lady in shadow of 1920s queen?". October 1, 2014 – via www.aljazeera.com.
  8. "Aḥmad Shah Durrānī". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் Online Version. 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  9. "Ahmad Shah and the Durrani Empire". Library of Congress Country Studies on ஆப்கானித்தான். 1997. பார்க்கப்பட்ட நாள் 2010-09-23.
  10. பிரெட்ரிக் எங்கெல்சு (1857). "Afghanistan". Andy Blunden. The New American Cyclopaedia, Vol. I. பார்க்கப்பட்ட நாள் 2010-09-23.
  11. Clements, Frank (2003). Conflict in Afghanistan: a historical encyclopedia. ABC-CLIO. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781851094028. பார்க்கப்பட்ட நாள் 2010-09-23. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help); More than one of |pages= and |page= specified (help)
  12. https://web.archive.org/web/20070813210837/http://www.afghan-network.net/Culture/ahmadshah.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ஷா_துரானி&oldid=3857632" இலிருந்து மீள்விக்கப்பட்டது